எவரெஸ்ட் சிகரம் உயரம் அளவீடு:நேபாளம் சீனா ஒப்பந்தம்

Updated : அக் 14, 2019 | Added : அக் 14, 2019 | கருத்துகள் (6)
Advertisement

காத்மாண்டு: எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை அளவீடு செய்ய நேபாளம் சீனா இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.






இரண்டு நாள் சுற்றுப் பயணமாக கடந்த 11-ம் தேதி இந்தியா வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங் உலகப் புகழ் பெற்ற நகரமான மாமல்லபுரத்திற்கு வருகை தந்தார். சீன அதிபரும் பிரதமர் மோடியும் இருதரப்பு உறவு, சர்வதேச பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து சீன அதிபர் 12-ம் தேதி நேபாள நாட்டிற்கு சென்றார்.

அந்நாட்டின் பிரதமர் கேபிஷர்மா ஒலி மற்றும் சீன அதிபர் ஜிஜின்பிங்கும் பருவகால மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கூட்டாக ஒத்துழைப்பது என ஒப்பந்தம் மேற்கொண்டனர்.

இதன் ஒரு கட்டமாக இமயமலையில் அமைந்துள்ள எவரெஸ்ட் சிகரத்தின் தற்போதைய உயரத்தை அளவீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.





கடந்த 1954 ம் ஆண்டில் இந்தியா எடுத்த எவரெஸ்ட் சிகரத்தின் உயரமான 8,848 மீட்டர் என்பது தற்போது வரை ஏற்று கொள்ளப்பட்டு வந்துள்ளது. இதனிடையே கடந்த 2015 ல் நேபாள நாட்டில் நிகழ்ந்த பயங்கர பூகம்பத்திற்கு பின்னர் சிகரத்தின் உயரம் குறித்து தி இமயமலை டைம்ஸ் என்ற பத்திரிகை செய்தி ஒன்றை வெளியிட்டது. தொடர்ந்து 2017 ம் ஆண்டில் நேபாள அரசு அந்நாட்டின் சர்வே துறை சார்பில் எவரெஸ்ட் சிகரத்தை அளவீடு செய்ய குழு ஒன்றை அமைத்தது.இக்குழு அடுத்த ஆண்டு இறுதிக்குள் புதிய அளவீடு குறித்த தகவல்களை தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் குறித்து இதுநாள் வரையில் இந்தியாவின் கணக்கீடை ஏற்று வந்த நிலையில் தற்போது சீனாவும் நேபாளமும் இணைந்து அதன் உயரத்தை மீண்டும் அளவிடும் என அறிக்கை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-அக்-201909:13:23 IST Report Abuse
மதுவந்தி எந்த தொழில் நுட்பமும் இன்றி நம்மை இயற்கை அளவிடும்.
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
14-அக்-201905:48:45 IST Report Abuse
 nicolethomson இது நாம் எவ்ளோ தூரம் பின்தங்கி விட்டோம் என்றே காட்டுது
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
14-அக்-201908:24:58 IST Report Abuse
Nallavan Nallavanதொழில்நுட்பம் நம்மிடமும் இருக்கிறது.. நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பம் காரணமாக எவரெஸ்ட்டின் உயரம் குறைந்திருக்கும் என்று நமது தொழில்நுட்ப வல்லுனர்களும் அச்சமயத்தில் கருத்துத் தெரிவித்திருந்தனர்... ஆனால் வர்த்தகத்தை முன்னிட்டு கிளையண்ட் -ஐ மடக்கிப்போடுவதில் சீனா கில்லாடி ..... இந்தியா ஏனோ இதில் ஆர்வம் காட்டவில்லை...... மேலும் நேபாளத்தில் அமைந்துள்ளள மாவோயிஸ்ட் அரசு சீனாவுடன் நெருக்கம் காட்டி வருவதை நீங்கள் அறிந்திருக்கலாம் ........
Rate this:
Share this comment
K.Ravi - Bengaluru,இந்தியா
14-அக்-201910:36:28 IST Report Abuse
K.Raviநேபாள அரசு இந்தியாவிடம் இப்பொழுது உறவு பாராட்டுவதை ஏனோ நிறுத்திக் கொண்டுள்ளது அவர்களுக்கு வேண்டுமானால் நல்லதாகப்படலாம், வெகு விரைவில் நேபாளம் சீனாவின் ஒரு அங்கமாக மாறுவது திண்ணம்....
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
14-அக்-201912:55:49 IST Report Abuse
தமிழ்வேல் இனி, பொருளாதாரச் சரிவு நிமிர்ந்துடும்....
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
14-அக்-201912:57:25 IST Report Abuse
தமிழ்வேல் ரவி, நேப்பாளம் சீனாவின் கையில் வந்துவிட்டது. (நம்மால் செய்ய இயலாத) அனைத்து உதவிகளும் சீனாதான் செய்து வருகின்றது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X