அன்னுார்;பாரதிய ஜனதா ஒன்றிய, நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அன்னுாரில் நேற்று நடந்தது. இதில், ஒன்றிய தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார்.கூட்டத்தில், மாநில செயலாளர் செல்வகுமார் கிளை தேர்தல் தொடர்பாக அறிவுரை வழங்கினார். மகாத்மா காந்தியின், 150வது பிறந்த நாளை முன்னிட்டு, வரும், 18ம் தேதி அன்னுாரில் பாதயாத்திரை நடத்துதல், திருப்பூர் நான்காம் குடிநீர் திட்டத்தில் அன்னுார் ஒன்றியத்திலுள்ள ஊராட்சிகளுக்கு குடிநீர் ஒதுக்க அரசை கோருதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினர் நந்தகுமார், நகர தலைவர் ராஜராஜசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.