பொது செய்தி

இந்தியா

12 ஆண்டுகால சேமிப்பு: தாய்க்கு மகன் பிரிட்ஜ் பரிசு

Updated : அக் 14, 2019 | Added : அக் 14, 2019 | கருத்துகள் (10)
Advertisement

ஜெய்ப்பூர்: 12 ஆண்டுகால சேமிப்பு காசுகள் மூலமாக தன்னுடைய தாய்க்கு பிறந்தநாள் பரிசாக 35கிலோ எடை கொண்ட பிரிட்ஜ் வாங்கி தந்து அசத்தி உள்ளார் 17 வயது மகன்.






ராஜஸ்தான் மாநிலம் ஷஹாரன் நகரை சேர்ந்த 17 வயது மாணவன் ராம்ஷிங் இவர் தன்னுடைய 12 ஆண்டுகால சேமிப்பு பணத்தை கொண்டு தன்னுடைய தாயின் பிறந்த நாள் பரிசாக பிரிட்ஜ் வாங்கி பரிசளித்துள்ளார். பண பற்றாக்குறையை நிவர்த்தி செய்த மாணவரின் நேர்மையை பாராட்டி கடை உரிமையாளர் ரூ.2 ஆயிரம் தள்ளுபடி செய்துள்ளார்.





இது குறித்து மாணவர் ராம்ஷிங் கூறியதாவது: எங்கள் வீட்டில் இருந்த பழைய பிரிட்ஜ் பழுதாகி விட்டது. இதனை மாற்ற வேண்டும் என தாய் பப்பு தேவி கூறிவந்தார். இதனிடையே தாய் பிறந்தநாள் அன்று புதிய பிரிட்ஜ் வாங்கி தர வேண்டும் என முடிவு செய்தேன். பிரிட்ஜ் க்கு தள்ளுபடி செய்திருப்பதை அறிந்து நான் 12 ஆண்டுகாலம் சேமித்த பணத்தை எடுத்து சாக்குமூடையில் கட்டி கடைக்கு எடுத்து சென்றேன் .மொத்த தொகை 13,500 இருந்தது. இருப்பினும் எனது ஆர்வத்தை புரிந்து கொண்டு தேவைப்படும் மீதி பணம் 2 ஆயிரம் பணத்தை கடை உரிமையாளர் ஹரிகிஷன் காத்ரி தள்ளுபடி செய்து உதவி செய்தார் என கூறினார்.
இது குறித்து மாணவரின் தாயார் பப்பு தேவி கூறுகையில், என் மகன் எனக்கு இதுபோன்ற மறக்கமுடியாத பரிசை வழங்கியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். என் மகன் என் விருப்பங்களைப் பற்றி நினைத்ததில் பெருமிதம் கொள்கிறேன். கடவுள் என் மகனை போன்ற குழந்தைகளை அனைவருக்கும் கொடுக்கட்டும் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar Rengarajan - Trichy,இந்தியா
14-அக்-201918:03:11 IST Report Abuse
Sridhar Rengarajan புள்ளன்னா இப்புடி இருக்கணும். இங்கிட்டு ரெண்டு பயலுவ புடுங்கி திங்குறானுவோ. முடியல.
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
14-அக்-201917:00:22 IST Report Abuse
Natarajan Ramanathan இங்கே சம்பந்தமே இல்லாமல் இருந்தும் 2000 ரூபாய் விலை குறைத்து கொடுத்த வியாபாரியும் பாராட்டப்பட வேண்டியவர்.
Rate this:
Share this comment
Cancel
Sitaraman Munisamy - SALEM,இந்தியா
14-அக்-201910:16:19 IST Report Abuse
Sitaraman Munisamy இங்கே பிரிட்ஜ் என்றால் என்னவென்றே தெரியாத பல குடும்பங்கள் உள்ளன. தாய்க்காக இப்போது செய்த நல்ல காரியத்தை திருமணம் முடிந்தபின்பும் தொடர வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X