பொது செய்தி

இந்தியா

நானும் அகதி தான் : தலாய் லாமா

Updated : அக் 14, 2019 | Added : அக் 14, 2019 | கருத்துகள் (10)
Share
Advertisement

உனா : "ஒருவகையில் நானும் அகதி தான். இந்தியாவில் நாங்கள் சுதந்திரத்தை அனுபவிக்கிறோம் " என திபெத்திய புத்த மத தலைவர் தலாய் லாமா தெரிவித்துள்ளார்.



latest tamil news


இந்தியா மற்றும் திபெத்தில் இருக்கும் சுதந்திரம் பற்றி தலாய் லாமாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இமாச்சல பிரதேசம் உனா பகுதியில் செய்தியாளர்களிடம் பதிலளித்த அவர், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் நாங்கள் சுதந்திரத்தை அனுபவித்து வருகிறோம். ஒரு வகையில் நானும் அகதி தான். ஆனால் இந்தியாவில் சுதந்திரத்தை அனுபவிக்கிறேன் என்றார்.


latest tamil news


திபெத்தில் சுதந்திர பற்றி கேள்விக்கு பதிலளித்த அவர், திபெத்தில் சுதந்திரம் என்பது 1974 ல் இருந்து தான். அதற்கு முன் ஐ.நா.,விடம் நாங்கள் கோரிக்கை வைத்திருந்தோம். அப்போதைய இந்திய பிரதமர் நேரு அறிவுரை வழங்கிய பிறகும் ஐ.நா., அதிகம் ஏதும் செய்யவில்லை. அதற்கு பிறகு சீனர்களை அனுகி, பேச்சுவார்த்தை நடத்தினோம். 1974 ல் சுதந்திரம் கேட்க வேண்டும் என நாங்கள் நினைக்கவில்லை.

சீனாவில் மக்கள் குடியரசு இருப்பது போல் இருக்க வேண்டும் எனவும், எங்களின் சொந்த கலாச்சாரத்தை நிலை நிறுத்துவதற்கான உரிமையை கேட்க வேண்டும் என நினைத்தோம். 2001 முதல் நான் முற்றிலுமாக ஓய்வுபெற்றேன். தேர்வு செய்யப்பட்ட அரசியல் தலைமை முழு பொறுப்பையும் எடுத்துக் கொண்டது. ஜனநாயகத்தை எப்படி கடைபிடிப்பது என சீனர்களுக்கு நம்மால் கற்றுத்தர முடியும் என அப்போது நினைத்தேன் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muraleedharan.M - Chennai,இந்தியா
15-அக்-201907:42:06 IST Report Abuse
Muraleedharan.M நேருவின் குடும்பத்தால் இந்தியாவிற்கு எதிரி சம்பாதித்துள்ளனர். இந்தியாவிற்கு நன்மை ஒன்றுமில்லை. அது மாதிரி இந்திரா காந்தி பாகிஸ்தானியிடமிருந்து பங்களதேஷை பிரித்து கெட்ட பெயர் எடுத்துள்ளார்.
Rate this:
Cancel
14-அக்-201912:21:31 IST Report Abuse
ஆப்பு இதுவும் நேரு செஞ்ச சதி
Rate this:
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
14-அக்-201911:57:55 IST Report Abuse
 nicolethomson உங்களின் போராட்டமான வாழ்க்கை மண் ஆசை கொண்டோருக்கு கண்திறக்குமா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X