பொது செய்தி

இந்தியா

ஊழல் அதிகாரியின் இரட்டை வாழ்க்கை அம்பலம்

Updated : அக் 14, 2019 | Added : அக் 14, 2019 | கருத்துகள் (44)
Advertisement

மும்பை : பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கிகளில் ரூ.4355கோடி ஊழல் செய்த குற்றத்திற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்ட மேலாண் இயக்குனர் ஜோய் தாமஸ் (69), தனது பெண் உதவியாளரை திருமணம் செய்து கொள்வதற்காக இஸ்லாம் மதத்திற்கு மாறி, அதை மறைத்து வாழ்ந்து வந்த இரட்டை வாழ்க்கை வாழ்ந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிர கூட்டுறவு வங்கிகளில் ரூ.4355 கோடி ஊழல் செய்ததற்காக ஜோய் தாமஸ் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இதை அடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சிறையிலடைக்கப்பட்டுள்ள தாமசிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, தனது பெண் உதவியாளரை திருமணம் செய்து கொள்வதற்காக 2005 ம் ஆண்டே தான் இஸ்லாம் மதத்திற்கு மாறி விட்டதாகவும், தனது உதவியாளர் பெயரில் புனேயில் 9 பிளாட்கள் வாங்கி இருப்பதாகவும் கூறி உள்ளார்.

இது பற்றி விசாரணை அதிகாரி கூறுகையில், தாமசிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி குடும்பம் உள்ளது. அதற்கு பிறகு பெண் உதவியாளருடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாக 2005 ல் அப்பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். அவரை துபாயில் குடி வைத்துள்ளார். பின்னர் இருவரும் புனேயில் குடியேறி உள்ளனர். தாமஸ், ஜூனாய்டாக மாறி தான் உதவியாளரை திருமணம் செய்து கொண்டுள்ளார். மும்பையில் முதல் மனைவியுடனும், புனேயில் உதவியாளருடனும் வாழ்ந்து வந்துள்ளார். புனேயில் ரூ.4 கோடிக்கு 2வது மனைவி பெயரில் சொத்து வாங்கி உள்ளார்.
தாமஸ், தான் இஸ்லாம் மதத்திற்கு மாறிய போது வைத்துக் கொண்ட ஜூனாய்ட் என்ற பெயரை நிதி பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களிலும் குறிப்பிடவில்லை. இஸ்லாம் மதத்திற்கு மாறிய பிறகும் ஜோய் தாமசாகவே வாழ்ந்து வந்துள்ளார். அதாவது தனது வசதிக்காக இவர் மதம் மாறி உள்ளார் என்றார்.

தாமசிற்கு மும்பை மற்றும் தானேயில் 4 பிளாட்கள் இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவற்றில் ஒன்று, தனது முதல் மனைவியின் மகன் பெயரில் பதிவாகி உள்ளது. தாமசும், அவரது 2வது மனைவியும் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். அந்த பெண்ணிற்கு தற்போது 11 வயது. இது தவிர இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகனும் உள்ளான். தாமசின் 2வது மனைவி சாக்லேட்கள் தயாரித்து, விற்பனை செய்வதுடன், துணிக்கடையும் வைத்துள்ளார். அதன் மூலம் புனேயில் உள்ள சொத்துக்களை வாங்கி உள்ளார். போலீஸ் விசாரணையில் தாமசின் இரட்டை வாழ்க்கை அம்பலமானதை அடுத்து அவரின் முதல் மனைவி, தற்போது விவாகரத்து கேட்டு கோர்ட்டை நாடி உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajaiah Samuel Muthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
15-அக்-201915:51:37 IST Report Abuse
Rajaiah Samuel Muthiahraj பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான் அநியாயத்தை திரவியங்கள் ஒன்றுக்கும் உதவாது தனக்குத்தானே குழியை வெட்டிக்கொண்டார் மறைக்கக் கூடிய இரகசியம் எதுவும் இல்லை
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
14-அக்-201917:25:42 IST Report Abuse
Malick Raja ரூ 4365.00.கோடிரூபாய்கள் ஊழல் செய்யும் நிலைக்கு ஒரு ஆள் மட்டும் காரணமாக இருக்க வாய்ப்பில்லை .பொதுமக்களின் பணம் கையாடலென்பது சர்வசாதாரணமாகிவிட்டது காண்காணிப்பு திறன் குறைவுதான் காரணம் .. அப்படின்னா ஒரு கூட்டமே இதை செய்துள்ளது என்பது உண்மை .. இந்த ஆளுக்கு 69.வயது இன்றோ நாளையோ என்று நிலை ..தட்டினால் பட்டென்று போய்விடும் உயிர் .. ஆயிரக்கணக்காண கோடிரூபாய்கள் ஆட்டையை போடுமளவுக்கு சும்மா ஒரு ஆளுடனா போகும் .. உண்மை வெளிவரட்டும் ...
Rate this:
Share this comment
THENNAVAN - CHENNAI,இந்தியா
15-அக்-201914:46:21 IST Report Abuse
THENNAVANஅப்படி அவர்மீது குற்றம் இல்லை அந்த 4356 கோடிகள் கடன் கொடுத்ததில் இவர் தகுதி இல்லாதவர்களுக்கு கொடுத்து அதன்மூலம் பெட்ரா லஞ்சப்பணம் பெற்றவகைல இவரது குற்றம் அமைந்துள்ளது .மாலிக் ராஜா .இன்னுமா கண்விழிக்காமல் பொலம்புகிறீர்கள்....
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
14-அக்-201916:44:38 IST Report Abuse
Endrum Indian ஆமா ரூ 4355 கோடி ஊழல் என்றால் இவை அனைத்தும் இவனுக்கேவா சொந்தம் இல்லை அதில் வரும் கமிஷன் மட்டும் தானா??ரூ. 4355 கோடி சொந்தம் என்றால் இந்த நாட்டில் இருக்க அவசியம் இல்லையே அப்படியே எவ்வளவோ குட்டி நாடுகள் இருக்கின்றதே அங்கே போயி அப்படியே செட்டில் ஆகிவிடவேண்டியது தானே??? இதில் கூட ஒன்று தெரிகின்றது இவன் இப்பொழுது கேரளாவில் நடக்கும் லவ் ஜிகாத்தின் முன்னோடி போல முஸ்லிம் பெண்ணை அல்லது ஆணை திருமணம் செய்து கொண்டால் கூட முஸ்லிமாக தான் மாறவேண்டும் என்று எழுதப்படாத சட்டமா?? எனக்கு எப்போவும் இந்த சந்தேகம் பல் வருடங்களாக இருக்கின்றது??? காலை முதல் இரவு வரியா 3 இட்லி காலையில், கொஞ்சம் சாதம் / ரெண்டு சப்பாத்தி மதியம், கொஞ்சம் சோறு / ரெண்டு சப்பாத்தி இரவில் இவ்வளவு தான் சாப்பிட முடியும் ரூ 10000 இருந்தாலும் ரூ 10000 கோடி இருந்தாலும், இதற்கு ஏன் இந்த வெறி கொண்ட அலப்பறை பல நூறு கோடிகள் சேர்க்க வேண்டுமென்று???
Rate this:
Share this comment
VELAN S - Chennai,இந்தியா
14-அக்-201923:36:59 IST Report Abuse
VELAN Sஅதிலல்லண்ணே , சாப்பாடை விடுங்க , நிறைய இப்படி பணம் இருந்தால் பல பெண்களுடன் உறவு வைத்து மன்மத வாழ்க்கை வாழலாமே , இன்னம் போக போக தான் தெரியும் , இவர் எத்தனை பெண்களுடன் உறவு வைத்திருந்தார் என்று ....
Rate this:
Share this comment
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
15-அக்-201904:34:47 IST Report Abuse
uthappaஅய்யகோ இவன் ஒரு ....இருக்க கூடாதா, ஊடகங்கள் ஒருமாதம் ஒட்டி இருக்குமே....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X