பொது செய்தி

இந்தியா

இந்திய அரசியலமைப்பிற்குள் வந்தது காஷ்மீர்

Updated : அக் 14, 2019 | Added : அக் 14, 2019 | கருத்துகள் (14)
Advertisement

அமிர்தசரஸ் : காஷ்மீர், முழுவதுமாக இந்திய அரசியலமைப்பின் கீழ் தற்போது வந்து விட்டதாக காஷ்மீர் கவர்னரின் ஆலோசகர் பரூக் கான் தெரிவித்துள்ளார்.





ஆக.,5 ம் தேதி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து காஷ்மீரில் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதுடன், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. தற்போது காஷ்மீரில் அமைதி நிலை திரும்பியதை அடுத்து படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்திக் கொள்ளப்பட்டன. இயல்பு நிலை திரும்பி, சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்திருப்பதால் நிறுத்தப்பட்டிருந்த மொபைல் மற்றும் இன்டர்நெட் சேவைகளும் மீண்டும் துவங்கப்பட்டன.




நிறுத்தப்பட்ட போஸ்ட்பெய்டு மொபைல் சேவை இன்று (அக்.,14) பகல் 12 மணி முதல் அனைத்து பகுதிகளிலும் மீண்டும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள அனைத்து 10 மாவட்டங்களிலும் இச்சேவை இன்று மீண்டும் கொண்டு வரப்பட உள்ளதாக காஷ்மீர் தலைமைச் செயலாளர் ரோஹித் கன்சல் அறிவித்திருந்தார். இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் செய்தியாளர்களிடம் பேசிய காஷ்மீர் கவர்னரின் ஆலோசகர் பரூக் கான், தற்போது காஷ்மீர், முழுவதுமாக இந்திய அரசியலமைப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. நாட்டின் பிற பகுதிகளில் வசிக்கும் அனைத்து சிறுபான்மையின மக்களுக்கு அரசியலமைப்பு சட்டத்தின்படி அளிக்கப்பட்டு வரும் சிறுபான்மையினர் அந்தஸ்து, இனி காஷ்மீர் மக்களுக்கும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
14-அக்-201916:50:16 IST Report Abuse
Endrum Indian அய்யயோ இது அநியாயம் அக்கிரமம் - இப்படிக்கு பப்பு தி கிரேட் முதல் சுடலை மாயாண்டி வரை
Rate this:
Share this comment
Cancel
mayavan - Chennai,இந்தியா
14-அக்-201912:31:14 IST Report Abuse
mayavan 70 ஆண்டுகளாக ஏற்பட்ட அழிவை ஓரிரு மாதங்களில் சரி செய்யமுடியாது அதே மாதிரி சட்டம் 370 மற்றும் 35A பிரிவுகள் மீண்டும் வராது மற்றைய இந்தியர்கள் காஷ்மீருக்கு மட்டும் விதி விலக்கா
Rate this:
Share this comment
Cancel
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
14-அக்-201911:50:25 IST Report Abuse
Yaro Oruvan சரி.. அதுக்கு என்ன இப்பொ? பாகிஸ்தானிடம் இருக்கும் காஷ்மீர்னு நீ எழுதும்போதே தெரியுது நீ யாருன்னு.. அது POK அதாவது Pakisthan Occupied Kashmir.. பாகிஸ்தானிடம் இருக்கும் காஷ்மீர் அல்ல.. காஷ்மீர் இந்தியாவின் அங்கம்.. அங்கு அனைத்து இந்தியர்களுக்கும் சம உரிமை உண்டு.. நமக்குத்தான் நாட்டை விட மதம் முக்கியமாச்சே... கிரிக்கெட்ல இந்தியாவை பாகிஸ்தான் ஜெயிச்சப்போ இந்தியாவுக்குள்ள இருந்துகினு சுவீட் கொடுத்து கொண்டாடின கும்பல்கிட்ட வேறென்ன எதிர்பாக்க முடியும் ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X