பொது செய்தி

இந்தியா

தமிழகத்தில் 5 நாள் கனமழை வாய்ப்பு

Updated : அக் 14, 2019 | Added : அக் 14, 2019
Share
Advertisement

புதுடில்லி: தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



latest tamil news


தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையை தொடர்ந்து, வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கிறது. மேலும், பல்வேறு பகுதிகளில் வெப்பசலனம் காரணமாக அவ்வபோது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை அக்., 3வது வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்ப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதற்கான அறிகுறியாக நேற்று (அக்., 13) சில மாவட்டங்களில் கனமழை பெய்ய தொடங்கியது.


latest tamil news


இதனையடுத்து, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இன்று (அக்., 14) முதல் அக்., 18 வரையிலான 5 நாட்களுக்கு வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளதால், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X