அரசியல் செய்தி

தமிழ்நாடு

ராதாபுரம்: திமுக.,வின் கோரிக்கை நிராகரிப்பு

Added : அக் 14, 2019 | கருத்துகள் (5)
Advertisement
ராதாபுரம், மறு ஓட்டு எண்ணிக்கை, திமுக, அதிமுக, சுப்ரீம் கோர்ட்

சென்னை: ராதாபுரம் தொகுதியில் 2016ல் நடந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை, திமுக.,வின் அப்பாவுவை 49 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஓட்டு எண்ணிக்கையில் முறைக்கேடு நடந்ததாக கூறி மறுஓட்டு எண்ணிக்கை நடத்துமாறு அப்பாவு தரப்பில் சென்னை ஐகோர்ட்டில்வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து, 203 தபால் ஓட்டுகள் மற்றும் 19, 20,21 ஆகிய கடைசி சுற்றுக்கான ஓட்டு எண்ணிக்கையும், அக்., 04ல் ஐகோர்ட் வளாகத்தின் ஒரு அறையில் நடந்தது.

அதே நாளில் மறுஓட்டு எண்ணிக்கைக்கு தடை விதிக்க கோரி இன்பதுரை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு அளிக்கப்பட்டது. இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட், அக்., 23ம் தேதி வரை ஓட்டு எண்ணிக்கையின் முடிவை வெளியிட இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில் திமுக., சார்பில் அப்பாவு தொடர்ந்த வழக்கில், இடைக்கால தடையை நீக்கி, விரைவில் ஓட்டு எண்ணிக்கை முடிவை வெளியிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், வழக்கு பட்டியலிட்ட பின்னர் தான் விசாரிக்கப்படும் எனக் கூறினர்

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
14-அக்-201917:22:47 IST Report Abuse
இந்தியன் kumar இரு கட்சியினரும் நிராகரிக்கப்பட வேண்டியவர்கள் , இவர்களை நிராகரித்தால் தான் தமிழகம் உருப்படும் அதட்கு முதலில் மக்கள் உருப்பட வேண்டும்.
Rate this:
Share this comment
Ray - Chennai,இந்தியா
17-அக்-201905:51:49 IST Report Abuse
Rayஎன்னே நடுநிலைமை இருவரும் வேண்டாம் சரி வேறு யாரை ஆதரிக்கலாம்? காங்கிரஸ் கம்யூனிஸ்ட் பாமக மதிமுக தேமுதிக அமமுக ரஜினி கமல் சீமான்? இதில் விட்டுப் போனவர்கள் கோவிச்சுக்கப் படாது இதோ வோட்டு உங்கள் கையில் யாருக்கு போடுவீர்கள்?...
Rate this:
Share this comment
Cancel
Santhosh Gopal - Vellore,இந்தியா
14-அக்-201912:50:58 IST Report Abuse
Santhosh Gopal இடைத்தேர்தலுக்குள் தடையை நீக்கி முடிவை வெளியிட வேண்டும் அப்போது தான் ஆளும் கட்சிக்கு பின்னடைவு ஏற்படும் என்று கணக்கு. இப்போது உள்ள சூழ்நிலை யில் விக்கிரவாண்டி நாங்குநேரியில் வெற்றி பெற வாய்ப்பு இல்லை, ஏற்கனவே வேலூர் மக்கள் கொடுத்த அடி மறக்க முடியவில்லை.. ஜெயிச்சதே நாக்கு தள்ளிவிட்டது, இந்த தொகுதிகளிலும் வேலூர் மக்கள் போல் சொதப்பிவிட்டால் கட்சி கல கலத்துவிடும். அதனால் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு என்று கூறி பார்த்தார், வேலைக்கு ஆகவில்லை அதனால் ராதாபுரம் தீர்ப்பு உதவுமா என்று பார்கிறார்கள். அதனால் தடையை நீக்க கோரிக்கை. அப்பாவு 3 வருடமா காத்திருந்தவர் 9 நாள் காத்திருக்க முடியாதா? இதன் பின்னணியில் இரண்டு இடைத்தேர்தல் இருக்கிறது. பயம் பயம் வேறு ஒன்றும் இல்லை... அதனால் இடைத்தேர்தலுக்குள் தடையை நீக்கிவிட வேண்டும்...
Rate this:
Share this comment
puratchiyalan - Nagercoil,இந்தியா
14-அக்-201913:14:01 IST Report Abuse
puratchiyalanஅதிமுக ஒன்னும் யோக்யம் இல்ல.....
Rate this:
Share this comment
Ray - Chennai,இந்தியா
17-அக்-201905:55:43 IST Report Abuse
Rayசந்தோஷ் அதே பயம்தான் உச்ச நீதிமன்றத்துக்கு ஓடியது ஸ்டே வாங்கியது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X