அரசியல் செய்தி

தமிழ்நாடு

சீமான் வாய் சவடால்: கைதாவாரா?

Updated : அக் 15, 2019 | Added : அக் 14, 2019 | கருத்துகள் (277)
Advertisement

விக்கிரவாண்டி : முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது





விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், முன்னாள் பிரதமர் ராஜீவை நாங்கள் தான் படுகொலை செய்து புதைத்தோம் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக சீமான் மீது விக்கிரவாண்டி போலீசார் இரு வழக்குகள் பதிவு செய்யதுள்ளனர்

விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. அவர் பேசுகையில், "நாங்கதான் ராஜிவை கொன்றோம். ஒருநாள் வரலாறு திரும்ப எழுதப்படும். அப்போது, இந்திய ராணுவத்தை அமைதி படை என்ற பெயரில் அனுப்பி தமிழின மக்களை அழித்தொழித்த, தமிழின துரோகி ராஜிவை தமிழ் மண்ணிலேயே கொன்று புதைத்தோம் என வரலாறு எழுதப்படும்" என பேசினார்.




ஒரு பெரிய அரசியல் தலைவர் கொலையை நியாயப்படுத்தி சீமான் பேசிய பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. சீமானைத் தேசதுரோக வழக்கில் கைது செய்ய வேண்டும் எனவும், நாம் தமிழர் கட்சியின் அங்கிகாரததை நீக்க வேண்டும் எனவும் கூறி தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி அறிக்கை வெளியிட்டார்.
சீமானின் பேச்சு தொடர்பாக காங்., சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து சீமான் மீது விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று, வேலூர் மாவட்டத்திலும் காங்., சார்பில் உமராபாத் போலீஸ் ஸ்டேசனில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.


சீமான் பிடிவாதம்

இந்த சர்ச்சை பேச்சு தொடர்பாக சீமான் கூறியதாவது: இந்த விஷயத்தில் வழக்கு பதிய எதுவுமில்லை, இதுபோன்ற எத்தனையோ வழக்குகளை சந்தித்துள்ளேன். காங்., கட்சியினர் கொந்தளித்து வழக்கு பதிவதால் மகிழ்ச்சி அடைகிறேன். விடுதலை புலிகள் இயக்கத்தை அழித்து விட்டோம் என சொல்லிக் கொண்டு, இன்னும் ஏன் அந்த இயக்கத்தின் மீது தடை விதித்துள்ளீர்கள். பிரபாகரனை முன்னிறுத்தி தான் அரசியல் செய்வோம். ஒருநாள் பிரபாகரன் படத்தை பச்சை குத்திக்கொண்டு பாராளுமன்றத்தின் உள்ளே செல்வோம். ராஜிவ் குறித்து நான் பேசியதை திரும்ப பெற மாட்டேன். இவ்வாறு சீமான் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (277)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murthy - Bangalore,இந்தியா
19-அக்-201914:37:17 IST Report Abuse
Murthy சீமான் பேசுவதை குறை சொல்லுபவர்கள்
Rate this:
Share this comment
Cancel
Murthy - Bangalore,இந்தியா
19-அக்-201913:47:37 IST Report Abuse
Murthy ஏற்கனேவே திராவிடர் கருணாநிதி தேசத்துரோக வழக்கில் சீமானை கைதுசெய்து அவமானப்பட்டு போய்சேர்த்துட்டார், இனி எவனாவது தெலுங்கு திராவிடன் வந்துதான் கைது செய்யவேண்டும்....
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
19-அக்-201911:02:50 IST Report Abuse
Malick Raja அநீதி வென்றதில்லை .. அக்கிரமம் நிலைத்ததில்லை .. அராஜகம் தொடர்வதில்லை . அதுபோல எல்லாம் ஆடியடங்கும் நேரத்தில் உணர்த்தப்படும் . அதுவரையில் மட்டுமே அங்கலாய்ப்புக்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X