ஜாக்சனின் புகைப்படக் கண்காட்சி| chennai | Dinamalar

ஜாக்சனின் புகைப்படக் கண்காட்சி

Updated : அக் 14, 2019 | Added : அக் 14, 2019
Sharelatest tamil newsசென்னை பத்திரிகயைாளர் மன்றத்தில் முதல் முறையாக பத்திரிகை புகைப்படக்கலைஞர் ஜாக்சன் ஹெர்பியின் புகைப்படக்கண்காட்சி நடந்து வருகிறது.


latest tamil news


இன் று இரவு 8 மணியுடன் நிறைவு பெறும் இந்தக் கண்காட்சிக்கான அனுமதி இலவசம். பொதுமக்கள் பத்திரிகை புகைப்பட ஆர்வலர்கள் அனைவருமே நேரம் ஒதுக்கி இந்த புகைப்படக்கண்காட்சியை காணவேண்டும்.


latest tamil news


Advertisement


காரணம் கன்னியாகுமரியைப் புரட்டி போட்ட ஒக்கி புயலின் கோரத்தை இவர் மூலமாகத்தான் உலகமே பார்த்தது. உலகம் முழுவதிலும் இருந்து வெளியாகும் பல முன்னனி நாளிதழ்களில் வெளியான இவரது படங்களை ஒரே இடத்தில் பார்ப்பதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.


latest tamil news


ஜாக்சன் தற்போது நாகர்கோவிலில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகையின் புகைப்படக்கலைஞராகவும் மற்றும் புகைப்பட ஏஜன்சிக்கான புகைப்படக்கலைஞராகவும் உள்ளார்.


latest tamil news


புகைப்படம் எடுப்பதில் அதிகம் ஆர்வம் கொண்டவர் எவ்வளவு உயரமான இடமாக இருந்தாலும் விறுவிறுவென ஏறி ‛ஆங்கிள்' பார்க்கக் கூடியவர் கடல் அலைகளுக்கு நடுவே நின்றும் படமெடுக்க தயங்காதவர் ஆபத்தான இடங்களில் துணிந்து படமெடுப்பவர் என்பதெல்லாம் ஜாக்சனின் அடையாளங்கள்.


latest tamil newsதான் எடுத்த ஆயிரக்கணக்கான படங்களில் இருந்து தேர்வு செய்த 210 படங்களை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் கண்காட்சியாக வைத்துள்ளார்.


latest tamil news


கண்காட்சியை நேற்று பதிவுத்துறை ஐஜியான ஜோதிநிர்மலாசாமி துவக்கிவைத்தார் தினமுரசு ஆசிரியர் சங்கர்,மன்றத்தின் இணை செயலாளர் பாரதி தமிழன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


latest tamil news


கன்னியாகுமரியி்ன் பல்வேறு தோற்றங்கள்,கீழடி அகழ்வராய்ச்சி தடங்கள்,குலசை தசரா விழா உள்ளீட்ட பல்வேறு அம்சங்கள் புகைப்பட கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.அவசியம் கண்காட்சியை பாருங்கள் புகைப்பக்கலைஞர் ஜாக்சனை வாழ்த்துங்கள் அவரது எண்:9123553575.
-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X