கார்த்தியின் போலி போட்டோ: நெட்டிசன்கள் காட்டம்| Dinamalar

கார்த்தியின் போலி போட்டோ: நெட்டிசன்கள் காட்டம்

Updated : அக் 14, 2019 | Added : அக் 14, 2019 | கருத்துகள் (109)

புதுடில்லி : மாமல்லபுரம் கடற்கரையை பிரதமர் மோடி சுத்தம் செய்ததை விமர்சித்து காங்., எம்பி கார்த்தி சிதம்பரம் டுவிட்டரில் பகிர்ந்த போட்டோ, போலி என்பதும், 14 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்காட்லாந்தில் எடுக்கப்பட்டது என்பதும் தெரியவந்துள்ளது.






கடந்த வாரம் மோடி - ஜின்பிங் சந்திப்பு சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்றது. அப்போது கோவளத்தில் தங்கிய மோடி, அதிகாலையில் மாமல்லபுரம் கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்டார்.
அப்போது கடற்கரையில் போடப்பட்டிருந்த குப்பைகளை மோடி தனது கைகளால் அப்புறப்படுத்தி சுத்தம் செய்த வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில் மோடி சுத்தம் செய்யும் போது சூட்டிங் நடைபெற்றது போன்று கேமராக்கள், கேமரா மேன்கள் இருப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து கிண்டல் செய்திருந்தார் கார்த்தி சிதம்பரம். இதுவும் கடந்த 2 நாட்களாக வைரலாக்கப்பட்டது.




இந்நிலையில் வைரலான அந்த போட்டோவை பலர் ரீடுவீட் செய்ததால் அதன் உண்மைநிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த போட்டோ போலி என்பதும், அது 14 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்காட்லாந்தில் எடுக்கப்பட்டது என்பதும் தெரியவதுள்ளது.
இதனையடுத்து பிரதமர் மோடியை கிண்டல் செய்வதற்காக பதிவிட்ட போட்டோவால், தானே விமர்சனத்திற்குள்ளாகி இருக்கும் கார்த்தியை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X