பொது செய்தி

இந்தியா

அயோத்தியில் தீபம் ஏற்ற விஸ்வ இந்து பரிஷத்திற்கு அனுமதி மறுப்பு

Updated : அக் 14, 2019 | Added : அக் 14, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: தீபாவளியை முன்னிட் டு அயோத்தி ராமர் கோயிலில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற விஸ்வ இந்து பரிஷத்தின் கோரிக்கை போலீஸ் கமிஷனரால் நிராகரிக்கப்பட்டது.உ.பி., மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர் நீதிமன்றம், 2010ல் தீர்ப்பு அளித்தது. 'சர்ச்சைக்குரிய, 2.77 ஏக்கர் நிலத்தை, சன்னி வக்ப் வாரியம், நிர்மோஹி அகாடா மற்றும் ராம் லல்லா

புதுடில்லி: தீபாவளியை முன்னிட் டு அயோத்தி ராமர் கோயிலில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற விஸ்வ இந்து பரிஷத்தின் கோரிக்கை போலீஸ் கமிஷனரால் நிராகரிக்கப்பட்டது.



latest tamil news


உ.பி., மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர் நீதிமன்றம், 2010ல் தீர்ப்பு அளித்தது. 'சர்ச்சைக்குரிய, 2.77 ஏக்கர் நிலத்தை, சன்னி வக்ப் வாரியம், நிர்மோஹி அகாடா மற்றும் ராம் லல்லா பிரித்துக் கொள்ள வேண்டும்' என, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், 14 மேல்முறையீட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த நிலம் தொடர்பாக சமரசம் செய்வதற்காக, மூன்று பேர் குழுவை, உச்ச நீதிமன்றம் அமைத்தது. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கலிபுல்லா, வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், பிரபல வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு அடங்கிய இந்தக் குழு, அனைத்து தரப்பினருடனும் ஆலோசனைகள் நடத்தியது.
ஆனால், சமரசம் ஏற்படவில்லை. அதையடுத்து, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான, ஐந்நு நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வு, ஆக., 6 முதல் தினமும் விசாரித்து வருகிறது. இன்று இறுதிக்கட்ட விசாரணை நடக்கிறது. இன்று தீர்ப்புகள் ஏதும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


latest tamil news


இதற்கிடையில் அயோத்தியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் வரும் தீபாவளியை முன்னிட்டு 5001 தீபம் ஏற்றி வழிபட முடிவு செய்துள்ளோம். இதற்கு அனுமதி வழங்க வேண்டும் என விஸ்வ இந்து பரிஷத் சார்பில், போலீஸ் கமிஷனரிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால் கமிஷனர் மனோஜ் மிஷ்ரா அனுமதி வழங்க மறுத்து விட்டார்.

சுப்ரீம் கோர்ட்டை அணுகுமாறு அவர் அறிவுறுத்தினார். அயோத்தி ராமர் கோயிலில் வழக்கமான பூஜையை தவிர வேறு எவ்வித மத சார்பிலும் சம்பிரதாய நிகழ்ச்சி நடத்தக்கூடாது என சுப்ரீம் கோர்ட் கடந்த 1993 ல் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-அக்-201921:09:03 IST Report Abuse
மனுநீதி-என் சொந்த பெயர் ராஜா எசமான், அங்கு வெளிச்சத்துக்கு ஒரு லைட்டாவது போட்டுக்கலாம்களா? இல்ல அதுவும் இந்துக்கள் சாமியின்னு கழட்டி எறிஞ்சிட்டு பேசாம கற்காலத்துக்கே போயிரலாங்களா? எந்த மதத்திலும் உள்ள வழிபாட்டு முறைகள் கலாச்சாரத்தின் மிச்சங்கள். அதை வைத்து முரண்பாடுகளை வளர்ப்பது மனித இனத்தின் சாபக்கேடு. ராமரோ, பாபரோ இருந்திருந்தால் மசூதிக்குள் கோவிலோ, இல்லை கோவிலுக்குள் மசூதியாகவோ மாறி அந்த இடம் மத நல்லினகத்துக்கு ஒரு சான்றாய் விளங்கியிருக்கும். இந்த பாழாய்ப்போன பிரிவினை வாதம் இன்னும் மத சடங்கு, வெறி என்னும் பெயரில் எத்தனை உயிர்களை பலிகொள்ள காத்திருக்கிறதோ?
Rate this:
Cancel
rajaraja cholan MA M.Phil - ciyt,மொராக்கோ
14-அக்-201918:18:50 IST Report Abuse
rajaraja cholan MA M.Phil பிரச்னைக்குரிய இடத்துல போய்த்தான் தீபம் ஏத்துவானுக தூணிலும் துரும்பிலும் இருக்கானு தெரியுது அங்க போய்த்தான் தீபம் ஏத்துவீர்களோ ???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X