பொது செய்தி

இந்தியா

பி.சி.சி.ஐ., தலைவரானார் கங்குலி

Updated : அக் 14, 2019 | Added : அக் 14, 2019 | கருத்துகள் (8)
Advertisement

மும்பை: பி.சி.சி.ஐ., யின் புதிய தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தேர்வு செய்யப்பட்டார்.


ஆறாவது ஐ.பி.எல்., தொடரில் ஏற்பட்ட சூதாட்ட சர்ச்சைக்குப் பின் இந்திய கிரிக்கெட்டில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. சுப்ரீம் கோர்ட் சார்பில் அமைக்கப்பட்ட புதிய கிரிக்கெட் நிர்வாகக் குழு (சி.ஒ.ஏ.,) இந்திய கிரிக்கெட் போர்டை (பி.சி.சி.ஐ.,) நிர்வகித்து வருகிறது. ஓய்வு பெற்ற நீதிபதி லோதா பரிந்துரைகளின் படி, அனைத்து மாநில சங்கங்களுக்கும் தேர்தல் நடத்தப்பட்டன.

வரும் 23ம் தேதி பி.சி.சி.ஐ., பொதுக்குழு கூடுகிறது. இதில் தலைவர், பொருளாளர் உள்ளிட்ட 6 பதவிகளுக்கு இன்று (அக்., 14) மாலை 3:00 மணிக்குள் மனு தாக்கல் செய்ய வேண்டும். இதனிடையே முன்னாள் கேப்டனும், மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவருமான கங்குலி, பி.சி.சி.ஐ., தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்தார்.

இவருக்கு முன்னாள் தலைவர்கள் சீனிவாசன், அனுராக் தாகூர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மனுதாக்கல் நேரம் முடிந்த நிலையில் கங்குலி புதிய தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். வரும் 23ம் தேதி நடக்கும் கூட்டத்தில் முறைப்படி பதவியேற்க உள்ளார். இதேபோல ஐ.பி.எல்., தலைவராக முன்னாள் வீரர் பிரிஜேஷ் படேல் தேர்வாக உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Meiyur Adhi Varadarajan - chennai,இந்தியா
14-அக்-201923:36:10 IST Report Abuse
Meiyur Adhi Varadarajan long long ago same ganguly banned for his action. this ganguly will act so called one ganguly or we can see new one. i feel old milk in new bottle. let us wait and watch this bottle going to be hot or cool one.
Rate this:
Share this comment
Cancel
agni - chennai,இந்தியா
14-அக்-201922:38:12 IST Report Abuse
agni Congrats dada
Rate this:
Share this comment
Cancel
Ram Sekar - mumbai ,இந்தியா
14-அக்-201920:54:18 IST Report Abuse
Ram Sekar அரசியல் கொலையா? 15 பேர்கள் கூட செத்துருக்காங்க. நீயெல்லாம்? அதுக்குதான் பாகிஸ்தான் போயிடு என்று சொல்லறோம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X