பொது செய்தி

இந்தியா

பயங்கரவாதிகளுக்குதான் தொலைபேசி தேவை: காஷ்மீர் கவர்னர்

Updated : அக் 14, 2019 | Added : அக் 14, 2019 | கருத்துகள் (30)
Advertisement

ஜம்மு: காஷ்மீர் மக்களை விட, பயங்கரவாதிகளுக்கு தான் தொலைபேசி சேவை தேவைப்படுகிறது என ஜம்மு-காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.





கடந்த ஆக., 5ம் தேதி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதனால் பயங்கரவாதம் பரவாமல் தடுப்பதற்காக காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூடிய கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
தொலைதொடர்பு சேவையும் முற்றிலுமாக முடக்கிவிடப்பட்டது. தற்போது காஷ்மீரில் அமைதி நிலை திரும்பியதை அடுத்து படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்திக் கொள்ளப்பட்டன. இயல்பு நிலை திரும்பி, சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்திருப்பதால் 2 மாதங்களுக்கு பிறகு, தொலைதொடர்பு சேவைகள் மீண்டும் துவங்கப்பட்டன.




இன்று (அக்., 14) பகல் 12 மணியளவில் இருந்து 40 லட்சம் போஸ்ட்பெய்டு சேவையும் தொடங்கியது. இது தொடர்பாக காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக் கூறியதாவது: காஷ்மீர் மக்களுக்கு தொலைபேசியை விட, குடியிருப்பவர்களின் வாழ்க்கை தான் முக்கியம். முன்பெல்லாம், மக்கள் தொலைபேசி இல்லாமல் வாழ்ந்து வந்துள்ளனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பயங்கரவாதிகள், அணி திரள்வதற்கு தொலைபேசி பயன்படுத்தப்படுகிறது. அவர்களுக்கு தான் தொலைபேசி சேவை தேவைப்படுகிறது. இவ்வாறு சத்யபால் மாலிக் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan - erode,இந்தியா
15-அக்-201906:25:54 IST Report Abuse
rajan பயங்கரவாதிகள், அணி திரள்வதற்கு தொலைபேசி பயன்படுத்தப்படுகிறது. அவர்களுக்கு தான் தொலைபேசி சேவை தேவைப்படுகிறது. இவ்வாறு சத்யபால் மாலிக் கூறினார்.ஆகவே தடை தளர்த்தப்பட்ட்து
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
15-அக்-201906:17:15 IST Report Abuse
Mani . V ஆமா, இந்த கவர்னரிடம் தொலைபேசி இருக்கிறதா? சும்மா ஒரு சந்தேகம்.
Rate this:
Share this comment
Cancel
Anandan - chennai,இந்தியா
15-அக்-201906:02:29 IST Report Abuse
Anandan அப்போ இவரும் இனிமே தொலைபேச உபயோகிக்க மாட்டார்? மொத்த கூட்டமும் இப்படி இருக்கு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X