பொருளாதார மந்தநிலைக்கு என்ன காரணம்: சிதம்பரம்

Updated : அக் 14, 2019 | Added : அக் 14, 2019 | கருத்துகள் (101)
Advertisement
twitter,chidambaram,சிதம்பரம்,டுவிட்டர்,பொருளாதார,மந்தநிலை,காரணம்

புதுடில்லி : பொருளாதார மந்த நிலைக்கு ஜி.எஸ்.டி., வரி விதிப்பும், அதை தவறாக செயல்படுத்தியதுமே காரணம் என சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஐ.என்.எஸ்., மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரத்தின் டுவிட்டர் பக்கம் தொடர்ந்து செயல்பாட்டில் இருந்து வருகிறது. சிதம்பரத்தின் டுவிட்டரில் அவரது குடும்பத்தார் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், நாட்டில் தற்போது நிலவி வரும் பொருளாதார மந்த நிலைக்கான காரணம் என சிதம்பரத்தின் டுவிட்டரில் கருத்துக்கள் பதிவிடப்பட்டுள்ளது.





அவரது டுவிட்டரில் கூறப்பட்டுள்ளதாவது: பொருளாதார மந்த நிலைக்கு, ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முறையும், அதை தவறாக செயல்படுத்தியது தான் முக்கிய காரணம். ஜி.எஸ்.டி.,யை தவறாக செயல்படுத்தியதை பிரதமரின் பொருளாதார ஆலோசகர் ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் அவர் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையை மறந்து விட்டார்.

அனைவரது கருத்துகளின் படி, ஜி.எஸ்.டி., கொண்டு வரப்பட்டது என நிதி அமைச்சர் நிர்மலா சொல்வது தவறு. ஜி.எஸ்.டி., மசோதா பார்லி.,யில் அறிமுகம் செய்யப்பட்ட போது நாங்கள் அதை எதிர்த்தோம். இவ்வாறு அவரது டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Advertisement




வாசகர் கருத்து (101)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayvee - chennai,இந்தியா
21-அக்-201919:58:44 IST Report Abuse
Jayvee கூடிய சீக்கிரம் மொத பாமிலியும் உள்ள இருப்பீங்க .. அப்புறம் யாரு ட்வீட் போடுவாங்க ? ராவுல் வின்சியா ?
Rate this:
Share this comment
Cancel
janakiraman - bangalore,இந்தியா
18-அக்-201913:54:36 IST Report Abuse
janakiraman நீங்கள்தான் காரணம் .
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
16-அக்-201917:12:52 IST Report Abuse
skv srinivasankrishnaveni உலகம் முழுக்க எல்லா இடங்கள்லேயும் சொத்துக்களா வாங்கி பல மில்லியன்களுக்கே அதிபதி ஆயிட்டீங்க நீரும் உன் மவனும் இதர கான் கிரேஸ் வித் க்களெல்லோரும் பிஜேபி வந்தாங்க மாட்டிண்டு முழிக்குறிங்களே எல்லாமே தப்புகளா செய்துபோட்டு ராகுல் அவன் ஆத்தா தங்கச்சி என்று எல்லோரும் சேர்த்தவர்கள் இருந்தால் நம்ம நாட்டை நன்னாவே வழிநடத்த மோடி அரசு முனையுமேயா எவனுக்கு வேண்டும் உன் ஐடியா எல்லாம் கொண்டுபோய் க்கூவத்துலே கொட்டுங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X