பொது செய்தி

தமிழ்நாடு

இரட்டை பதிவை நீக்க முன் வாருங்கள்!

Updated : அக் 16, 2019 | Added : அக் 14, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement
sathyaprabha sahoo,தலைமை தேர்தல் அதிகாரி, சத்யபிரதா சாஹு,இரட்டை பதிவு,நீக்க,முன் வாருங்கள்

சென்னை: ''வாக்காளர் பட்டியலில், இரட்டை பதிவு இருந்தால், அதை நீக்க, வாக்காளர்கள் தாமாக முன்வந்து விண்ணப்பிக்க வேண்டும்,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.

தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் சரி பார்ப்பு பணி, செப்டம்பர், 1ல் துவக்கப்பட்டது; நவம்பர், 18 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் சரி பார்ப்பு பணியை கண்காணிக்க, 10 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, நேற்று ஆலோசனை நடத்தினார்.

அதன் பின், அவர் கூறியதாவது: வாக்காளர் பட்டியல் சரி பார்ப்பு பணி, செப்டம்பர், 1ல் துவக்கப்பட்டது. மொத்தம் உள்ள, 5.99 கோடி வாக்காளர்களில், தங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா என, இதுவரை, 1.64 கோடி பேர் சரி பார்த்துள்ளனர்; மீதமுள்ளோரும் சரி பார்க்க வேண்டும். அதற்காகவே, வாக்காளர் பட்டியல் சரி பார்ப்பு திட்டம், நவம்பர், 18 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. நவம்பர் 25ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதன் பின், வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய, விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவை சரி பார்க்கப்படும். இறுதி வாக்காளர் பட்டியல், ஜனவரி, 20ல் வெளியிடப்படும். இப்பணி எவ்வாறு நடக்கிறது என, கண்காணிக்க, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், 10 பேர் நியமிக்கப் பட்டுள்ளனர்.

அதிகாரிகள் ஒவ்வொருவருக்கும், மூன்று மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. வாக்காளர்கள் அனைவரும், தங்களுடைய பெயர், முகவரி, புகைப்படம் சரியாக உள்ளதா என, பார்த்துக் கொள்ள வேண்டும்; மாற்றம் இருந்தால் விண்ணப்பிக்கலாம்.வாக்காளர் பட்டியலில், இரட்டை பதிவுகளை, அதிக அளவில் நீக்கி உள்ளோம். பொதுமக்கள் இரட்டை பதிவு இருந்தால், தாமாக முன்வந்து, அதை நீக்க விண்ணப்பிக்க வேண்டும். வாக்காளர் எண்ணுடன், ஆதார் எண் இணைப்பது பரிசீலனையில் உள்ளது. இவ்வாறு, சத்யபிரதா சாஹு கூறினார்.


10 பேர் யார் யார்?

போக்குவரத்து துறை கமிஷனர் சமயமூர்த்தி, பதிவுத்துறை ஐ.ஜி., ஜோதி நிர்மலாசாமி, எல்காட் மேலாண் இயக்குனர் விஜயகுமார், தமிழ்நாடு காகித ஆலை நிறுவன மேலாண் இயக்குனர் சிவசண்முகராஜா, சிட்கோ கூடுதல் கமிஷனர் ராஜேஷ். தமிழ்நாடு கடல்சார் வாரியம் துணை தலைவர் சம்பத், கைத்தறித் துறை இயக்குனர் கருணாகரன், தமிழ்நாடு காதி மற்றும் கிராமத் தொழில் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி நடராஜன், தாட்கோ மேலாண் இயக்குனர் சஜன்சிங் ஆர் சவான், கால்நடைத் துறை இயக்குனர் ஞானசேகரன் ஆகியோர், வாக்காளர் பட்டியல் சரி பார்ப்பு பணி, பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-அக்-201917:55:06 IST Report Abuse
சூரியா என்னுடைய குடியிருப்பில் 4 பேர்களுக்கு, அதே புகைப்படத்துடன், அதே முகவரியில் இரண்டு வாக்காளர் பதிவு உள்ளது. அதேபோல், இறந்த இரண்டு நபர்களின் பெயர்களும் நீக்கப்படவில்லை. இதை, பலமுறை அறிவித்தும் இதே நிலமை. அதிகாரிகளின் கையை நாங்களே பிடித்து நீக்காதது மட்டுமே எங்கள் குறை. இதுதான் நமது தேர்தல் கமிஷனின் லட்சணம்.
Rate this:
Cancel
Kadambur Srinivasan - Chennai,இந்தியா
15-அக்-201913:25:26 IST Report Abuse
Kadambur Srinivasan unnecessary activity. straight away they can link with Aadhar to avoid the dublicate
Rate this:
Cancel
Raj - Chennai,இந்தியா
15-அக்-201912:28:28 IST Report Abuse
Raj If they link Aadhar to voter id, with in 5 mins a software program can find duplicates(double entry). They could make aadhar link mandatory for bank, ration, mobile, etc. Why not for very important voter id, with that I can choose my leader who can decide me what to eat, etc. Election commission make all people fool by not linking aadhar to voter id.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X