பொது செய்தி

தமிழ்நாடு

ரப்பர் மரங்களை ஏலம் விடுகிறது வனத்துறை

Added : அக் 14, 2019
Advertisement

சென்னை : அரசு ரப்பர் கழகத்தின், மூன்று வன கோட்டங்களில் உள்ள, 3.5 கோடி ரூபாய் மதிப்பிலான ரப்பர் மரங்கள், ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளதாக, வனத்துறை அறிவித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில், அரசு ரப்பர் கழகம் செயல்படுகிறது. இந்நிறுவனம், வனத்துறையின் கீழ் செயல்படும், பொதுத்துறை நிறுவனம். இந்நிறுவனம் சார்பில், வனத்துறைக்கு சொந்தமான, 10 ஆயிரத்து, 267 ஏக்கர் நிலத்தில், ரப்பர் மரங்கள் உள்ளன. இதில், ஏற்கனவே பயிரிடப்பட்ட ரகங்களை அப்புறப்படுத்தி விட்டு, அதிக மகசூல் அளிக்கும், உயர் ரக ரப்பர் மரங்கள் வளர்க்கப்பட உள்ளன. இதற்காக, கன்னியாகுமரி மாவட்டம், மணலோடை, சித்தார், கோதையாறு வனக் கோட்டங்களில் உள்ள, பழைய ரப்பர் மரங்கள் அகற்றப்பட உள்ளன.

இதில், முதற்கட்டமாக, 3.5 கோடி ரூபாய் மதிப்பிலான, ரப்பர் மரங்களை ஏலம் விடுவதற்கான அறிவிப்பை, வனத்துறை வெளியிட்டு உள்ளது.இந்த ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர், நவம்பர், 4க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, வனத்துறை அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X