பொது செய்தி

இந்தியா

உன்னை என்னை உயர வைத்து உலகமெல்லாம் வாழவைத்து: இன்று சர்வதேச கிராமப்புற பெண்கள் தினம்

Updated : அக் 15, 2019 | Added : அக் 14, 2019
Advertisement
உன்னை என்னை உயர வைத்து உலகமெல்லாம் வாழவைத்து: இன்று சர்வதேச கிராமப்புற பெண்கள் தினம்

இயற்கை வளம், விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டு வாழும் கிராமப்புற பெண்கள், உலகின் மக்கள் தொகையில் 25 சதவீதம் உள்ளனர். நகர்ப்புற - கிராமப்புற பெண்களுக்கு கிடைக்கும் பல வசதிகள் இவர்களுக்கு கிடைப்பதில்லை.

வீட்டு வேலைகளை மட்டுமல்லாமல் விவசாயம், மீன் பிடித்தல், மேய்ச்சல் உள்ளிட்ட தொழில்களை பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கிராமப்புற பெண்கள் செய்கின்றனர். இன்றைய பொருளாதார வளர்ச்சிக்கு, கிராமப்புற பெண்களின் பங்களிப்பை மறுக்க முடியாது. இவர்களை அங்கீகரிக்கும் விதத்தில் 2008ம் ஆண்டு முதல் ஐ.நா., சார்பில் அக்.,15ம் தேதி சர்வதேச கிராமப்புற பெண்கள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 'பருவநிலையை பாதுகாப்பதில் கிராமப்புற பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பங்கு' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

உலக கிராமப்பெண்களில் 43 சதவீதம் பேர் விவசாய தொழிலில் ஈடுபடுகின்றனர். உலகளவில் பெண்களின் வேலைவாய்ப்பில் மூன்றாவது இடத்தில் விவசாயத்துறை உள்ளது. ஆப்ரிக்கா மற்றும் தெற்கு ஆசிய நாடுகளில் 60 சதவீத பெண்கள் விவசாயப் பணிகளில் ஈடுபடுகின்றனர். பல நாடுகளில் கிராம பெண்களின் வேலை நேரம், ஆண்களை விட கூடுதலாக உள்ளது. இந்தியாவில் அதிகமானோர் கிராமங்களில் வாழ்கின்றனர்.

கிராமப்புற பெண்களின் தொழில்களுக்கு கடனுதவி வழங்குதல், வீடில்லாதவர்களுக்கு வீடு வழங்குதல், இலவச மருத்துவ பரிசோதனை, சுகாதாரம் உள்ளிட்ட வசதிகளை அவர்களுக்கு கிடைக்க வழி செய்ய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X