பொது செய்தி

தமிழ்நாடு

சீன அதிபர் - பிரதமர் அமர்ந்த நாற்காலி

Added : அக் 14, 2019
Advertisement

சென்னை : 'சீன அதிபர் ஸீ ஜின்பிங் - பிரதமர் மோடி அமர்ந்த நாற்காலிகளை, என்னிடம் ஒப்படைக்க வேண்டும்' என, பொதுப்பணித் துறையினருக்கு, காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார்.

சீனா - இந்தியா இடையேயான நல்லுறவை மேம்படுத்துவதற்காக, பிரதமர் மோடியும், சீன அதிபர் ஸீ ஜின்பிங்கும் மாமல்லபுரத்தில் சந்தித்தனர். அனுமதிஅங்குள்ள, ஐந்து ரதம் அருகே, இருவரும் நாற்காலியில் அமர்ந்து இளநீர் பருகினர். இந்த நாற்காலிகள் மற்றும் மேஜையை, கிண்டியில் இருந்து, பொதுப்பணித் துறை வரவழைத்து கொடுத்தது. நிகழ்ச்சி முடிந்ததும், நாற்காலிகளை உடனடியாக அப்புறப்படுத்தி, பொதுப்பணித் துறையினர் பத்திரப்படுத்தி உள்ளனர்.

இவற்றை பயன்படுத்தி, சந்திப்பின் நினைவு சின்னம் அமைக்க, முதல்வர் இ.பி.எஸ்.,சிடம், பொதுப்பணித் துறையினர் அனுமதி கேட்டுள்ளனர். அதேநேரத்தில், மத்திய அரசு அதிகாரிகளும், இந்த நாற்காலிகளை கேட்கின்றனர். அது மட்டுமின்றி, நாற்காலிகளை விற்பனை செய்த கடை உரிமையாளர்களும், அதை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என, கேட்டுள்ளனர். இது குறித்த செய்தி, நம் நாளிதழில் நேற்று வெளியானது.இதையடுத்து, பொதுப்பணித் துறை அதிகாரிகளை, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, நேற்று காலை தொடர்பு கொண்டார்.


இழுபறி


'மாவட்ட நிர்வாகம் சார்பில், அருங்காட்சியகம் அமைக்க, தலைவர்கள் பயன்படுத்திய நாற்காலிகளை, என்னிடம் ஒப்படைக்க வேண்டும்' என, அவர் உத்தரவிட்டு உள்ளார்.'முதல்வர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்தால் மட்டுமே, நாற்காலிகளை ஒப்படைக்க முடியும்' என, பொதுப்பணித் துறையினர், அவரிடம் திட்டவட்டமாக கூறியுள்ளனர். இதனால், நாற்காலிகள் யாரிடம் இருக்கப்போகிறது என்பதில், இன்னும் இழுபறி தொடர்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X