அரசியல் செய்தி

தமிழ்நாடு

சீமான் கட்சி வேட்பாளர்களை தகுதி நீக்குங்க!

Added : அக் 14, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை : 'இடைத்தேர்தலில் போட்டியிடும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை, தகுதி நீக்கம் செய்ய வேண்டும்' என, தமிழக காங்கிரஸ் செயல் தலைவரும், திருவள்ளூர் தொகுதி எம்.பி.,யுமான ஜெயகுமார், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம், மனு அளித்துள்ளார். விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 'ராஜிவை நாங்கள் தான்
 சீமான் கட்சி வேட்பாளர்களை தகுதி நீக்குங்க!

சென்னை : 'இடைத்தேர்தலில் போட்டியிடும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை, தகுதி நீக்கம் செய்ய வேண்டும்' என, தமிழக காங்கிரஸ் செயல் தலைவரும், திருவள்ளூர் தொகுதி எம்.பி.,யுமான ஜெயகுமார், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம், மனு அளித்துள்ளார்.

விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 'ராஜிவை நாங்கள் தான் கொன்றோம்' என பேசியது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பிரசாரம்தேர்தல் விதிகளை மீறி, சீமான் பேசியதால், அவரது கட்சி வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என, காங்., போர்க்கொடி உயர்த்தி உள்ளது.இது தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம், நேற்று காங்., செயல் தலைவர் ஜெயகுமார் மனு அளித்தார்.

பின், அவர் கூறியதாவது:தேர்தல் நேரத்தில், நாட்டில் அமைதியை குலைக்க வேண்டும்; மக்கள் மோதிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சீமான், மிகவும் கீழ்த்தரமாக விக்கிரவாண்டியில் பிரசாரம் செய்துள்ளார்.'நாங்கள் தான், ராஜிவை கொன்றோம்; தமிழ் மண்ணில் புதைத்தோம்; வரலாறு திருப்பி எழுதப்படும்' என்று, பேசியுள்ளார். இதன் வழியாக, அவர் நாட்டில் கொந்தளிப்பான நிலை ஏற்படவும், காங்கிரஸ் தொண்டர்கள் வெகுண்டு எழுவதற்கும், வழிவகை செய்து உள்ளார்.நீதித்துறை, காவல்துறை, தேர்தல் ஆணையம் போன்றவை, தங்கள் பணியை செய்யும் எனக்கூறி, எங்கள் தொண்டர்களை அமைதிப்படுத்தி உள்ளோம்.


கடிதம்


சீமான் மீது நடவடிக்கை கோரி, டி.ஜி.பி.,யிடம் புகார் கொடுத்துள்ளேன். தலைமை தேர்தல் அதிகாரியிடமும், கடிதம் கொடுத்துள்ளேன்.இந்திய ராணுவத்தை, மக்களை கொல்லும் படை என, பேசி உள்ளார். நாட்டு மக்களை காக்க, ரத்தம் சிந்தும் ராணுவத்தினரை பழித்து பேசியது, தேசத்துரோக செயல். எனவே, அவர் மீது தேச விரோத வழக்கு பதிவு செய்ய வேண்டும். நீதிமன்ற தீர்ப்பின் படி, ராஜிவை கொலை செய்தவர்கள், தண்டனை பெற்று வருகின்றனர். அந்த வழக்கை திசை திருப்பும் வகையில், நாங்கள் தான் கொலை செய்தோம் என்று, சீமான் தாமாக முன்வந்து கூறுகிறார்.

அவரை, உடனே கைது செய்ய வேண்டும். அவர் கூறியது உண்மையா என, காவல்துறை விசாரிக்க வேண்டும்.உண்மை இல்லையென்றால், புரளியை கிளப்பி, நாட்டில் அமைதி யின்மையை ஏற்படுத்திய குற்றத்திற்காக, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் கட்சி சார்பில் போட்டியிடும், வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு, ஜெயகுமார் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
15-அக்-201911:50:01 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலை காங்கிரெஸ்ஸை எதிர்த்து நாம் தமிழர் போராடிய காலம் போய், நாம் தமிழரை எதிர்த்து காங்கிரஸ் போராட வேண்டிய நிலையை தற்போது காண்கிறோம். இதுவே நாம் தமிழரின் சீமானின் வெற்றிகளில் ஒன்று.
Rate this:
Cancel
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
15-அக்-201904:45:49 IST Report Abuse
uthappa அப்படி செய்துடாதீங்க, தி மு க சுலபமாக வெற்றி பெற ஏதுவாகிடும்.சீமான் வேட்பாளர் தி மு க வின் சில ஆயிரம் வாக்குகளை பெற கூடியவர்.
Rate this:
Cancel
TAMILAN - new jerssy,யூ.எஸ்.ஏ
15-அக்-201901:32:32 IST Report Abuse
TAMILAN தெலுங்கர் ஜெய்குமாருக்கு தமிழர்களை கொன்றவர்கள் நல்லவர்கள். ஆனால் துங்கிறது தமிழ் நாடு சோறு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X