அரசியல் செய்தி

தமிழ்நாடு

பாகிஸ்தானை மையமாக வைத்து மோடிக்கு எதிராக 'டிரண்டிங்'

Added : அக் 14, 2019 | கருத்துகள் (18)
Advertisement
 பாகிஸ்தானை மையமாக வைத்து மோடிக்கு எதிராக 'டிரண்டிங்'

காளையார்கோவில் : ''பாகிஸ்தானை மையமாக வைத்தே பிரிவினைவாதிகள் மோடி வருகைக்கு எதிராக டிரண்டிங் செய்கின்றனர்,'' என பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் அவர் கூறியதாவது:வெளிநாட்டு தலைவர்களுக்கு தாஜ்மகால் போன்ற இடங்கள் தான் காட்டப்படும் என்ற நிலையை மாற்றி தற்போது மகாபலிபுரத்தில் சீன அதிபருடன், பிரதமரின் சந்திப்பு நடந்துள்ளது. தொன்மையான காஞ்சிபுரம் மாவட்டத்தில் இச்சந்திப்பு நடத்துள்ளது. இதற்கு முழு முயற்சி மேற்கொண்ட மோடியை உலகமே பாராட்டுகிறது.புராண, வேத காலத்தில் இருந்து நகரங்களில் சிறந்தது காஞ்சி என சொல்லப்படுகிறது.

அதன் பெருமையை இத்தனை ஆண்டு காலம் மறைத்து வைத்து சதி செய்துள்ளனர். சிற்பக்கலை, பொறியியல் துறையில் இந்தியா சிறந்து விளங்கியதற்கு மகாபலிபுரமும், தஞ்சை பெரிய கோயிலும் எடுத்துக்காட்டு. ஆனால் ஆங்கிலேயர் ஆட்சியில்தான் தான் இந்தியா வளர்ச்சிபெற ஆரம்பித்தது போன்ற மாயை உருவாக்கப்பட்டது.1300 ஆண்டுகளுக்கு முன்பே யுவான் சுவாங் போன்றவர்கள் சீனாவில் இருந்து இந்த நாட்டிற்கு வந்துள்ளனர். இருநாடுகளுக்கும் வரலாற்று ரீதியிலான உறவு உள்ளது.

பாகிஸ்தானை மையமாக வைத்து மோடி வருகைக்கு எதிராக பிரிவினைவாதிகள் 'டிரண்ட்' செய்கின்றனர் என்பது ஏற்கனவே நிரூபணம் ஆகியுள்ளது. தற்போதும் உளவுத்துறை விசாரணையில் தெரிந்துள்ளது. வெள்ளைக்காரர்கள் இந்தியாவை ஆளவேண்டும் என சொன்ன கூட்டம்தான் இச்செயலில் ஈடுபட்டு வருகிறது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பிரபு - மதுரை,இந்தியா
15-அக்-201916:08:55 IST Report Abuse
பிரபு 'காஞ்சி அதன் பெருமையை இத்தனை ஆண்டு காலம் மறைத்து வைத்து சதி செய்துள்ளனர் - எச்.ராஜா' - கடந்த 6 ஆண்டுகளில் எத்தனையோ வெளிநாட்டு அதிபர்கள், தலைவர்கள் இந்தியா வந்தனர். அப்போதெல்லாம் கூட 'காஞ்சி' யை காட்டவில்லை. அப்போ நீங்க சொன்ன அந்த சதியில் தற்போதுள்ள ஆட்சியாளர்களுக்கும் பங்கு இருக்கிறதா?
Rate this:
Share this comment
Cancel
Halfmoon - Karaikudi,இந்தியா
15-அக்-201914:49:59 IST Report Abuse
Halfmoon நங்கள் மதிப்பதில்லை..
Rate this:
Share this comment
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
15-அக்-201912:33:24 IST Report Abuse
Rafi வெள்ளை காரர்களுக்கு சாமரம் வீசியவர்கள் யார் என்பதை இவரிடம் விசாரிக்கலாம். தோல்வி அடைந்தவர்கள் ஏதாவது கதை விட்டு, அதை மறைக்க பாகிஸ்தான் ஆதரவு என்று திசை திருப்பி கொண்டிருக்கின்றார்கள். உண்மையில் இவர்கள் தேச பக்தியுடைவர்களாக இருந்திருந்தால் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டிருந்திருக்க வேண்டும். சுதந்திரம் பெற்று பல ஆண்டுகள் தேசிய கொடியையே கண்டு கொள்ளாமல் இருந்தவர்களுக்கு, தேச பக்தியை பற்றி பேச தகுதி இருக்கும்மா?
Rate this:
Share this comment
Chichu Damal - Panama,பனாமா
15-அக்-201915:23:30 IST Report Abuse
Chichu Damalவந்தேறியவர்களுக்கு வக்காலத்து வாங்கி கத்தி முனையில் மதம் மாறியவர்களுக்கு ஆப்பு வைத்தது ஆங்கிலேயர்கள். ஒரு வகையில் இந்தியாவை சுரண்டினாலும் முகலாயர் ஆட்சி ஒழிய ஆங்கிலேயர்கள் தான் காரணம். இப்பவும் எண்ணெய் வயல்களை காப்பாற்றவும் தன்னை காத்துக்கொள்ளவும் அமெரிக்காவின் காலில் விழுந்து கிடப்பது எந்த நாடுகள்? இந்தியாவில் பிறந்த யாரும் வளைகுடா நாட்டில் பிறந்த அரபு பெண்களை திருமணம் செய்துகொள்ள முடியுமா? அந்த நாட்டில் குடியுரிமை கிடைக்குமா? ஆனால், இந்தியப்பெண்களை மணந்து அவர்களுக்கு குடியுரிமை இருக்கிறதே அதற்க்கு என்ன பெயர்?...
Rate this:
Share this comment
blocked user - blocked,மயோட்
16-அக்-201904:19:46 IST Report Abuse
blocked userரபிக்கு சவுதியில் பெண்ணெடுத்து இருக்கிறார்கள். இரண்டு எண்ணெய் வயல்கள் வைத்து இருக்கிறார்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X