பகீர்! தமிழகத்தில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் 33 பேர் சிக்கினர்

Updated : அக் 14, 2019 | Added : அக் 14, 2019 | கருத்துகள் (44)
Share
Advertisement
 பதுங்கிய, 33 பயங்கரவாதிகள்,புலனாய்வு

புதுடில்லி: ''ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த 127 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களில் 33 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். தென் மாநிலங்களில் பயங்கரவாதிகள் காலுான்றும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது'' என தேசிய புலனாய்வு அமைப்பின் ஐ.ஜி. அலோக் மிட்டல் கூறியுள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு படைப் பிரிவுகள் மற்றும் புலனாய்வு அமைப்புகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது. இதில் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவர் ஒய்.சி.மோடி பேசியதாவது: அண்டை நாடான வங்கதேசத்தை மையமாக வைத்து ஜமாதுல் முஜாகிதீன் பங்ளாதேஷ் என்ற பயங்கரவாத அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பினர் வங்கதேசத்தில் ஏற்கனவே சில தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இந்த அமைப்பினர் நம் நாடு முழுவதும் தங்கள் கிளைகளை பரப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஜார்க்கண்ட், பீஹார், மஹாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 14 மாநிலங்களில் இவர்களின் நடவடிக்கைகள் உள்ளன. நம் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 125 பேர் இந்த அமைப்பின் தலைவர்களுடன் தொடர்பு வைத்துள்ளனர்; அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்; அவர்களை கண்காணித்து வருகிறோம். சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கும் இவர்களை பற்றிய தகவல்களை அளித்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

தமிழகத்தில் 33 ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது ஐஎஸ் அமைப்பின் பயங்கரவாத செயல்களை கட்டுப்படுத்த பல நாடுகள் திணறி வருகின்றன.

தேசிய புலனாய்வு அமைப்பின் ஐ.ஜி. அலோக் மிட்டல் பேசியதாவது: ஜமாதுல் முஜாகிதீன் பங்ளாதேஷ் அமைப்பினர் 2007ல் மேற்கு வங்க மாநிலத்தில் தான் முதலில் கால் பதித்தனர். இதன் பின் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தங்கள் நடவடிக்கைகளை துவக்கினர். கடந்த 2014 - 18ம் ஆண்டுகளில் 130 மறைவிடங்களை பெங்களூருவில் ஏற்படுத்தினர். இதன் பின் தென் மாநிலங்கள் முழுவதும் தங்கள் நடவடிக்கைகளை விரிவுபடுத்தினர்.

இந்த அமைப்பினர் தமிழகம் - கர்நாடகா எல்லை பகுதியில் கிருஷ்ணகிரில் ராக்கெட் லாஞ்சரை ஏவி சோதனை நடத்தியுள்ளனர். மியான்மர் நாட்டில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் தாக்கப்படுவதற்கு பழிவாங்கும் வகையில் புத்த வழிபாட்டு தலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த இந்த அமைப்பினர் சதித் திட்டம் தீட்டியுள்ளனர். அவர்களது சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.

இது தவிர ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த 127 பேர் நாடு முழுவதும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். தமிழகத்தை சேர்ந்த 33 பேரும் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 19 பேரும் கேரளாவைச் சேர்ந்த 17 பேரும் தெலுங்கானாவைச் சேர்ந்த 14 பேரும் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் அடங்குவர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் மத போதகர் ஜாகிர் நாயக் மற்றும் அண்டை நாடான இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின்போது தேவாலயங்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு மூளையாகச் செயல்பட்ட ஜகரான் ஹாஸ்மி ஆகியோரது பேச்சுகளால் கவரப்பட்டு ஐ.எஸ். அமைப்பின் ஆதரவாளர்களாக மாறியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

ஏற்கனவே செயல்பட்ட காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பினர் பஞ்சாபில் மீண்டும் தங்கள் அமைப்புக்கு புத்துயிர் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இவர்களுக்கு எல்லை பகுதியிலிருந்தும் பிரிட்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்தும் நிதி உதவி கிடைக்கிறது. பஞ்சாபில் சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டை ஏற்படுத்தி அமைதியற்ற சூழலை உருவாக்குவது தான் இவர்களது நோக்கம். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, புலனாய்வு அமைப்பின் முன்னாள் தலைவரும் தற்போதைய நாகாலாந்து மாநில கவர்னருமான ஆர்.என்.ரவி மற்றும் புலனாய்வு அமைப்புகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
16-அக்-201905:52:21 IST Report Abuse
 nicolethomson நான் இதில் திமுகவையும் , விசிகவையும் காங்கிரசையும் தான் குற்றம் சாட்டுவேன் , ஓட்டுக்காக இவர்கள் அந்த மதத்தின் எந்த ஒரு தவறுகளையும் தட்டிக்கேட்க தயங்குவதால் தான் இவ்வளவும் , இந்த புல்லுருவிகளால் நல்ல இதயம் கொண்டவர்களுக்கும் கேடு
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
15-அக்-201921:34:45 IST Report Abuse
தமிழ்வேள் சீனாவை போல மார்க்கத்தை பின்பற்றுவதற்கே கடும் கட்டுப்பாடுகள் தேவை அவர்கள் அங்கு ஐந்தாண்டுகள் தவணை கொடுத்து திருந்த சொல்வது போல இங்கும் செய்யலாம் குறிப்பாக மதரஸாக்கள் பொது பள்ளிகளாக மாற்றப்படவேண்டும் தொழுகை நடக்குமிடங்கள் அனைத்தும் அரசின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விடவேண்டும் மார்க்கத்தவரின் ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்பட்டால்தான் தீவிரவாதத்தை அடக்க முடியும் தேவைப்பட்டால் அழித்தல் நடவடிக்கையை எந்த தலையீடும் இன்றி யாருக்கும் பதில் சொல்லும் தேவை இன்றி முன்னெடுக்கும் சுதந்திரம் தரப்படவேண்டும் ....
Rate this:
Share this comment
Cancel
Mithun - Bengaluru,இந்தியா
15-அக்-201919:59:32 IST Report Abuse
Mithun திராவிட நாட்டில தான் தீவிரவாதிங்க அதிகமா இருகாங்க. வடநாடு கூட தேவல போலிருக்கு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X