பொது செய்தி

தமிழ்நாடு

கீழடி அகழாய்வு தொடர்வது அவசியம்

Added : அக் 14, 2019 | கருத்துகள் (1)
Advertisement
கீழடி அகழாய்வு தொடர்வது அவசியம்

மதுரை : ''சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகத்தை தழுவியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. எனவே, கீழடி அகழய்வு 15 ஆண்டுகளாவது தொடர்ந்தால் தான் சங்ககால இலக்கியத்தில் கூறப்பட்ட கட்டமைப்புக்களை உறுதிபடுத்த இயலும்,'' என மத்திய தொல்லியல்துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா கூறினார்.

மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம் சார்பில் 'கீழடி - தமிழர்களின் தொன்மை' எனும் தலைப்பில் நடந்த கருத்தரங்கில் அமர்நாத் ராமகிருஷ்ணா பேசியதாவது: கீழடியில் 70 ஆண்டுகளாக அகழாய்வு நடக்கவில்லை. 100 இடங்களில் கீழடியை தேர்வு செய்து 2013 - 14 ல் முதல் முதலாக சிறிய அளவில் அகழாய்வு மேற்கொண்டோம். இதற்காக 110 ஏக்கர் நிலத்தை உரிமையாளர்கள் எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் வழங்கினர். அதனால் தான் அகழாய்வை வெளிப்படையாக நடத்த முடிந்தது. தமிழகத்தில் 293 இடங்களில் அகழாய்வு நடந்தது.

அதில் அரிச்சன்மேடு, காவிரி பூம்பட்டினம், ஆதிச்சநல்லுார், கீழடி முக்கியமானது. கீழடியில் 3 மீட்டர் ஆழம் வரை செங்கல் சூளை அமைக்க மண் எடுத்துள்ளனர். அதனால் சில ஆதாரங்கள் அழிந்திருக்கலாம். எனினும் அவ்விடத்தில் 40 ஆண்டுகளாக வளர்க்கப்பட்ட தென்னை மரங்களால் தொல்லியல் மேடுகள் அழியாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

கீழடியில் 10 சதவீத அகழாய்வு மட்டுமே நடத்தினோம். சிறிய அளவில் நடத்தப்பட்ட அகழாய்விலேயே 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய சங்க இலக்கியத்தில் கூறப்பட்ட கட்டமைப்பு குறித்த ஆதாரங்கள் கிடைத்துள்ளன. தற்போது நடக்கும் அகழாய்வில் கி.மு. 580 முந்தைய நாகரிகம் என மாறியுள்ளது. கீழடி அகழாய்வு தொடர்ந்தால் மிகப் பெரிய நாகரிக வரலாற்று ஆதாரங்கள் வெளிப்படுவது உறுதி. ராமநாதபுரம் அழகன்குளம் அகழாய்வில் பாண்டிய மன்னர் அமைத்த துறைமுக நகரம் 1983 - 84 ல் கண்டறியப்பட்டது. அப்போது அகழாய்வை விரிவாக மேற்கொண்டிருந்தால் கூடுதல் தகவல்கள், ஆதாரங்கள் கிடைத்திருக்கும்.

தற்போதைய சூழ்நிலையில் வீடுகள் நிறைந்த அழகன்குளம் அகழாய்வுக்கு ஏற்றதாக இல்லை. இதுபோன்ற எண்ணற்ற தொல்லியல் மேடுகள் கண்முன்னே அழிக்கப்பட்டு வருவது வேதனையளிக்கிறது. கீழடியில் 2015 - 16 ல் முதல் முதலாக 43 குழிகள் தோண்டி அகழாய்வு செய்தோம். அப்போது ஒரு செழிப்பான நகர நாகரிகம் இருந்ததற்கான ஆதாரங்கள் வெளிப்பட்டன. வட இந்தியர் கூறுவது போல் தமிழினம் ஒரு குழு தான், என்பது கீழடி ஆதாரம் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது.

ஆராய்ச்சியாளர்கள் ரிச்சி, வசந்த்ஷிண்டே தங்களது டி.என்.ஏ. பரிசோதனை ஆய்வு மூலம் சிந்து சமவெளி நாகரிகம் என்பது தென்னிந்திய பழங்குடியினர் தான் என அறிவியல் பூர்வமாக நிரூபித்து கடந்த செப்.,19 ல் அறிக்கை வெளியிட்டனர். இதன் மூலம் சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரரிகத்தை தழுவியது என்பதற்கான உறுதியான, அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

எனவே, கீழடி அகழ்வாராய்ச்சியை இரண்டு, மூன்று ஆண்டுகளோடு நிறுத்தி விடாமல் குறைந்தபட்சம் 15 ஆண்டுகளாவது தொடர்ந்தால் தான் சங்ககால இலக்கியத்தில் கூறப்பட்ட கட்டமைப்புக்களை உறுதிபடுத்த இயலும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.rajagopalan - chennai ,இந்தியா
15-அக்-201913:22:37 IST Report Abuse
s.rajagopalan ஆராய்ச்சிகள் தொடரட்டும். அது நம் சரித்திர அறிவை பெருக்க உதவும். ஆனால் நாம் இன்று எப்படி இருக்கிறோம்....அன்றைய பழக்க வழக்கங்கள் இன்றைக்கு ஒத்து வருமா ....மேடைகளிலும் , பட்டி மன்றங்களிலும் பேச பயன்படும் ...இதை தவிர இந்த கண்டு பிடிப்புகளினால் "எப்படி இருந்த நாம் ..இப்படி ஆயிட்டோம் ..." என்று கணிக்க உதவலாம். அவ்வளவே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X