சித்தா ஆயுர்வேத படிப்பில் 500 இடங்கள் நிலை என்ன| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சித்தா ஆயுர்வேத படிப்பில் 500 இடங்கள் நிலை என்ன

Added : அக் 14, 2019

சென்னை : 'சித்தா ஆயுர்வேதம் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் காலியாக உள்ள 500க்கும் மேற்பட்ட இடங்களின் நிலை குறித்து இன்று அறிவிப்பு வெளியாகலாம்' என இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் சித்தா ஆயுர்வேதம் யுனானி ஓமியோபதி படிப்புகளுக்கு 1538 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான கவுன்சிலிங் 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறுகிறது. முதற்கட்ட கவுன்சிலிங்கில் 1100 இடங்கள்நிரம்பின. இதில் காலியாக உள்ள இடங்கள் மற்றும் கவுன்சிலிங்கில் இடங்கள் பெற்று சேராத இடங்கள் என 500க்கும் மேற்பட்ட இடங்கள் தற்போது காலியாக உள்ளன.

முதற்கட்ட கவுன்சிலிங்கில் இடங்கள் பெற்றவர்கள் அந்தந்த கல்லுாரிகளில் சேர நேற்றுடன் கடைசி நாள். ஆனால் இடங்களை பெற்ற மாணவர்கள் சிலர் கல்லுாரிகளில் சேர ஆர்வம் காட்டவில்லை. இதனால் சித்தா மருத்துவ படிப்புகளில் காலி இடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது குறித்து இந்தியமருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை அதிகாரிகள் கூறியதாவது: நீட் தேர்வு தகுதி மதிப்பெண்ணை குறைத்தால் மட்டுமே இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடத்தப்படும்.

இல்லையேல் இடமாறுதல் கவுன்சிலிங் மட்டுமே நடத்த முடியும். இது தொடர்பாக மத்திய ஆயுஷ் அமைச்சகம் இன்று அறிவிப்பு வெளியிட வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X