பொது செய்தி

தமிழ்நாடு

சாலை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மனு

Added : அக் 14, 2019
Advertisement

விழுப்புரம்:சாலை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, நாவற்குளம் கிராம பொதுமக்கள், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.வானுார் அடுத்த நாவற்குளத்தைச் சேர்ந்த பொதுமக்கள், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு:எங்கள் பகுதியில் உள்ள அன்னை வேளாங்கண்ணி நகரின் வடக்கு பகுதியில் நாங்கள் சென்று வருவதற்காக சாலை போடப்பட்டுள்ளது.ஒரு சிலர், இந்த சாலையை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ளனர். இதனால், ஊருக்குள் சென்று வர மக்கள் வழியின்றி சிரமப்படுகின்றனர்.இது தொடர்பாக, கலெக்டர் அலுவலகத்தில் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இந்த மனுவை, கலெக்டர் பரிசீலனை செய்து, சாலை ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேர்தல் நன்னடத்தை விதிமுறையையொட்டி, கலெக்டர் அலுவலகம் கீழ்தளத்தில் உள்ள பெட்டியில் மனுவை போட்டுச் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X