பொது செய்தி

இந்தியா

9 நாளில் அரசு வங்கிகள் வழங்கிய கடன் ரூ.81,800 கோடி!

Updated : அக் 16, 2019 | Added : அக் 14, 2019 | கருத்துகள் (54)
Advertisement
 அரசு வங்கிகள், வழங்கிய கடன் ரூ.81,800 கோடி, பொருளாதாரம்

புதுடில்லி: பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், தொழில் நிறுவனங்களுக்காக நடத்தப்பட்ட கடன் திருவிழாவில், 81 ஆயிரத்து, 781 கோடி ரூபாய் கடன்களை, வங்கிகள் வினியோகித்துள்ளன. அடுத்த கட்டமாக, வரும், 21 - 25ம் தேதி வரை, மீண்டும் கடன் திருவிழாவை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிகவும் மந்தமாக உள்ளது. இந்தாண்டின் முதல் காலாண்டில், பொருளாதார வளர்ச்சி, 5 சதவீதமாக இருந்தது. பொருளாதார வளர்ச்சியை உயர்த்தும் வகையில், கார்ப்பரேட் வரியை மத்திய அரசு குறைத்தது.


ஆலோசனை:

இவ்வாறு பல்வேறு நடவடிக்கைகளை, மத்திய அரசு எடுத்து வருகிறது. கடந்த மாதம், 14ம் தேதி, பொதுத் துறை வங்கி களுடன், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, அப்போது நிர்மலா சீதாராமன் கூறியதாவது: பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், எம்.எஸ்.எம்.இ., எனப்படும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன்கள் வழங்க, வங்கிகள் முன் வந்துள்ளன. வங்கிகளில் போதிய நிதி உள்ளது. இதற்காக, அக்., 1 முதல், 9 வரை, 'லோன் மேளா' எனப்படும் கடன் திருவிழா, நாடு முழுவதும் நடத்தப்படும். இதைத் தவிர, பெரிய வர்த்தக நிறுவனங்கள், எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு, 40 ஆயிரம் கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளன.


தள்ளுபடி:

இந்தத் தொகையையும், 'பில் டிஸ்கவுண்டிங்' எனப்படும் திட்டத்தை பயன்படுத்தி, பெரிய நிறுவனங்கள் தங்களுக்கு தர வேண்டியதில், சிறிது தள்ளுபடி செய்து தொகைகளை பெற்றுக் கொள்ளவும், எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு வாய்ப்பு தரப்படும். நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்கும்படி, பெரிய நிறுவனங்களுக்கு, வர்த்தக விவகாரத் துறை மூலம் கடிதம் எழுதப்படும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

அதன்படி, நாடு முழுவதும், பொதுத் துறை வங்கிகள் மூலம், கடன் திருவிழா நடந்தது. இது குறித்து, மத்திய நிதித் துறை செயலர் ராஜிவ் குமார், டில்லியில் நேற்று கூறியதாவது: மத்திய அரசு அறிவித்த கடன் திருவிழாவில், ஒன்பது நாட்களில், 81 ஆயிரத்து, 781 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதில், 34 ஆயிரத்து, 342 கோடி ரூபாய் புதிய கடன்களாகும். இதைத் தவிர, பெரிய நிறுவனங்கள், எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய தொகையும் வழங்கப்பட்டுள்ளது.

பொதுத் துறை வங்கிகளில் போதிய நிதி உள்ளது. உரிய விதிகளின்படி, கடன்களை பெற்றுக் கொள்ளலாம். இரண்டாவது கட்டமாக, 21 - 25 வரை, கடன் திருவிழா மீண்டும் நடத்தப்பட உள்ளது. வரும், 27ல் தீபாவளி கொண்டாடுவதற்கு முன், தொழில் துறையினருக்கு உதவும் வகையில், இந்தத் திருவிழா நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


'வங்கிகள் இணைப்பு சுமுகம்'

பொதுத் துறை வங்கிகளின் தலைவர்களுடன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நேற்று ஆலோசனை நடத்தினார். அதன்பின், அவர் கூறியதாவது: பல்வேறு வங்கிகளை இணைப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. திட்டமிட்டபடி, அதற்கான பணிகள் சுமுகமாக நடந்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.


நிதி அமைச்சரின் கணவர் பா.ஜ.,வுக்கு, 'அட்வைஸ்'

மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமனின் கணவர், பரகால பிரபாகர், ஒரு ஆங்கில பத்திரிகையில் கட்டுரை எழுதியுள்ளார். பிரபல அரசியல் பொருளாதார நிபுணரான பிரபாகர், ஆந்திர அரசின் தொலை தொடர்பு ஆலோசகராக இருந்துள்ளார்.

அவர் எழுதியுள்ள கட்டுரையில் கூறியுள்ளதாவது: நாட்டில் தற்போதுள்ள பொருளாதார சிக்கல்கள் குறித்த கருத்துகளை மறுக்கும் கொள்கையில், பா.ஜ., உள்ளது. நிலைமையை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். 'மேக்ரோ' எனப்படும் பெரிய அளவிலான வியூகங்கள் மட்டும் போதாது. சர்தார் வல்லபபாய் படேலை, தங்களுடைய அரசியலுக்கான மிகப் பெரும் தலைவராக பா.ஜ., முன்னிலைப்படுத்தி வருகிறது. நேருவை எதிர்ப்பதால், காங்கிரசையும், பா.ஜ., எதிர்க்கிறது.

அதே நேரத்தில், காங்.,கைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் மற்றும் அப்போது நிதி அமைச்சராக இருந்த மன்மோகன் சிங் ஆகியோர் இணைந்து வடிவமைத்த பொருளாதார நடவடிக்கைகள், இதுவரை எந்த எதிர்ப்பையும் சந்திக்கவில்லை. அந்தக் கொள்கைகள் தற்போதுள்ள சூழ்நிலைக்கும் பொருந்தும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ashak - jubail,சவுதி அரேபியா
17-அக்-201901:44:36 IST Report Abuse
ashak கார்ப்பரேட்டை ஊக்குவிக்க
Rate this:
Share this comment
Cancel
15-அக்-201920:50:56 IST Report Abuse
ஆப்பு சரி சீனா மொபைல் போன் வேண்டாம் இந்திய மொபைல் வாங்கலாம்னு நமது பெரும் பணக்காரர் அம்பானி கடைக்குப் போனா ஜியோ போனெல்லாம் மேட் இன் வியட்னாம்னு சொல்லி விக்கிறாங்க. இந்த லட்சணத்துல இருக்கு நம்ம மேக் இன் இந்தியா திட்டம். எப்போ பொருளாதாரம் வளர்ந்து?
Rate this:
Share this comment
Cancel
PANDA PANDI - Aththipatti,இந்தியா
15-அக்-201920:16:13 IST Report Abuse
PANDA PANDI மக்களை கடனில் தள்ள தீவிரம். இது ஒரு வகையில் தீவரவாதமே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X