ஆதார் இணைப்பு விசாரணை; உச்ச நீதிமன்றம் மறுப்பு

Updated : அக் 16, 2019 | Added : அக் 15, 2019 | கருத்துகள் (5)
Advertisement
ஆதார்,இணைப்பு,விசாரணை,உச்ச நீதிமன்றம்,மறுப்பு

புதுடில்லி : சமூக வலைதள கணக்குகளை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று தொடரப்பட்டுள்ள புதிய மனுவை விசாரணைக்கு ஏற்க, உச்ச நீதிமன்றம் மறுத்தது.

'பேஸ்புக், வாட்ஸ் ஆப்' போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு ஆதாரை கட்டாயமாக்க கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை, சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இதுபோல், மும்பை மற்றும் மத்திய பிரதேச உயர் நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. 'இந்த வழக்குகள் அனைத்தையும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும்' என, பேஸ்புக் நிறுவனம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில், கடந்த மாதம் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

சமூக வலைதள கணக்குகளை, ஆதாருடன் இணைக்க உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய், உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்தார். அதை விசாரணைக்கு ஏற்க மறுத்து, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 'இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே விசாரித்து வருகிறது. தேவையானால், அங்கு மனு தாக்கல் செய்யலாம்' என, உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ananthakrishnan - Thanjavur,இந்தியா
15-அக்-201923:26:40 IST Report Abuse
Ananthakrishnan சமூக வலை தளங்களில் ஆதார் இணைப்பை கட்டாயம் ஆக்கினால், facebook, WhatsApp போன்றவைகளை விட்டு பெரும்பான்மை உறுப்பினர்கள் விலகி விடுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
15-அக்-201919:40:15 IST Report Abuse
ஆப்பு சும்மா இருங்கப்பா..அயோத்தி வழக்கு முதலில் முடியட்டும்.
Rate this:
Share this comment
Cancel
Krishna - bangalore,இந்தியா
15-அக்-201911:48:49 IST Report Abuse
Krishna Democracy Involves Free Opposition. No Freedom With Aadhar Mental ID Means Slavery Due To Dictatorship Worse Than Indira Gandhi. Govt Stooges Dont Know That Anti Govt People Can Be Targeted
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X