ரூ.2,000 அச்சிடுவது நிறுத்தம்; கறுப்புப் பணம் தடுக்க நடவடிக்கை

Updated : அக் 16, 2019 | Added : அக் 15, 2019 | கருத்துகள் (24+ 34)
Advertisement
RBI,ஆர்.பி.ஐ.,ரிசர்வ் வங்கி,ரூ.2000,அச்சிடுவது,நிறுத்தம்,கறுப்புப் பணம்,தடுக்க,நடவடிக்கை

புதுடில்லி: நாட்டில் 2000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் குறைந்துள்ளது குறித்து ஆங்கில நாளிதழ் சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி கேட்கப்பட்டிருந்தது. இதற்கு ரிசர்வ் வங்கி அளித்துள்ள பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:


மதிப்பிழப்பு:

கடந்த 2016ல் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் உயர் மதிப்புடைய 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டன. அப்போது 354 கோடி எண்ணிக்கையிலான 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டன. இதைத் தொடர்ந்து 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுவது படிப்படியாக குறைக்கப்பட்டது.


நான்கு கோடி:

இதன்படி 2017 - 18ம் நிதியாண்டில் 11 கோடி எண்ணிக்கையிலான நோட்டுகளும் 2018 - 19ம் நிதியாண்டில் நான்கு கோடி எண்ணிக்கையிலான நோட்டுகளும் அச்சிடப்பட்டன. இந்த நிதியாண்டில் இதுவரை 2000 ரூபாய் நோட்டுகள் எதுவுமே அச்சிடப்படவில்லை. உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டு என்பதால் இதை பலரும் பதுக்கி வைக்கின்றனர். இதனால் கறுப்புப் பணப் புழக்கமும் அதிகரித்து உள்ளது. இதை தடுப்பதற்காகவே 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையை பொருளாதார நிபுணர்கள் வரவேற்றுள்ளனர். அவர்கள் கூறியதாவது: ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால் 'ஆன்லைன்' பணப் பரிவர்த்தனை அதிகரிக்கும். உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை திடீரென செல்லாது என அறிவித்தால் மக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். ஆனால் அதன் புழக்கத்தை படிப்படியாக குறைத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது.


வழக்கமானதே :

இதன் மூலம் கறுப்புப் பண பரிமாற்றம் முற்றிலும் தடுக்கப்படும். ஐரோப்பிய நாடுகளில் இதுபோன்ற நடவடிக்கைகள் வழக்கமானதே. ஆனால் நம் நாட்டில் முறைசாரா துறைகள் விவசாய துறைகளில் பெரும்பாலும் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுவதால் சிரமங்கள் ஏற்படுவதை கருத்தில் வைத்து இது போன்ற நடவடிக்கைகள் மிக அரிதாகவே நிகழும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (24+ 34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anandan - chennai,இந்தியா
16-அக்-201908:10:42 IST Report Abuse
Anandan ஊழல் ஒழிந்திடும், கள்ளப்பணம் ஒழிந்துடும், கருப்பு பணம் ஒழிந்துடும் அப்படினு கூவுனாங்க அதற்க்கு எவ்வளவு பேர் முட்டுக்குடுத்தாங்க, எங்கடா போனீங்க?
Rate this:
Share this comment
Cancel
Anandan - chennai,இந்தியா
16-அக்-201908:09:38 IST Report Abuse
Anandan பணமதிப்பிழப்பு நடந்து இந்த 2000 நோட்டு வெளியிட்டபோது இனி கள்ளப்பணம் வர வாய்ப்பே இல்லையென்றார்கள் இன்று அப்படியே தலைகீழ். இந்த மூடர்கள் ஆட்சியை இன்னுமா மக்கள் நம்புகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
16-அக்-201900:00:41 IST Report Abuse
Pugazh V உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டு என்பதால் இதை பலரும் பதுக்கி வைக்கின்றனர். இதனால் கறுப்புப் பணப் புழக்கமும் அதிகரித்து உள்ளது// ஆஹா.. கருப்பு பணம் ஒழிக்க பட்டுவிட்டது என்று சொல்லி வந்ததெல்லாம் பொய், மக்களை ஏமாற்றிய செயல் என்று இவர்களே ஒத்துக்கொண்டு விட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X