பொது செய்தி

இந்தியா

தேசம் எழுந்து சொல்லும் கலாம் 'சலாம்'

Added : அக் 15, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
இன்று அப்துல் கலாம் பிறந்த தினம்இந்திய இளைஞர்களின் கனவு நாயகனாக திகழ்ந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இது தமிழகத்தில் இளைஞர் எழுச்சி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இவரது கண்டுபிடிப்புகள், அறிவியல் தொழில்நுட்பத்துக்கு ஆற்றிய பங்கு, மாணவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்த்ததது போன்றவை மறக்க முடியாதது.ராமேஸ்வரத்தில் 1931
தேசம் எழுந்து சொல்லும் கலாம் 'சலாம்'


இன்று அப்துல் கலாம் பிறந்த தினம்

இந்திய இளைஞர்களின் கனவு நாயகனாக திகழ்ந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இது தமிழகத்தில் இளைஞர் எழுச்சி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இவரது கண்டுபிடிப்புகள், அறிவியல் தொழில்நுட்பத்துக்கு ஆற்றிய பங்கு, மாணவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்த்ததது போன்றவை மறக்க முடியாதது.

ராமேஸ்வரத்தில் 1931 அக்., 15ல் பிறந்தார். துவக்கக் கல்வியை ராமேஸ்வரத்திலும், உயர்நிலை படிப்பை ராமநாதபுரத்திலும் முடித்தார். தமிழ் வழிக் கல்வியிலேயே படித்த இவர், திருச்சியில் பி.எஸ்சி., இயற்பியல் பட்டம் பெற்றார். பின் எம்.ஐ.டி.,யில் ஏரோனாட்டிக்கல் இன்ஜினியரிங் முடித்தார்.


அணு விஞ்ஞானி:

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டி.ஆர்.டி.ஓ., ) விஞ்ஞானியாக, பணியில் சேர்ந்தார். இந்திய ராணுவத்திற்கு சிறிய ரக ஹெலிகாப்டரை வடிவமைத்ததே அவரின் முதல் பணி. 1969ல் இஸ்ரோவுக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். அங்கு, இந்தியாவின் முதல் உள்நாட்டு செயற்கைக்கோளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

எஸ்.எல்.வி., 3, பி.எஸ்.எல்.வி., போன்ற ராக்கெட் திட்டங்களை உருவாக்கினார். இஸ்ரோ, 1970ல் எஸ்.எல்.வி., ராக்கெட் மூலமாக 'ரோகிணி 1' செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது, அக்னி, பிரித்வி போன்ற ஏவுகணை உருவாக்குவதில் பெரும்பங்கு வகித்தார். 1992-ஜூலை- - 1999 டிச., வரை டி.ஆர்.டி.ஓ.,வின் தலைமை அறிவியல் ஆலோசகராக இருந்தார். அப்போதுதான், பொக்ரான் அணுகுண்டு சோதனையை நடத்தி, இந்தியாவை அணு ஆயுத நாடாக மாற்றினார்.

நாட்டின் 11வது ஜனாதிபதியாக 2002ல் பொறுப்பேற்றார். நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்களை சந்தித்து, அவர்களின் தன்னம்பிக்கையை வளர்த்தார். ஜனாதிபதி பதவிக்காலத்துக்கு பின் எதிர்கால சந்ததியை உருவாக்கும் முயற்சியில் இறுதி மூச்சு வரை பாடுபட்டார். 2015 ஜூலை 27ல் மேகாலயாவின் ஷில்லாங்கில் மறைந்தார்.


விருதுகள்:

பாரத ரத்னா, பத்ம விபூஷண், பத்ம பூஷன், கவுரவ டாக்டர் பட்டம் உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார். தன் வாழ்க்கை வரலாற்றை 'அக்னிச் சிறகுகள்' என்ற புத்தகமாக எழுதியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jisuki - Doha,கத்தார்
15-அக்-201921:54:42 IST Report Abuse
jisuki இந்த உலகம் இருக்கும் வரை இவர் புகழ் இருக்கும்.
Rate this:
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
15-அக்-201905:42:44 IST Report Abuse
 nicolethomson வணங்குகிறேன் இளைஞ இளைஞிகளே , உங்களுள்ளே தான் அவர் வாழ்ந்து கொண்டுள்ளார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X