அயோத்தி வழக்கின் இறுதி கட்ட விசாரணை துவக்கம்

Updated : அக் 16, 2019 | Added : அக் 15, 2019 | கருத்துகள் (35)
Advertisement
அயோத்தி, இறுதி கட்ட, விசாரணை ,துவக்கம்,முஸ்லிம், ஸ்ரீராம் பஞ்சு

புதுடில்லி : உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை நேற்று துவங்கியது. முஸ்லிம்கள் தரப்பில் நேற்று வாதங்கள் முன் வைக்கப்பட்டன. 'நிலம் எங்களுக்கே சொந்தம்' என முஸ்லிம் தரப்பில் வாதிடப்பட்டது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் 2010ல் தீர்ப்பு அளித்தது. 'சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம் நிர்மோஹி அகாடா ராம் லல்லா பிரித்துக் கொள்ள வேண்டும்' என தீர்ப்பில் கூறப்பட்டது.

இதை எதிர்த்து 14 வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்தப் பிரச்னை குறித்து சமரசம் ஏற்படுத்திக் கொள்ள மூன்று பேர் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்திருந்தது. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கலிபுல்லா வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பிரபல வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர். பல்வேறு தரப்பினருடன் இந்தக் குழு நடத்திய பேச்சில் சமரசம் ஏற்படவில்லை.

அதைத் தொடர்ந்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு ஆக. 5 முதல் தினசரி விசாரித்து வருகின்றது. நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே டி.ஒய். சந்திரசூட் அசோக் பூஷண் எஸ்.ஏ. நசீர் இந்த அமர்வில் இடம் பெற்றுள்ளனர். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் நவ. 17ல் ஓய்வு பெறுகிறார். அன்றைய தினம் தீர்ப்பு அளிப்பதற்கு வசதியாக வழக்கின் விசாரணையை விரைவாக முடிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி அனைத்து தரப்பு வாதங்களும் அக். 17க்குள் முடிக்கவும் தீர்ப்பு எழுதுவதற்கு நான்கு வாரங்கள் அவகாசம் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டது. இதில் முஸ்லிம்கள் தரப்பில் நேற்று வாதங்கள் முன் வைக்கப்பட்டன. இன்றும் நாளையும் ஹிந்துக்கள் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட உள்ளன. வரும் 17ல் இரு தரப்பும் இறுதி வாதங்களை முன் வைக்க உள்ளன.

வழக்கு விசாரணையின் 38வது நாளான நேற்று முஸ்லிம்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராஜிவ் தவான் வாதிட்டதாவது: சர்ச்சைக்குரிய நிலம் முஸ்லிம்களுக்கே சொந்தமானது. நிர்மோஹி அகாடா உள்ளிட்டோருக்கு இதில் உரிமை உள்ளதாக எந்த ஆதாரமும் இல்லை. தொல்லியல் துறை அறிக்கையில் கோவில் இடிக்கப்பட்டு அங்கு மசூதி கட்டப்பட்டதற்கு எந்த ஆதாரமும் காட்டப்படவில்லை. கடந்த 1934ல் இருந்து தங்களுடைய கட்டுப்பாட்டில் சர்ச்சைக்குரிய இடம் இருப்பதாக ஹிந்துக்கள் கூறுகிறார்கள். ஆனால் அதற்கான ஆதாரமும் தாக்கல் செய்யவில்லை. பாபர் மசூதி இருந்த இடம் முஸ்லிம்களுக்கே சொந்தம். இவ்வாறு அவர் வாதிட்டார்.

அப்போது அமர்வு குறுக்கிட்டு சில கேள்விகளை எழுப்பியது. அதற்கு ராஜிவ் தவான் கூறியதாவது: இந்த வழக்கில் எங்களை தரப்பின் வாதங்களின் போது மட்டுமே அமர்வு பல்வேறு கேள்விகளை கேட்டு வந்துள்ளது. ஆனால் ஹிந்துக்கள் தரப்புக்கு எந்தக் கேள்வியையும் எழுப்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு ஹிந்துக்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன் எதிர்ப்பு தெரிவித்தார். இன்று ஹிந்துக்கள் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட உள்ளன.


விளக்கேற்ற தடை:

'தீபாவளி பண்டிகையின்போது அயோத்தியில் 5100 விளக்குகள் ஏற்ற அனுமதிக்க வேண்டும்' என வி.எச்.பி. எனப்படும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு அனுமதி கேட்டிருந்தது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துடன் வி.எச்.பி. நிர்வாகிகள் நேற்று பேச்சு நடத்தினர். அப்போது 'விளக்குகள் ஏற்ற அனுமதிக்க முடியாது' என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றம் 1993ல் அளித்த உத்தரவில் 'சர்ச்சைக்குரிய நிலத்தில் தலைமை பூஜாரிகள் வழக்கமான பூஜைகள் மட்டுமே செய்ய அனுமதிக்கப்படும்; மற்றபடி வேறு எந்த மதம் தொடர்பான நிகழ்ச்சிகளும் நடைபெறக்கூடாது' என கூறியுள்ளதை சுட்டிக் காட்டி அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.


தடை உத்தரவு:

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கின் விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளதாவது: தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வருவதாலும் உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படலாம் என்பதாலும் வரும் டிச. 10 வரை அயோத்தியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அயோத்திக்கு வருவோரின் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. அரசின் இந்த முடிவுக்கு ஹிந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.


பாதுகாப்பு வழங்க உத்தரவு:

உத்தர பிரதேச வக்பு வாரியத் தலைவர் ஜாபர் அகமது பரூக்கிக்கு முழு பாதுகாப்பு அளிக்கும்படி உத்தர பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 'தன்னுடைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதாக பரூக்கி கூறியுள்ளார். அதனால் அவருக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும்' என உச்ச நீதிமன்றம் நியமித்த சமரசக் குழுவில் உள்ள மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு கடிதம் எழுதியிருந்தார். அதனடிப்படையில் இந்த உத்தரவை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பிறப்பித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s t rajan - chennai,இந்தியா
15-அக்-201923:32:01 IST Report Abuse
s t rajan எங்கிருந்தோ வந்து எங்க ஆலயங்களை இடித்து எங்கள் மக்களை (ஏ)மாற்றி கொலை கொள்ளைகள் செய்து வாழும் உங்களுக்கு எங்கள் அயோத்தியில் இடமா ? ஆனாலும் உங்களுக்கு அதிகமான சலுகைகள் கொடுத்த ஜனநாயகத்திற்கு நல்ல பாடம் தான் ?
Rate this:
Share this comment
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
15-அக்-201923:27:45 IST Report Abuse
ரத்தினம் "பிரச்னைக்குரிய இடத்துல போய்த்தான் தீபம் ஏத்துவானுக தூணிலும் துரும்பிலும் இருக்கானு தெரியுது அங்க போய்த்தான் தீபம் ஏத்துவீர்களோ" இப்படியே எல்லாரும் ஒன்னுன்னு இளிச்சிகிட்டு நீங்க சொல்வீங்க. முஸ்லீம் எப்பவும் அப்படி சொல்ல மாட்டாங்க. அவங்க பார்வைல நீங்க காபிர் .
Rate this:
Share this comment
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
15-அக்-201921:33:55 IST Report Abuse
Rajagopal பாபரின் ஆணையில் இந்து கோயில் இடிக்கப் பட்டு ஒரு மசூதி கட்டப்பட்டதை மீர் பாகி என்பவர் பட்டாவில் எழுதியிருக்கிறார். இது மட்டுமல்ல, முஸ்லீம் அரசர்கள் பல இடங்களில் இந்து கோயில்களை இடித்து அதன் மேல் மசூதி கட்டியிருக்கிறார்கள். காசி விசுவநாதர் கோயிலின் புனிதம் கெடுக்கப்பட்டு அதன் ஒரு பாதியில் மசூதி இருக்கிறது. மதுராவில் அதே போல. டெல்லியில் முதன் முதலாக, பிருதிவி ராஜை தோற்கடித்ததும், கோரி முஹம்மதின் அடியாட்கள் அங்கிருந்த இந்து கோயில் மேல் குதுப் மினாரைக் கட்டினார்கள். அதற்குப் பெயர், "கவ்வாத் உல் இஸ்லாம்" (இஸ்லாமின் வலிமை). அங்கேதான் புகழ் வாய்ந்தத் துருப்பிடிக்காத தூண் இருக்கிறது. எங்கு சென்றாலும் முஸ்லிம்கள் ஏற்கனவே இருப்பதைத் தங்களதாக்கிக் கொண்டு, அதைத் திரும்பத் தர மறுக்கிறார்கள். இசுரேலில் டோம் ஆப் தி ராக் என்ற இடத்தில் மசூதியைக் கட்டி வைத்திருக்கிறார்கள். துருக்கியில் ஹாகியா சோபியாவின் கதியும் அதேதான். இவர்கள் மற்றவர்களின் மத சார்பின்மையைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். அவர்களை பொறுத்தவரை மற்றவர்களுக்கு இடம் எதுவும் கிடையாது. உரிமைகளும் கிடையாது. மற்றவர்கள் பெரும்பான்மையாக இருந்தால் உடனே தங்களது உரிமைகளுக்காவும், சலுகைகளுக்காகவும் போராடிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் பெரும்பான்மையானால், மற்றவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. துருக்கிய, இஸ்லாமிய சுல்தான்கள் செய்த மாற்றங்களை நாம் திரும்ப மாற்ற வேண்டும். இந்திய நமது நாடு. நமது கோயில்கள் நமக்கு சொந்தம். அடுத்தவர்கள் ஆக்கிரமித்துக்கொண்டு அதில் உரிமை கொண்டாட விடக்கூடாது. மத சார்பின்மை என்றால் இந்துக்கள் அனைவரும் இளித்த வாயர்கள் என்று பொருளல்ல. அவர்களது மசூதிகளை இடித்து அவற்றின் மேல் கோயில்கள் கட்ட வேண்டும் என்று யாரும் கேட்கவில்லை. எங்களது பாரம்பரியத்துக்கு சொந்தமானதை விட்டு விலகுங்கள் என்று கேட்கிறோம். அதுவும் சட்ட பூர்வமாகக் கேட்கிறோம். இதே முஸ்லீம் நாடாக இருந்தால், எந்த மசூதியின் மீதும் ஒரு கோயிலோ, சர்ச்சோ இருந்தால் கேட்டுக் கொண்டு இருக்க மாட்டார்கள். நேராக அடுத்து மசூதியைக் கட்டி முடித்திருப்பார்கள். நாம் இளித்த வாயர்களாக, முதுகெலும்பில்லாதவர்களாக எத்தனை காலம்தான் இருப்போம்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X