இந்தியர் அபிஜித் பானர்ஜிக்கு நோபல் பரிசு

Updated : அக் 16, 2019 | Added : அக் 15, 2019 | கருத்துகள் (9)
Advertisement
Nobel Prize,abhijit banerjee,Indian,Abhijit,இந்தியர்,அபிஜித் பானர்ஜி,நோபல்

ஸ்டாக்ஹோம் : அமெரிக்காவில் வசிக்கும் இந்தியரான அபிஜித் பானர்ஜி 58 உட்பட மூன்று பேருக்கு இந்த ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதார துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, உள்ளிட்ட பிரிவுகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு விட்டன.

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வசிக்கும் பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜி அவரது மனைவியும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவருமான எஸ்தர் டப்லோ அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார அறிஞர் மைக்கேல் கிரிமர் ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது. இந்தப் பரிசு தங்கப் பதக்கம் 6.52 கோடி ரூபாய் ரொக்கமும் கொண்டது.

பொருளாதார நிபுணர்கள் அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டஃப்லோ, மைக்கேல் க்ரெமர் ஆகியோருக்கு Abhijit Banerjee, Esther Duflo and Michael Kremer பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது. உலகளவில் வறுமையை ஒழிப்பதற்கான வழிவகைகளை சோதனை முறையில் ஆராய்ந்து வெற்றிகரமான அணுகுமுறையை உருவாக்கியதற்காக இந்த மூவருக்கும் பொருளாதார நோபல் பரிசு வழங்கப்படுவதாக, நோபல் பரிசுக் குழு தெரிவித்துள்ளது.

உலக அளவில் வறுமை ஒழிப்பிற்கான முன்னோடி திட்டங்களை வகுத்ததால் இந்த மூவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது. பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற இரண்டாவது பெண் என்ற பெருமையை எஸ்தர் டப்லோ பெற்றுள்ளார்.


பல விருதுகள் பெற்றவர்:


அபிஜித் பானர்ஜி 1961 பிப். 21ல் மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் பிறந்தார். இவரது பெற்றோர் கல்லுாரியில் பொருளாதார பேராசிரியர்களாக பணியாற்றினர். இவர் எம்.ஏ. பொருளாதாரம் முடித்தார். பின் 1998ல் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலையில் பிஎச்.டி. முடித்தார்.

ஹார்வர்டு பிரின்ஸ்டன் பல்கலையில் பொருளாதார பேராசிரியராக பணியாற்றிய இவர் தற்போது அமெரிக்காவின் எம்.ஐ.டி. கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றுகிறார். 'அமெரிக்கன் அகாடமி ஆப் ஆர்ட்ஸ் அண்டு சயின்ஸ் ஜெரால்டு லியோப் இன்போசிஸ்' ஆகிய விருதுகளை பெற்றுள்ளார். பொருளாதாரம் தொடர்பாக பல புத்தகங்களை எழுதியுள்ளார். இவர் முதலில் அருந்ததி என்பவரை திருமணம் செய்தார். பின் விவாகரத்து செய்தார். இவரிடம் பிஎச்.டி. ஆய்வுக்கு ஆலோசனை பெற்ற எம்.ஐ.டி. பேராசிரியை எஸ்தர் டப்லோவை 2015ல் திருமணம் செய்தார்.


நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்:


1) ரவீந்திரநாத் தாகூர், இலக்கியம், 1913
2) சி.வி.ராமன், இயற்பியல், 1930
3) அன்னை தெரசா, அமைதி, 1979
4) அமர்த்திய சென், பொருளாதாரம், 1998
5) கைலாஷ் சத்யார்த்தி, அமைதி, 2014


வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்:


1) ஹர் கோபிந்த் குரானா மருத்துவம், 1968, அமெரிக்கா
2) சுப்ரமணியன் சந்திரசேகர், இயற்பியல், 1983, அமெரிக்கா
3) வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், வேதியியல் 2009, பிரிட்டன், அமெரிக்கா
4) அபிஜித் பானர்ஜி, பொருளாதாரம், 2019, அமெரிக்கா

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
16-அக்-201900:09:25 IST Report Abuse
Pugazh V /-JNU வில் படித்திருக்கிறார் என்பது இவர் எப்படி போவார் என்பதை யோசிக்கவைக்கிறது// நக்கல் ஏன் இங்கே JNU வில் படித்த நிதி அமைச்சர் நி.சீ ராமனை இழுக்கிறது??
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
15-அக்-201917:41:14 IST Report Abuse
jagan 'பானர்ஜி" - ஹும்...வங்காளி அ வா...எங்க போனாலும் சாதிக்கிறார்கள், நம்ம நாட்டில் மட்டும் தான் இந்த இடது சாரி மற்றும் த்ரவிஷன்கள் பேச்சை கேட்டு அவாளை விரட்டி அவர்கள் திறமை நமக்கு பயன் படாமல் செய்கிறோம் ....ஏன்?
Rate this:
Share this comment
Cancel
G.Prabakaran - Chennai,இந்தியா
15-அக்-201912:12:31 IST Report Abuse
G.Prabakaran ஆனால் அமர்த்திய சென்னை போல இவரையும் பிஜேபிக்கு புடிக்காதே. நல்ல மெத்த படித்தவர்களான நோபல் பரிசு பெற்றவர்கள் ரகுராம் ராஜன் மன்மோகன் சிங் போன்ற மிக சிறந்த பொருளாதார வல்லுநர்கள் கூறும் யோசனைகள் எல்லாம் இந்த அரசு கேட்காதே. நிர்மலா சீதாராமனின் கணவர் பார்க்கல பிரபாகர் ராவ் அவர்கள் நேற்று பிரபல ஆங்கில பத்திரிகையில் எழுதி உள்ள கட்டுரையை இந்த அரசின் பொருளாதார வல்லுநர்கள் படிக்க வேண்டும். நரசிம்ம ராவ் மன்மோகன் சிங்கின் பொருளாதார கொள்கைகளை பின்பற்றவேண்டிய அவசியத்தை நன்கு எடுத்துரைத்துள்ளார். இன்னமும் காங்கிரஸ் மீது உள்ள வெறுப்பு அரசியலாலேயே இந்த நாட்டின் பொருளாதார சீரழிவிற்கு இந்த அரசு காரணமாய் இருக்க போகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X