பொது செய்தி

இந்தியா

அத்வானி, ஜோஷி அரசு பங்களாவில் தங்க மத்திய அரசு அனுமதி

Updated : அக் 15, 2019 | Added : அக் 15, 2019 | கருத்துகள் (21)
Advertisement
அத்வானி, ஜோஷி அரசு பங்களாவில், தங்க அனுமதி

புதுடில்லி: பாதுகாப்பு காரணங்களுக்காக அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் அரசு பங்களாவிலேயே தங்க மத்திய அரசு அனுமதி அளித்தது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியில் அமர்ந்தது. முன்னதாக லோக்சபா கலைக்கப்பட்டு, இரண்டு மாதங்களாகியும், 35க்கும் மேற்பட்ட முன்னாள் எம்.பி.,க்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாக்களை இன்னும் காலி செய்யவில்லை.





இந்நிலையில் டில்லி பிருத்விராஜ்சாலை மற்றும் ரெய்ஸினா சாலை, லூட்யன்ஸ் என்ற பகுதியில் உள்ள அரசு பங்களாவில் பா.ஜ. மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் வசித்து வந்தனர். பாதுகாப்பு காரணங்களுக்காக இவர்கள் இருவரும் அதே பங்களாவில் வசிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
15-அக்-201911:45:42 IST Report Abuse
Lion Drsekar அழும் பிள்ளைகளுக்கு விளையாட்டு பொம்மைபோல் இவர்களுக்கு பதவி கொடுக்க முடியவில்லை அப்படி இருக்க கடைசி காலத்தில் அரசு பங்களா மற்றும் பாதுகாப்பு கொடுத்தால் அவர்களுக்கு அதுவே ஒரு மிகப் பெரிய பரிசாகும், வாய் திறக்காமல் இருப்பார்கள், மேலும் கட்சியிலும் சத்யராஜ் படத்தில் வருவது போல் கட்சியினர்களோ அல்லது மக்களோ நினைக்கமாட்டார்கள் அல்லவா. வந்தே மாதரம்
Rate this:
Share this comment
s.rajagopalan - chennai ,இந்தியா
15-அக்-201912:43:47 IST Report Abuse
s.rajagopalanஇருவரும் மரியாதைக்குரியவர்களே கை , வாய் ..இரண்டும் சுத்தம். இவர்களையும் திருட்டு ரயிலில் வந்த ஆசாமிகளையும் ஒரே தராசில் எடை போடுவது நியாயமல்ல....
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
15-அக்-201912:48:14 IST Report Abuse
சுந்தரம் ராஜகோபாலன் அவர்களே, இந்த இருவரையும் டாக்டர் சேகர் அவர்கள் திருட்டு ரயிலில் வந்த ஆசாமிகளுடன் ஒரே தராசில் எடை போடவில்லையே. நீங்களாக முன்வந்து அப்படி எடை போடுவானேன்?...
Rate this:
Share this comment
Ray - Chennai,இந்தியா
17-அக்-201915:46:04 IST Report Abuse
Rayதிருட்டு ரயில் தானே சம்பாதித்து வீடு வாங்கி அதிலேயே காலங்காலமாய் பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வாழ்ந்து முடிந்தாரே ஒழிய ஓசி கவர்மெண்ட் பங்களாவில் சட்ட விரோதமாக குடியிருக்கவில்லை சிறப்பு விதி விலக்கு பெற அவர் தலையில் எழுதவில்லை...
Rate this:
Share this comment
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
15-அக்-201910:01:47 IST Report Abuse
சுந்தரம் அம்பது பேருல ரெண்டு பேருக்கு விலக்கு கொடுக்க காரணம் கண்டு புடிச்சாச்சு. மீதி நாப்பத்தெட்டு பேருக்கு என்ன காரணம் கண்டு புடிச்சு விலக்கு கொடுக்கலாம்.
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
15-அக்-201910:30:13 IST Report Abuse
சுந்தரம் அந்த அம்பது பேரும் எந்த கட்சிக்காரங்கன்னு அன்னிக்கு செய்தியில் போடாம மறைச்சாலும் இப்போ தெரிஞ்சு போச்சு....
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
15-அக்-201910:43:05 IST Report Abuse
சுந்தரம் எந்த கட்சின்னு பேரு போடாம அம்பது முன்னாள் எம்பிக்கள் பங்களாக்களை காலி செய்ய மறுப்புன்னு நியூஸ் போட்டபோது கொந்தளிச்ச பக்தர்கள் இப்போ பியூஸ் போன பல்பு ஆயிருப்பாங்க இந்நேரம்....
Rate this:
Share this comment
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
15-அக்-201906:24:30 IST Report Abuse
Nathan வாடகை தருகிறார்கள், ஆனால் நளினி வீட்டுக்கு செட்டி தந்த மாதிரி மாசத்துக்கு 24 லட்சம் இல்லை.
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
15-அக்-201913:09:28 IST Report Abuse
சுந்தரம் வாடகை தருகிறார்கள் என்பது நியாயமல்ல. அப்படி என்றால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான எல்லா வீடுகளையும் தனியாருக்கு கூடுதல் வாடகைக்கு விட்டுவிடலாமே என்ற வாதம் எழும். இப்போது கூட அரசு எடுத்த முடிவு தவறு. அவர்களை எம்பிக்களுக்கான வீடுகளை காலி செய்ய சொல்லிவிட்டு அவர்கள் தங்கும் இடத்திற்கு பாதுகாப்பு செய்து கொடுத்து இருக்கலாம். அப்படி செய்திருந்தால் நல்ல முன்மாதிரியாகஇருந்திருக்கும். கடந்த நான்கு மாதங்களாக முன்னாள் எம்பிக்களைக் காலி செய்ய சொல்லி எடுத்த நடவடிக்கைகள் இப்போது இவர்களுக்கு கொடுத்த விலக்கு சலுகைகள் மூலம் சறுக்க ஆரம்பித்துள்ளது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X