'ஹபீஸ் சயீதுக்கு தண்டனை குடுங்க'; பாக்.குக்கு அமெரிக்கா 'அட்வைஸ்'

Updated : அக் 16, 2019 | Added : அக் 15, 2019 | கருத்துகள் (5)
Advertisement
ஹபீஸ் சயீது, தண்டனை குடுங்க, பாக்., அமெரிக்கா , அட்வைஸ்

வாஷிங்டன்: 'லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீது மற்றும் கைது செய்யப்பட்டுள்ள அதன் முக்கிய மூத்த தலைவர்கள் மீது பாக். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அமெரிக்கா கூறியுள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் 2008ல் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீது. இந்த 'வழக்கின் விசாரணைக்காக அவரை ஒப்படைக்க வேண்டும்' என இந்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையே 2012ல் அமெரிக்கா ஹபீஸ் சயீதை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது. ஹபீஸ் சயீது குறித்து தகவல் அளிப்போருக்கு 70 கோடி ரூபாய் பரிசு அளிக்கப்படும் என்றும் அறிவித்தது.

இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிரிவின் தலைவர் அலைஸ் வெல்ஸ் கூறியுள்ளதாவது: பாக். சமீபத்தில் லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த நான்கு முக்கிய பயங்கரவாதிகளை கைது செய்துள்ளது. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இந்த நால்வர் மற்றும் அந்த அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீது மீது உரிய நடவடிக்கையை பாக். எடுக்க வேண்டும். இவர்கள் தண்டிக்கப்படுவதை அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

எப்.ஏ.டி.எப். எனப்படும் பண மோசடி மற்றும் பயங்கரவாத அமைப்புக்கு நிதி தடுப்பை கண்காணிக்கும் அமைப்பின் கூட்டம் விரைவில் நடக்க உள்ளது. கடந்தாண்டு ஜூனில் நடந்த கூட்டத்தில் பாக்.கை 'கிரே' நிறம் எனப்படும் மிகவும் மோசம் என்ற பட்டியலில் சேர்த்தது. வரும் கூட்டத்தில் பாக். கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படலாம் என்ற நிலை உள்ளது. இந்நிலையில் அமெரிக்கா இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Khaithan,குவைத்
15-அக்-201914:53:31 IST Report Abuse
Balaji பாகிஸ்தான் தனது நிலைப்பாட்டிலிருந்து மாறாத வரை எதுவும் பயங்கரவாதத்திற்கு எதிராக நடந்து விடப்போவதில்லை...... ஆனால் அந்நாட்டு ராணுவத்திற்கு அதிக அதிகாரங்கள் இருப்பதால் ஆட்சியாளர்களால் பயங்கரவாதத்தை எதிர்க்க தயங்குகிறார்கள்..... பாக். ராணுவம் எத்தனை முறை வளர்த்துவிட்டவர்கள் கையாலேயே குத்து வாங்கினாலும் திருந்தப்போவதில்லை........
Rate this:
Share this comment
Cancel
15-அக்-201913:52:18 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் அவர்கள் தீவிரவாதம் செய்வது அடுத்த நாட்டில் , தீவிரவாதத்திற்கு வரும் பணம் பாகிஸ்தானிற்கு தொழில் முதலீடு , அங்கெ இந்த தொழிலை விட்டால் வேறு தொழில் இல்லை . ஆகவே நடவடிக்கை எல்லாம் எடுக்கமாட்டார்கள். என்ன ஆதாரம் கொடுத்தாலும் , இது சரியில்லை என்று சொல்லிவிட்டு வேறு வேலை பார்ப்பார்கள். நீங்கள் பணம் , பொருட்கள் பிச்சை போடுவதை நிறுத்துங்கள். எல்லாம் சரியாகிவிடும்
Rate this:
Share this comment
Cancel
Arasu - Ballary,இந்தியா
15-அக்-201911:28:12 IST Report Abuse
Arasu எதுவும் செய்ய முடியாது. அவர்களே ஒருவருக்குள் ஒருவர் அடித்துக்கொண்டு சாக நேரிடும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X