ஐ.ஏ.எஸ்., அதிகாரியாகி சாதித்த பார்வையற்ற பெண்

Updated : அக் 15, 2019 | Added : அக் 15, 2019 | கருத்துகள் (18)
Advertisement

திருவனந்தபுரம் : நாட்டிலேயே முதல் முறையாக, பார்வையற்ற பெண் ஒருவர், ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக தேர்வு பெற்று, திருவனந்தபுரம் துணை கலெக்டராக பதவியேற்று சாதித்து காட்டியுள்ளார்.






மஹாராஷ்டிர மாநிலம், உல்ஹாஸ் நகரைச் சேர்ந்தவர், பிரன்ஜால் பாட்டீல், 31. இவருக்கு, 6 வயதாக இருக்கும் போதே, இரண்டு கண்களிலும் பார்வை பறிபோனது. ஆனாலும், சோர்ந்து விடாமல், எப்படியாவது உயர் கல்வி படித்து, சாதித்து காட்ட வேண்டும் என்ற மன உறுதியுடன் இருந்தார். முதுநிலை பட்டம் பார்வையற்றோருக்கான பள்ளியில் படிப்பை முடித்து, கல்லுாரியில் சேர்ந்தபோது, ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக வேண்டும் என்ற ஆர்வம், அவரிடம் அதிகரித்தது. மும்பை, புனித சேவியர் கல்லுாரியில், அரசியல் அறிவியல் பாடத்தில் பட்டம் பெற்ற பிரன்ஜால், பின், டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில், முதுநிலை பட்டம் பெற்றார்.

இதற்கு பின், ஐ.ஏ.எஸ்., கனவை நிறைவேற்றும் முயற்சியில் இறங்கினார். தன் முதல் முயற்சியில், 2016ல், மத்திய அரசு பணியாளர் தேர்வில் வெற்றி பெற்று, தேசிய அளவில், 773வது இடத்தை பிடித்தார். அடுத்தாண்டில் மீண்டும் தேர்வெழுதி, தேசிய அளவில், 124வது இடத்தை பிடித்து, ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக தேர்ச்சி பெற்றார். இதன் மூலம், நாட்டின் முதல் பார்வையற்ற பெண், ஐ.ஏ.எஸ்., அதிகாரி என்ற பெருமை, இவருக்கு கிடைத்தது.






முயற்சி


கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்ட உதவி கலெக்டராக பணியில் சேர்ந்தார். இதில் சிறப்பாக பணியாற்றியதை அடுத்து, திருவனந்தபுரம் மாவட்ட துணை கலெக்டராக நேற்று பொறுப்பேற்றார். பிரன்ஜாலுக்கு, திருவனந்தபுரம் கலெக்டர் கோபாலகிருஷ்ணன், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இது குறித்து, பிரன்ஜால் பாட்டீல் கூறியதாவது: பார்வை பறிபோனாலும், ஒருபோதும் நான் சோர்வடைந்தது இல்லை. பார்வையற்ற பெண் என, மற்றவர்கள் என் மீது இரக்கம் காட்டுவதும் பிடிக்காது. எந்த ஒரு பிரச்னை என்றாலும், முயற்சியை ஒருபோதும் கைவிட்டு விடக் கூடாது; தோல்வியை ஏற்கக் கூடாது. நம் இலக்கை அடையும் வரை, முயற்சியை தொடர வேண்டும். முயன்றால் முடியாதது எதுவுமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
17-அக்-201914:45:37 IST Report Abuse
இந்தியன் kumar உடலில் ஊனம் இருக்கலாம் உள்ளத்தில் இல்லை ஊனம் . நேர்மையாக ஆட்சி பணி செய்ய வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
17-அக்-201914:44:07 IST Report Abuse
இந்தியன் kumar நேர்மையானவர்கள் அதிகாரிகளாக வருவது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் மிகவும் நல்லது. வாழ்த்துக்கள் சகோதரி.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
15-அக்-201914:18:26 IST Report Abuse
Bhaskaran மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்ந்து சாதனை படைக்க வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X