போலீஸ் முத்திரையுடன்... மிரட்டுது போலி... டாக்டர்கள் கிலி| Dinamalar

'போலீஸ்' முத்திரையுடன்... மிரட்டுது போலி... டாக்டர்கள் 'கிலி'

Updated : அக் 15, 2019 | Added : அக் 15, 2019
Share
''எ ன்னக்கா, தீபாவளிக்கு இன்னும் ரெண்டு வாரம் கூட இல்லை. இன்னும் பர்ச்சேஸ் பண்ணலை. புதுசா வந்திருக்கிற ரகம் காலியாகிடப் போகுது. இன்னைக்கு போகலாமா,'' என்றபடி, வீட்டுக்குள் நுழைந்தாள் மித்ரா.வராண்டாவில் அமர்ந்து, நாளிதழ்களை புரட்டிக் கொண்டிருந்தாள் சித்ரா.''கடைத்தெருவுல கூட்டம் மொய்க்குது; வீக் எண்ட்டுல போனா, அவ்ளோ தான்; மூச்சு விட முடியாத அளவுக்கு நெருக்கடி
 'போலீஸ்' முத்திரையுடன்... மிரட்டுது போலி... டாக்டர்கள் 'கிலி'

''எ ன்னக்கா, தீபாவளிக்கு இன்னும் ரெண்டு வாரம் கூட இல்லை. இன்னும் பர்ச்சேஸ் பண்ணலை. புதுசா வந்திருக்கிற ரகம் காலியாகிடப் போகுது. இன்னைக்கு போகலாமா,'' என்றபடி, வீட்டுக்குள் நுழைந்தாள் மித்ரா.வராண்டாவில் அமர்ந்து, நாளிதழ்களை புரட்டிக் கொண்டிருந்தாள் சித்ரா.''கடைத்தெருவுல கூட்டம் மொய்க்குது; வீக் எண்ட்டுல போனா, அவ்ளோ தான்; மூச்சு விட முடியாத அளவுக்கு நெருக்கடி இருக்காம். ரெண்டு நாள் கழிச்சு போவோமே,''''ஓகே, ரெண்டு நாள் கழிச்சே போவோம். கவர்மென்ட் ஆபீசர்ஸ் பீதியில இருக்காங்களாம். அதைப்பத்தி செய்தி ஏதாவது பிரசுரமாகி இருக்கா,'' என, நோண்டினாள் மித்ரா.''ஏம்ப்பா, தீபாவளி நேரம், கரன்சி கை மாற வாய்ப்பிருக்கு. லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ்காரங்க யாருக்கும் வலை விரிச்சிருக்காங்களா...''''அதில்லைக்கா, விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்துற சம்பந்தமான வழக்கு ரொம்ப நாளா நடந்துட்டு இருக்கு. வர்ற, நவ., 11ம் தேதி ஐகோர்ட் தீர்ப்பு சொல்லப் போகுது. நில ஆர்ஜிதம் தொடர்பாகவும், இழப்பீடு கொடுக்குறது தொடர்பாகவும், 'லேட்' பண்ணிட்டே இருந்தா, உத்தரவு கடுமையா இருக்கும்னு நீதிபதிங்க சொல்லிருங்காங்களாம்...''''மித்து, நம்ம அதிகாரிங்க லேசுப்பட்டவங்களா. இதுக்கெல்லாம் பயப்பட மாட்டாங்க. 'ரெடிமேடு' பதில் நிறையா தயார் செஞ்சு வச்சிருப்பாங்க'' என, 'அசால்ட்'டாக கூறினாள் சித்ரா.''அக்கா, இந்த தடவை, வழக்கு சீரியசா போகுது. இழப்பீடு வழங்க 'லேட்' ஆச்சுன்னா, தொகையை வட்டியோட தரணும்; வட்டியை, அதிகாரிங்க சம்பளத்துல பிடித்தம் பண்ணித் தரணும்னு உத்தரவு போடுவோம்னு சொல்லிட்டாங்களாம். அதனால, வரப்போற கண்டத்துல எப்படி தப்பிக்கிறதுன்னு, யோசிச்சிட்டு இருக்காங்களாம்...''''இன்னொரு அதிகாரியை, சம்பளத் தொகையில இருந்து, ரூ.50 ஆயிரம் கட்டச் சொன்னாங்களாமே...''''அதுவா, கோவைப்புதுார், குற்றாலம் நகர்ல, 'ரிசர்வ் சைட்' ஆக்கிரமிப்பை எடுக்காம இருக்கறது சம்பந்தமா, ஐகோர்ட்டுல வழக்கு நடக்குது. கார்ப்பரேஷன் கமிஷனர் ஆஜராகணும்; இல்லேன்னா, சம்பளத் தொகையில இருந்து, ரூ.50 ஆயிரம் 'டிபாசிட்' செலுத்தணும்னு ஆர்டர் போட்டிருக்காங்க. அதனால, கமிஷனர் ஆஜராகிட்டாரு.''நேத்து கூட, அந்த கேஸ் விசாரணைக்கு வந்துருக்கு. கார்ப்பரேஷன் தரப்புல ஏ.டி.பி.ஓ., நிலத்தை வித்தவங்க, வாங்குவனவங்க தரப்புல ஆஜராகியிருக்காங்க. சம்பந்தப்பட்ட நிலத்துக்கு பட்டா இருக்குன்னு காட்டியிருக்காங்க. அதனால, அடுத்த விசாரணையில, தாசில்தார் ஆஜராகணும்னு ஐகோர்ட் உத்தரவு போட்டிருக்காம்...''''அச்சச்சோ... அப்புறம்...''''மக்களுக்கு தேவையான வசதிகளை செஞ்சு கொடுக்க வேண்டியது, மாவட்ட நிர்வாகத்தோட கடமை. அதனால, அதிகாரிகளை ஐகோர்ட் தண்டிக்க ஆரம்பிச்சிடுச்சு. அதனால, ஆபீசர்ஸ் பீதியில சுத்துறாங்க''''இருந்தாலும், சில அதிகாரிங்க தில்லா பேரம் பேசுறாங்களே...''''ஆமாக்கா, தெற்கு தாசில்தார் ஆபிஸ் இ-சேவை மையத்துல வாரிசு சான்று கேட்டு விண்ணப்பிச்சா, வி.ஏ.ஓ., - ஆர்.ஐ., பரிந்துரை செஞ்சதுக்கு அப்புறமும், ஒரிஜினல் ஆவணங்களோடு நேரில் வரவும்னு, பதில் கொடுக்குறாங்களாம். நேர்ல போனா, சொத்து மதிப்புக்கு ஏற்ப ஆயிரக்கணக்குல பேரம் பேசுறாங்களாம். லஞ்ச ஒழிப்புத்துறைக்காரங்க கண்காணிச்சா, யாரையாவது துாக்கலாம்,'' என்றாள் மித்ரா.''மித்து, லஞ்ச ஒழிப்புத்துறை 'ரெய்டு' நடத்தியும் கூட, அந்த அதிகாரி தப்பிச்சிட்டாரே...''''வடக்கு ஆர்.டி.ஓ., ஆபீசுலல நடந்த, 'ரெய்டு' பத்தி சொல்றீங்களா. அந்த அதிகாரிக்கு போலீஸ் வட்டாரத்துல நெருக்கம் ஜாஸ்தியாம். 'ரெய்டு' வரப்போற தகவல் கெடைச்சதும், 'எஸ்கேப்' ஆகிட்டாரு. பணத்தை மட்டும் பறிமுதல் செஞ்சிட்டு வந்துருக்காங்க,''''இந்த விவகாரத்துல, அவமானப்பட்ட மேலதிகாரி, யாரை குறி வச்சு, விஜிலென்ஸ் அதிகாரிங்க வந்தாங்களோ, அவரை கூப்பிட்டு, புத்திமதி சொல்லியிருக்காரு. அவரோ, 'நீங்க, ஒங்களை காப்பாதிக்கிற வேலையை பாருங்க; எப்படி தப்பிக்கிறதுன்னு எனக்குத் தெரியும்னு சொல்லிட்டாராம். மேலதிகாரி, ரொம்பவே 'அப்செட்'டுல இருக்காராம்,''''புரோக்கர் பிரதர்ஸ் ஆதிக்கமும் அதிகமாக இருக்கன்னு சொல்றாங்களே...'' என, நோண்டினாள் சித்ரா.''அது, நடக்குறது, மேற்கு ஆர்.டி.ஓ., ஆபீசுல. அங்க, அதிகாரியே இல்லை. தெற்குக்கு பொறுப்பானவர், வாரத்துக்கு ஒரு தடவை வந்துட்டு போறாரு. புரோக்கர் பிரதர்ஸ், ஆர்.டி.ஓ., ரேஞ்ச்க்கு 'கெத்து' காண்பிச்சிட்டு இருக்காங்களாம்,''''இன்னொரு விஷயமும் கேள்விப்பட்டேன். அரசு அதிகாரிகளையும், டாக்டர்களையும் ஒரு குரூப் மிரட்டி, பணம் வசூலிக்குதாமே...''''ஆமாக்கா, போலி நிருபர்கள் நிறையப் பேர் சுத்திக்கிட்டு இருக்காங்க. 'போலீஸ்'ங்கிற வார்த்தை வர்ற மாதிரி, பத்திரிைக்கு பேரு வச்சிருக்காங்க. 'ஐ.பி.எஸ்.,' அதிகாரிகள் அணியும் தொப்பி' முத்திரையையும் முறைகேடா பிரின்ட் பண்ணி விசிட்டிங் கார்டு, போலி அடையாள அட்டை அடிச்சிக்கிறாங்க. சுந்தராபுரத்துல பிரான்ச் ஆபீசாம். ஒவ்வொரு டிபார்ட்மென்ட் அதிகாரியையும் பார்த்து, மாசம் மாசம் வருவோம். குறிப்பிட்ட தொகை தரணும். இல்லேன்னா, ஒங்களை பத்தி தாறுமாறா செய்தி வெளியிடுவோம்ன்னு மிரட்டுறாங்களாம்...''''அச்சச்சோ... அப்புறம்...''''இப்ப, படிச்சு, பதிவு பெற்ற டாக்டர்களையும் மிரட்டுறாங்களாம். சமீபத்துல கோவை புறநகர்ல இருக்கிற சித்தா டாக்டர நேரில் போய் மிரட்டியிருக்காங்க; அவர் மசியல. அடுத்தநாள் போன்ல கூப்பிட்டு மிரட்டிட்டு ஆள துாதுவிட்டாங்களாம். அப்செட் ஆன அந்த டாக்டர், போலீஸ் கமிஷனர் கிட்ட புகார் தர முடிவு செஞ்சிருக்காராம்...''''இந்த பிரச்னைக்கு தீர்வே இல்லையா...'' என, நொந்து கொண்டாள் சித்ரா.''ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, ஜவுளிக்கடை ஒனரையும், கார்ப்பரேஷன் அதிகாரியையும் மிரட்டுன போலி நிருபர்கள கைது செஞ்சு, சிறைக்கு அனுப்புனாங்க. அந்த மாதிரி அதிரடிய சிட்டி போலீஸ் ஆரம்பிச்சா நல்லது...''''எப்பவுமே, அரசாங்க அலுவலகத்துல நடக்குற சங்கதிய துல்லியமா சொல்ற. அரசியல் சேதி சொல்ல மாட்டேங்கிறீயே...'' என, வம்புக்கு இழுத்தாள் சித்ரா.''அரசியல் செய்தி இல்லாமலா... கொஞ்ச நாளைக்கு முன்னாடி, சொத்து வரி உயர்வை ரத்து செய்யணும்னு, தி.மு. க., கட்சிக்காரங்க ஆர்ப்பாட்டம் செஞ்சாங்க; ஆயிரம் பேர் கூட இருக்காது. அதிலும். 'ரிமாண்ட்'டுக்கு பயந்து, ஏகப்பட்ட பேரு ஓடிட்டாங்க. 350 பேரே கைதாகி இருக்காங்க. இந்த கட்சியில, நிர்வாகிகளே, 2,000 பேர் இருக்காங்களாம். அவுங்க வந்திருந்தாலே, கூட்டம் அதிகமாகி இருந்துருக்கும்ன்னு பேசிக்கிட்டாங்க,''''சொத்து வரி உயர்வு எல்லாத்தையும் தானே பாதிக்கும்; ஏன் வர மாட்டேங்கிறாங்க...''''கட்சி நிர்வாகிங்க பலரும், மறைமுகமா, ஆளுங்கட்சிக்கு 'சப்போர்ட்' பண்ணிட்டு, எதிர்க்கிற மாதிரி நடிக்கிறதா, கட்சிக்குள்ள பேசிக்கிறாங்க. வார்டுக்கு, 50 பேர் வீதம், 100 வார்டுக்கு, 5,000 பேரை திரட்டணும்னு, ஆலோசனை கூட்டத்துல, சொல்லியிருந்தாங்க. நிர்வாகிங்க மேல தொண்டர்களுக்கு நம்பிக்கை இல்லாததால, எந்த போராட்டத்துக்கும் கூட்டம் வர்றதில்லையாம்...''''ஓ... அப்படியா,'' என்றபடி, டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி, ஏகப்பட்ட பேரு, அரசு மருத்துவமனையில் 'அட்மிட்'டாகி இருக்கிற செய்தியை படித்த சித்ரா, ''எட்டு கோடி ரூபாய் மதிப்புக்கு வாங்குன மெஷினை பயன்படுத்தாம வச்சிருக்காங்களாமே...'' என, கிளறினாள்.''ஆமாக்கா, நரம்பியல் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கிறதுக்காக, 'பை-பிளேன் கேத் லேப்' அமைச்சுருக்காங்க. இங்கு பணிபுரியறதுக்கு நியமிக்கப்பட்ட டாக்டர், 'டிரான்ஸ்பர்' வாங்கிட்டு, வேற ஊருக்கு போயிட்டாராம். இப்ப, அந்த மெஷின் காட்சிப்பொருளா இருக்குது. புது டாக்டர் நியமிக்காம, நிர்வாகம் வேடிக்கை பார்க்குது,''''போலி பில் தயாரிச்சு, பணம் எடுக்குறதாவும் கேள்விப்பட்டேனே...''''அடடே... ஒங்களுக்கு அதுவும் தெரிஞ்சு போச்சா. ஆஸ்பத்திரியில ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் வேலை பார்க்குறாங்க. கண்காணிக்குற பொறுப்புல இருக்கிற சிலர், உறவினர்கள் பெயரில் வங்கி கணக்கு துவங்கி, வேலை பார்க்குறதா கணக்கு காமிச்சு, பணத்தை சுருட்டுறாங்களாம். ஒவ்வொரு மாசமும் பல லட்ச ரூபாய் எடுக்குறாங்கன்னு சொன்னாங்க,'' என்ற மித்ரா, 'டிவி'யை 'ஆன்' செய்தாள்.கள்ள நோட்டு கும்பல் கைதான செய்தி, ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.அதைக்கேட்ட சித்ரா, ''என்னப்பா, நம்மூர்ல மறுபடியும் கள்ள நோட்டு கலாசாரம் பரவுது. ரொம்பவே ஜாக்கிரதையா இருக்கணும் போலிருக்கு,''''ஆமாக்கா, பண்டிகை நேரத்துல, ஈசியா மாத்திரலாம்னு, அந்த கும்பல் களமிறங்கியிருக்கு. ஏழு பேரை போலீஸ்காரங்க கைது செஞ்சிட்டாங்க; ரெண்டு பேரை தேடிட்டு இருக்காங்க. ஆனா, எவ்ளோ நோட்டு புழக்கத்துல போயிருக்குன்னு தெரியலை,''''அதெல்லாம் சரி, போலீஸ் உயரதிகாரிங்க, ஸ்பெஷல் டீமுக்கு போறதுக்கு விரும்புறாங்களாமே...'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் சித்ரா.''ஆமாக்கா, அடுத்த மாச கடைசியில, உள்ளாட்சி தேர்தல் நடத்துறதுக்கு ஏற்பாடு நடந்துக்கிட்டு இருக்கு. இடைத்தேர்தல் முடிவு வெளியானதுக்கு அப்புறம், அறிவிப்பு வரும்னு சொல்றாங்க. மூணு வருஷத்துக்கு அதிகமாகவும், சொந்த ஊரிலும் பணியில் இருக்கிற அதிகாரிங்களை, வேறிடத்துக்கு மாத்துறதுக்கு எலக்சன் கமிஷன் உத்தரவு போட்டிருக்கு.''பசையுள்ள பதவியில இருக்கிற போலீஸ் அதிகாரிங்க, ஸ்பெஷல் டீமுக்கு போயிட்டு, எலக்சன் முடிஞ்சதும் திரும்பி வரலாம்னு நெனைக்கிறாங்க. அதுக்கான, 'மூவ்'வுல ஏகப்பட்ட பேரு ஈடுபட்டுட்டு இருக்காங்க...''''ஓ... அப்படியா...'' என்றவாறு, சமையலறைக்குள் நுழைந்தாள் சித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X