பொது செய்தி

இந்தியா

நன்கொடையாளர் பட்டியல் முதலிடத்தில்ஷிவ் நாடார்

Updated : அக் 15, 2019 | Added : அக் 15, 2019 | கருத்துகள் (34)
Advertisement
நன்கொடையாளர் பட்டியல்

மும்பை: நாட்டில் அதிக நன்கொடை அளித்தோர் பட்டியலில் கம்ப்யூட்டர் மென்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள எச்.சி.எல். நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார் முதலிடத்தில் உள்ளார்.
மிகப் பெரிய வர்த்தக நிறுவனங்கள் பெரும் பணக்காரர்கள் தங்களுடைய வருமானத்தில் இருந்து சமூக நலத் திட்டங்களுக்கு நன்கொடைகள் அளிக்கின்றனர்.

கம்பெனி சட்டத்தின்படி ஒவ்வொரு நிறுவனமும் தங்களுடைய லாபத்தில் இரண்டு சதவீதத்தை சமூக நலப் பணிகளுக்கு செலவிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதில் அதிக நன்கொடை அளித்தோர் குறித்து தனியார் அமைப்பு ஒன்று பட்டியல் வெளியிட்டுள்ளது. அதன்படி 2018ல் அதிக நன்கொடை அளித்தோரில் எச்.சி.எல். நிறுவனத் தலைவர் ஷிவ் நாடார் 826 கோடி ரூபாயுடன் முதலிடத்தில் உள்ளார்.

'விப்ரோ' நிறுவனத்தின் தலைவர் அசிம் பிரேம்ஜி 453 கோடி ரூபாயுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். நாட்டின் பெரும் பணக்காரர்களில் முதலிடத்தில் உள்ள 'ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்' தலைவர் முகேஷ் அம்பானி 402 கோடி ரூபாயுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivaprakasam Manickam - Chennai,இந்தியா
17-அக்-201911:46:30 IST Report Abuse
Sivaprakasam Manickam வேலை வாய்ப்பில் பின்தங்கியுள்ள மாவட்டங்களில் உள்ள படித்த பட்டதாரி களுக்கு வேலை வழங்கி அவர்களது வாழ்வாதாரத்தை முன்னேற்றத்திற்கு கொண்டு வருவதற்காக அரசாங்கம் கார்பொரேட் நிறுவனங்களுக்கு 99 ஆண்டுகளுக்கு குறைந்த விலையில் நிலமும், தடையில்லா மின்சாரமும், தண்ணீர் பற்றாக்குறை இல்லாமலும் கொடுத்ததும், அவர்களுக்கு வேலை கொடுப்பதற்காக (நன்கு படித்து அதிக மார்க்குகள் பெற்ற மாணவர்களிடமும்) ரூபாய் இரண்டு லட்சத்திற்கும் மேல் பணம் வசூலித்து கொண்டு தானே இந்த கார்பொரேட் நிறுவனங்கள் வேலை வாய்ப்பளிக்கின்றன, அரசாங்கம் எதற்காக இத்தனை சலுகைகளை வழங்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Believe in one and only God - chennai,இந்தியா
15-அக்-201918:55:58 IST Report Abuse
Believe in one and only God நாடார் சமுதாயத்தினர் படித்தவர்கள், பண்புள்ளவர்கள். தென்தமிழகத்தை பொய் பார்த்தல் தெரியும். மத வேறுபாடு இல்லாதவர்கள்.
Rate this:
Share this comment
karutthu - nainital,இந்தியா
15-அக்-201919:54:50 IST Report Abuse
karutthuமத வேறுபாடு இல்லாதவர்கள்???...
Rate this:
Share this comment
Cancel
S Ramkumar - Tiruvarur,இந்தியா
15-அக்-201918:46:55 IST Report Abuse
S Ramkumar அய்யா கார்பரேட்டுகளுக்கு எதிராக கூவும் கனவான்களே இதற்கு என்ன சொல்ல வருகிறீர்கள்.
Rate this:
Share this comment
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
16-அக்-201906:15:50 IST Report Abuse
 nicolethomsonஅவங்க கட்சிக்கு , அவங்க மதத்துக்கு இவர் எவ்ளோ கொடுத்தார் என்று லிஸ்ட் வந்தால் கூவுவதை நிறுத்துவார்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X