'லகரம்' இங்கே, 'தகரமா' அடிவாங்குது!

Updated : அக் 15, 2019 | Added : அக் 15, 2019 | |
Advertisement
தெருக்களில், மக்களின் கூட்டமும், வாகன நெரிசலும், தீபாவளி நெருங்கி விட்டதை உணர்த்தியது. அந்த நெரிசலுக்குள் சித்ராவும், மித்ராவும் எறும்பு ஊர்வதை போல் சென்று கொண்டிருந்தனர்.''கிடைக்கிறது ஒரு சண்டே. இன்னைக்கு டிரஸ் எடுத்திட்டா, அடுத்த வாரம், கொஞ்சம் ப்ரீயா இருக்கலாமுன்னு வந்தா, என்ன இவ்ளோ கூட்டம்,'' என்று மலைத்தாள் சித்ரா.''ஆமாக்கா... எல்லாம் வெளியூர்க்காரங்கதான்.
'லகரம்' இங்கே, 'தகரமா' அடிவாங்குது!

தெருக்களில், மக்களின் கூட்டமும், வாகன நெரிசலும், தீபாவளி நெருங்கி விட்டதை உணர்த்தியது. அந்த நெரிசலுக்குள் சித்ராவும், மித்ராவும் எறும்பு ஊர்வதை போல் சென்று கொண்டிருந்தனர்.''கிடைக்கிறது ஒரு சண்டே. இன்னைக்கு டிரஸ் எடுத்திட்டா, அடுத்த வாரம், கொஞ்சம் ப்ரீயா இருக்கலாமுன்னு வந்தா, என்ன இவ்ளோ கூட்டம்,'' என்று மலைத்தாள் சித்ரா.''ஆமாக்கா... எல்லாம் வெளியூர்க்காரங்கதான்.
ஒரு வாரத்துக்கு முன்னாடியே அவங்கெல்லாம் ஊருக்கு போவாங்க. அதனாலதான் இவ்ளோ 'ரஷ்'ஷா இருக்கு,'' என்றாள் மித்ரா.''சரிடி மித்து. கூட்டம் கொஞ்சம் குறையட்டும். அதுக்குள்ள 'லைட்'டா, டிபன் சாப்பிட்டுக்கலாம்,'' என்றவாறு, ஓட்டல் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தினாள்.இருவரும் ஆர்டர் கொடுத்து விட்டு காத்திருந்தனர்.''நடக்காத கூட்டத்துக்கு, 300 ரூபா கொடுத்தாங்களாம்,'' சித்ரா சொன்னதும், ''அது.. எங்க நடந்த கூத்துங்க்கா?'' மித்ரா ஆர்வமானாள்.''எம்.ஜி.ஆரின் அம்மா பேரில் இயங்கும் கூட்டுறவு சங்கத்துல, ஒரு வருஷமா கூட்டம் நடத்தாமலேயே, 'ஓட்டிட்டு' இருந்தாங்க. இதைப்பத்தி, இயக்குனர்கள் முணுமுணுக்க ஆரம்பிச்சிட்டாங்களாம்,''''இதை தெரிஞ்சுகிட்ட சங்க தலைவர், 'மூனு' கூட்டம் நடத்தியிருக்கோணும். ஒரு கூட்டத்துக்கு, 300 ரூபாய் போட்டு, ஆயிரமா கொடுத்திட்டாராம். கையோட, அவங்க வீட்டுக்கு 'லெட்ஜர்' எடுத்துட்டுப்போயி, கையெழுத்து வாங்கிட்டு வந்துட்டாராம்,'' சித்ரா விளக்கினாள்.''ஆமாங்க்கா, 'மாஜி' தலைவ ருக்கு இந்த விஷயம் தெரியுமா?''''ம்... ம்... தெரியாம இருக்குமா? 'சடையப்ப' வள்ளல் மாதிரி கொடுத்தா போதுமா, இதை வெச்சே 'ஆட்டம்' காட்றேன்னு, சவால் விட்டாராம்,'' என்றாள் சித்ரா.''ஒரே கட்சியில இவ்ளோ பிரச்னையா? பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு'' சொன்ன மித்ரா, ''பூ மார்க்கெட் கடைகளில், கார்ப்ரேஷன் சார்பில், 'செம' கலெக்ஷன் பார்த்துட்டாங்களாம், தெரியுங்களா?'' என்றாள்.''அப்படியா, தெரியாதே...!''''அக்கா... ஆயுதபூஜைக்கு, பூ மார்க்கெட் ரோட்ல நடந்து போகவே மக்கள் ரொம்பவே கஷ்டப்பட்டாங்க.
தள்ளுவண்டி வியாபாரிங்களும், மத்தவங்களும் ரோட்டுக்கு வந்து கடை போட்டுட்டாங்க. இதைப்பார்த்துட்டு, பூ மார்க்கெட் வியாபாரிங்களும் ரோட்டில் வியாபாரம் செஞ்சாங்க,''''என்னடா, இதை கார்ப்ரேஷன் அதிகாரிங்க கண்டுக்க மாட்டாங்களானு நினைச்சுட்டு இருந்தோம். அப்புறமாத்தான் தெரிஞ்சுது, அவங்க ஊழியர்கள், ஒவ்வொரு கடைக்கும், 100 ரூபா வசூல் பண்ணிட்டாங்களாம்,''''தினம், நுாறுன்னா, மாசத்துக்கு எவ்ளோ, எத்தனை வண்டின்னு கணக்கு போடு மித்து. இப்படி பொன் முட்டையிடற வாத்து போல உள்ள தள்ளுவண்டி கடை மீது எப்படிடி கார்ப்ரேஷன்காரங்க கை வைப்பாங்க,'' என்று கூறவும், டிபன் வந்தது.இருவரும் சாப்பிட துவங்கினர்.அப்போது சித்ரா, ''ஏ.டி., இல்லாததால, சர்வே செக் ஷன் ரொம்ப மோசமாகிடுச்சு,'' என்றாள்.
''ஏக்கா... லஞ்சம் தலைவிரிச்சு ஆடுதா?''''கரெக்டா சொன்னடி. 'சவுத்' தாலுகாவுல, ஒரு ஏக்கர் நிலத்த அளக்கறதுக்கு, 'சர்வே'வுக்கு 10 ஆயிரம், துணை தாசில்தாருக்கு, 10 ஆயிரம்' கேட்கிறாங்களாம். இதனால, பாதிக்கப்பட்டவங்க, கலெக்டர் ஆபீசில், புகார் கொடுத்துட்டாங்களாம்,''''அக்கா... அங்க மட்டுமல்ல, வருவாய்த்துறையினர் பூராவும், 'வருவாய்' ஈட்றதில்தான் குறியா இருக்காங்க. ஆனா, இந்த ஆர். ஐ.,கள் மட்டும், போராட்டம் நடத்தறதில் கவனமாக இருக்காங்க,'''அப்படி என்ன அவங்களுக்கு பிரச்னை?''''பட்டா கொடுக்கறதில், முக்கிய புகார்.
வருவாய்த்துறைக்கும், வி.ஏ.ஓ.,களுக்கும் அதிகார போட்டி தீரவே இல்லை; அதனால, பிர்கா அளவிலான வேலையை மொத்தமா ஆர்.ஐ., கிட்ட கொடுத்துட்டாங்க''''இதனால, வேலை ஜாஸ்தியாயிடுச்சுன்னு, டிஸ்ட்ரிக் முழுவதும் உள்ள, 32 ஆர்.ஐ.,களும் போராட்டம் நடத்தினாங்க. டி.ஆர்.ஓ., தலையிட்டு, கலைஞ்சு போங்க. பேசிக்கலாம்'னு, சமாதானம் சொல்லி அனுப்பிச்சாராம்,'' என்றாள் மித்ரா.''ரெவின்யூவில், இந்த பிரச்னைன்னா, யூனியனில் புதுசா ஒண்ணு கிளம்பியிருக்குது?''''அப்படி... என்னங்க்கா, பிரச்னை?''''அட, ஸ்டேட் முழுவதும் ஊராட்சி, ஒன்றியங்களில், பணிகளுக்கு வழங்க வேண்டிய தொகைகளுக்கு ஆன்லைன் பரிவர்த்தனை மூலம், மட்டுமே செய்ய வேண்டும்'னு, உத்தரவு உள்ளது. ஆனால், திருப்பூரில் மட்டும் இன்னும் 'செக்' பேமண்ட் மட்டுமே போகிறதாம்,''''செக்' கொடுத்தால்தான், 'பங்கு' கரெக்டா வருமாம், என, அதிகாரிகளே முடிவு செய்து, 'ஆன்லைனை' 'ஆப்லைன்' பண்ணிட்டாங்க,''''இதென்ன, கொடுமையா இருக்கு? இதுக்கெல்லாம், மாவட்ட அதிகாரிதான் ஒரு முடிவு கட்டோணும்,'' சொன்ன மித்ரா, டேபிளுக்கு வந்த வெயிட்டரிடம், ''ரெண்டு காபி,'' என்றாள்.அவர் சென்றதும், ''ரூரலில் உள்ள ஒரு இன்ைஸ., சிட்டிக்கு கொண்டு வர முயற்சி நடக்குதாம்,''''அதென்ன...
அவருக்கு அப்படி ஒரு முக்கியத்துவம்,'' கேட்டாள் மித்ரா.''இந்த வேலையை பண்றது, லாட்டரி வியாபாரிங்களாம். காரணம் என்னன்னா, ரூரலில், இப்போ கெடுபிடி ஜாஸ்தியாயிடுச்சாம். அதனால, தங்களுக்கு நெருக்கமான 'மாமூல்' அதிகாரியை, இங்க கொண்டு வந்துட்டா, நல்லா லாட்டரி ஓட்டலாமுன்னு, இந்த ஐடியா பண்றாங்களாம்,''''அப்ப, போலீசை ஆட்டுவிக்கிறது, இந்த மாதிரி சட்ட விரோத செயல் செய்ற ஆசாமிங்கதான், என்பது தெளிவாயிடுச்சு,''''இதையெல்லாம், அதிகாரி கண்டுகிட்ட பரவாயில்லை,'' என்று கூறிய மித்ரா, ''ஆமாங்க்கா, உயிரோடு இருக்கிறவரை, இறந்ததா சொல்லி எப்.ஐ.ஆர்., பதிஞ்ச மேட்டர் என்னாச்சுங்க்கா?'' கேள்வி கேட்டாள்.''போலீஸ்காரங்க, உட்கார்ந்த இடத்துல எல்லா வேலையும் செஞ்சதால, வந்த பிரச்னை இது. இதனால, 'டென்ஷனான' அதிகாரி, சம்பந்தப்பட்ட ஸ்டேஷன் போலீசை 'வெளுத்துட்டாராம்,'' என்று கூறி சிரித்த சித்ரா, காபி அருந்த துவங்கினாள்.''அக்கா... கவனிக்க வேண்டியவங்களை, கவனிக்க வேண்டிய விதத்தில், கவனிச்சு, காரியம் சாதிச்சுட்டாங்களாம்,''''என்னடி, விசு மாதிரி பேசறே. விஷயத்தை சொல்லுடி,''''பக்கத்தில, '...பாளையம்' ஸ்டேஷன் லிமிட்டில், 'சீட்டாட்ட' கிளப் நடக்குது. இதுக்காக, ஸ்டேஷனில் ஆரம்பிச்சு, அதிகாரிக்கு தகவல் சொல்றவர் வரைக்கும் 'கவனிப்பாம்,'. சும்மா... இல்லக்கா... மாசாமாசம், ஒரு லகரமாம்,''''அடேங்கப்பா.. கிராமத்திலயே இப்படின்னா, சிட்டியில் சொல்லவா வேணும்?''''நீங்க சொல்றது உண்மைதான். ஆனா, இது அதிகாரிக்கு தெரியாதுன்னு நினைக்கிறேன். ஏன்னா, டிரான்ஸ்பர் உத்தரவில், ஒருசிலரோட ஜாதகம் தெரிஞ்சதும், அவங்களுக்கு வேற போஸ்டிங் போட்டுட்டாங்க,''''ஓ... பரவாயில்லையே! இது எங்க நடந்தது?''''இங்கதான், கோழிப்பண்ணையூர் சப்-டிவிஷனில்தான். தனிப்பிரிவுக்கு மாத்தின போலீசின் உண்மை நிலவரம் தெரிஞ்சதால், அவரை துாக்கிட்டு, பழைய போஸ்டிங் போட்டுட்டாங்களாம்.
இதனால், சம்பந்தப்பட்ட இன்ஸ்., பேரதிர்ச்சி அடைஞ்சாராம்,'''பில்' கொடுத்து விட்டு, இருவரும் ஓட்டலை விட்டு வெளியே வந்தனர். அப்போது, அவ்வழியே வேனில் காங்கயம் காளை ஒன்றை கொண்டு சென்றனர்.''காங்கயம் காளையை பார்த்தவுடன், அந்த தாலுகா ஆபீசில் நடந்த வசூல்வேட்டை ஞாபகத்துக்கு வந்தது,''''என்னங்க்கா... யாருங்க்கா?'' பரபரப்பாக கேட்டாள் மித்ரா.''அவசரப்படாதேடி. சொல்றேன். சட்டவிரோதமாக கல், மண், மணல் கடத்தற லாரிக்காரங்கிட்ட, லகரத்தில்தான் வசூல் பண்றாங்களாம்.
குறிப்பா, புதுசா வந்த ஆபீசர், பழைய ஆட்களோடு சேர்ந்து வசூல் பட்டய கிளப்புறாராம். அதுக்கு மட்டுமில்லாம, எந்த சர்டிபிகேட் கேட்டாலும், 'வைட்டமின் 'ப' வெட்டுனாதான்' கிடைக்குதாம்,''''மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய 'புனித'மான, இந்த துறையில, இந்த மாதிரி ஆபீசர்களால்தான், நேர்மையாக இருக்கற ஆட்களுக்கும் கெட்ட பேர் வருது,'' என்று சொன்ன சித்ரா, வண்டியை ஸ்டார்ட் செய்தாள். மித்ரா, உட்கார்ந்து கொண்டு, ''போலாம் ரைட்,'' என்றாள்.ரோடுகளில், மக்களின் கூட்டமும், வாகன நெரிசலும், தீபாவளி நெருங்கி விட்டதை உணர்த்தியது. அந்த நெரிசலுக்குள் சித்ராவும், மித்ராவும் எறும்பு ஊர்வதை போல் சென்று கொண்டிருந்தனர்.''கிடைக்கிறது ஒரு சண்டே. இன்னைக்கு டிரஸ் எடுத்திட்டா, அடுத்த வாரம், கொஞ்சம் ப்ரீயா இருக்கலாமுன்னு வந்தா, என்ன இவ்ளோ கூட்டம்,'' என்று மலைத்தாள் சித்ரா.''ஆமாக்கா... எல்லாம் வெளியூர்க்காரங்கதான். ஒரு வாரத்துக்கு முன்னாடியே அவங்கெல்லாம் ஊருக்கு போவாங்க. அதனாலதான் இவ்ளோ 'ரஷ்'ஷா இருக்கு,'' என்றாள் மித்ரா.''சரிடி மித்து. கூட்டம் கொஞ்சம் குறையட்டும். அதுக்குள்ள 'லைட்'டா, டிபன் சாப்பிட்டுக்கலாம்,'' என்றவாறு, ஓட்டல் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தினாள்.இருவரும் ஆர்டர் கொடுத்து விட்டு காத்திருந்தனர்.''நடக்காத கூட்டத்துக்கு, 300 ரூபா கொடுத்தாங்களாம்,'' சித்ரா சொன்னதும், ''அது.. எங்க நடந்த கூத்துங்க்கா?'' மித்ரா ஆர்வமானாள்.''எம்.ஜி.ஆரின் அம்மா பேரில் இயங்கும் கூட்டுறவு சங்கத்துல, ஒரு வருஷமா கூட்டம் நடத்தாமலேயே, 'ஓட்டிட்டு' இருந்தாங்க.
இதைப்பத்தி, இயக்குனர்கள் முணுமுணுக்க ஆரம்பிச்சிட்டாங்களாம்,''''இதை தெரிஞ்சுகிட்ட சங்க தலைவர், 'மூனு' கூட்டம் நடத்தியிருக்கோணும். ஒரு கூட்டத்துக்கு, 300 ரூபாய் போட்டு, ஆயிரமா கொடுத்திட்டாராம். கையோட, அவங்க வீட்டுக்கு 'லெட்ஜர்' எடுத்துட்டுப்போயி, கையெழுத்து வாங்கிட்டு வந்துட்டாராம்,'' சித்ரா விளக்கினாள்.''ஆமாங்க்கா, 'மாஜி' தலைவ ருக்கு இந்த விஷயம் தெரியுமா?''''ம்... ம்... தெரியாம இருக்குமா? 'சடையப்ப' வள்ளல் மாதிரி கொடுத்தா போதுமா, இதை வெச்சே 'ஆட்டம்' காட்றேன்னு, சவால் விட்டாராம்,'' என்றாள் சித்ரா.''ஒரே கட்சியில இவ்ளோ பிரச்னையா? பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு'' சொன்ன மித்ரா, ''பூ மார்க்கெட் கடைகளில், கார்ப்ரேஷன் சார்பில், 'செம' கலெக்ஷன் பார்த்துட்டாங்களாம், தெரியுங்களா?'' என்றாள்.''அப்படியா, தெரியாதே...!''''அக்கா... ஆயுதபூஜைக்கு, பூ மார்க்கெட் ரோட்ல நடந்து போகவே மக்கள் ரொம்பவே கஷ்டப்பட்டாங்க. தள்ளுவண்டி வியாபாரிங்களும், மத்தவங்களும் ரோட்டுக்கு வந்து கடை போட்டுட்டாங்க. இதைப்பார்த்துட்டு, பூ மார்க்கெட் வியாபாரிங்களும் ரோட்டில் வியாபாரம் செஞ்சாங்க,''''என்னடா, இதை கார்ப்ரேஷன் அதிகாரிங்க கண்டுக்க மாட்டாங்களானு நினைச்சுட்டு இருந்தோம். அப்புறமாத்தான் தெரிஞ்சுது, அவங்க ஊழியர்கள், ஒவ்வொரு கடைக்கும், 100 ரூபா வசூல் பண்ணிட்டாங்களாம்,''''தினம், நுாறுன்னா, மாசத்துக்கு எவ்ளோ, எத்தனை வண்டின்னு கணக்கு போடு மித்து. இப்படி பொன் முட்டையிடற வாத்து போல உள்ள தள்ளுவண்டி கடை மீது எப்படிடி கார்ப்ரேஷன்காரங்க கை வைப்பாங்க,'' என்று கூறவும், டிபன் வந்தது.இருவரும் சாப்பிட துவங்கினர்.அப்போது சித்ரா, ''ஏ.டி., இல்லாததால, சர்வே செக் ஷன் ரொம்ப மோசமாகிடுச்சு,'' என்றாள்.''ஏக்கா... லஞ்சம் தலைவிரிச்சு ஆடுதா?''''கரெக்டா சொன்னடி. 'சவுத்' தாலுகாவுல, ஒரு ஏக்கர் நிலத்த அளக்கறதுக்கு, 'சர்வே'வுக்கு 10 ஆயிரம், துணை தாசில்தாருக்கு, 10 ஆயிரம்' கேட்கிறாங்களாம். இதனால, பாதிக்கப்பட்டவங்க, கலெக்டர் ஆபீசில், புகார் கொடுத்துட்டாங்களாம்,''''அக்கா... அங்க மட்டுமல்ல, வருவாய்த்துறையினர் பூராவும், 'வருவாய்' ஈட்றதில்தான் குறியா இருக்காங்க. ஆனா, இந்த ஆர். ஐ.,கள் மட்டும், போராட்டம் நடத்தறதில் கவனமாக இருக்காங்க,'''அப்படி என்ன அவங்களுக்கு பிரச்னை?''''பட்டா கொடுக்கறதில், முக்கிய புகார். வருவாய்த்துறைக்கும், வி.ஏ.ஓ.,களுக்கும் அதிகார போட்டி தீரவே இல்லை; அதனால, பிர்கா அளவிலான வேலையை மொத்தமா ஆர்.ஐ., கிட்ட கொடுத்துட்டாங்க''''இதனால, வேலை ஜாஸ்தியாயிடுச்சுன்னு, டிஸ்ட்ரிக் முழுவதும் உள்ள, 32 ஆர்.ஐ.,களும் போராட்டம் நடத்தினாங்க.
டி.ஆர்.ஓ., தலையிட்டு, கலைஞ்சு போங்க. பேசிக்கலாம்'னு, சமாதானம் சொல்லி அனுப்பிச்சாராம்,'' என்றாள் மித்ரா.''ரெவின்யூவில், இந்த பிரச்னைன்னா, யூனியனில் புதுசா ஒண்ணு கிளம்பியிருக்குது?''''அப்படி... என்னங்க்கா, பிரச்னை?''''அட, ஸ்டேட் முழுவதும் ஊராட்சி, ஒன்றியங்களில், பணிகளுக்கு வழங்க வேண்டிய தொகைகளுக்கு ஆன்லைன் பரிவர்த்தனை மூலம், மட்டுமே செய்ய வேண்டும்'னு, உத்தரவு உள்ளது. ஆனால், திருப்பூரில் மட்டும் இன்னும் 'செக்' பேமண்ட் மட்டுமே போகிறதாம்,''''செக்' கொடுத்தால்தான், 'பங்கு' கரெக்டா வருமாம், என, அதிகாரிகளே முடிவு செய்து, 'ஆன்லைனை' 'ஆப்லைன்' பண்ணிட்டாங்க,''''இதென்ன, கொடுமையா இருக்கு? இதுக்கெல்லாம், மாவட்ட அதிகாரிதான் ஒரு முடிவு கட்டோணும்,'' சொன்ன மித்ரா, டேபிளுக்கு வந்த வெயிட்டரிடம், ''ரெண்டு காபி,'' என்றாள்.அவர் சென்றதும், ''ரூரலில் உள்ள ஒரு இன்ைஸ., சிட்டிக்கு கொண்டு வர முயற்சி நடக்குதாம்,''''அதென்ன... அவருக்கு அப்படி ஒரு முக்கியத்துவம்,'' கேட்டாள் மித்ரா.''இந்த வேலையை பண்றது, லாட்டரி வியாபாரிங்களாம். காரணம் என்னன்னா, ரூரலில், இப்போ கெடுபிடி ஜாஸ்தியாயிடுச்சாம். அதனால, தங்களுக்கு நெருக்கமான 'மாமூல்' அதிகாரியை, இங்க கொண்டு வந்துட்டா, நல்லா லாட்டரி ஓட்டலாமுன்னு, இந்த ஐடியா பண்றாங்களாம்,''''அப்ப, போலீசை ஆட்டுவிக்கிறது, இந்த மாதிரி சட்ட விரோத செயல் செய்ற ஆசாமிங்கதான், என்பது தெளிவாயிடுச்சு,''''இதையெல்லாம், அதிகாரி கண்டுகிட்ட பரவாயில்லை,'' என்று கூறிய மித்ரா, ''ஆமாங்க்கா, உயிரோடு இருக்கிறவரை, இறந்ததா சொல்லி எப்.ஐ.ஆர்., பதிஞ்ச மேட்டர் என்னாச்சுங்க்கா?'' கேள்வி கேட்டாள்.''போலீஸ்காரங்க, உட்கார்ந்த இடத்துல எல்லா வேலையும் செஞ்சதால, வந்த பிரச்னை இது. இதனால, 'டென்ஷனான' அதிகாரி, சம்பந்தப்பட்ட ஸ்டேஷன் போலீசை 'வெளுத்துட்டாராம்,'' என்று கூறி சிரித்த சித்ரா, காபி அருந்த துவங்கினாள்.''அக்கா... கவனிக்க வேண்டியவங்களை, கவனிக்க வேண்டிய விதத்தில், கவனிச்சு, காரியம் சாதிச்சுட்டாங்களாம்,''''என்னடி, விசு மாதிரி பேசறே. விஷயத்தை சொல்லுடி,''''பக்கத்தில, '...பாளையம்' ஸ்டேஷன் லிமிட்டில், 'சீட்டாட்ட' கிளப் நடக்குது. இதுக்காக, ஸ்டேஷனில் ஆரம்பிச்சு, அதிகாரிக்கு தகவல் சொல்றவர் வரைக்கும் 'கவனிப்பாம்,'. சும்மா... இல்லக்கா... மாசாமாசம், ஒரு லகரமாம்,''''அடேங்கப்பா.. கிராமத்திலயே இப்படின்னா, சிட்டியில் சொல்லவா வேணும்?''''நீங்க சொல்றது உண்மைதான். ஆனா, இது அதிகாரிக்கு தெரியாதுன்னு நினைக்கிறேன்.
ஏன்னா, டிரான்ஸ்பர் உத்தரவில், ஒருசிலரோட ஜாதகம் தெரிஞ்சதும், அவங்களுக்கு வேற போஸ்டிங் போட்டுட்டாங்க,''''ஓ... பரவாயில்லையே! இது எங்க நடந்தது?''''இங்கதான், கோழிப்பண்ணையூர் சப்-டிவிஷனில்தான். தனிப்பிரிவுக்கு மாத்தின போலீசின் உண்மை நிலவரம் தெரிஞ்சதால், அவரை துாக்கிட்டு, பழைய போஸ்டிங் போட்டுட்டாங்களாம். இதனால், சம்பந்தப்பட்ட இன்ஸ்., பேரதிர்ச்சி அடைஞ்சாராம்,'''பில்' கொடுத்து விட்டு, இருவரும் ஓட்டலை விட்டு வெளியே வந்தனர். அப்போது, அவ்வழியே வேனில் காங்கயம் காளை ஒன்றை கொண்டு சென்றனர்.''காங்கயம் காளையை பார்த்தவுடன், அந்த தாலுகா ஆபீசில் நடந்த வசூல்வேட்டை ஞாபகத்துக்கு வந்தது,''''என்னங்க்கா... யாருங்க்கா?'' பரபரப்பாக கேட்டாள் மித்ரா.''அவசரப்படாதேடி. சொல்றேன். சட்டவிரோதமாக கல், மண், மணல் கடத்தற லாரிக்காரங்கிட்ட, லகரத்தில்தான் வசூல் பண்றாங்களாம்.
குறிப்பா, புதுசா வந்த ஆபீசர், பழைய ஆட்களோடு சேர்ந்து வசூல் பட்டய கிளப்புறாராம். அதுக்கு மட்டுமில்லாம, எந்த சர்டிபிகேட் கேட்டாலும், 'வைட்டமின் 'ப' வெட்டுனாதான்' கிடைக்குதாம்,''''மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய 'புனித'மான, இந்த துறையில, இந்த மாதிரி ஆபீசர்களால்தான், நேர்மையாக இருக்கற ஆட்களுக்கும் கெட்ட பேர் வருது,'' என்று சொன்ன சித்ரா, வண்டியை ஸ்டார்ட் செய்தாள். மித்ரா, உட்கார்ந்து கொண்டு, ''போலாம் ரைட்,'' என்றாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X