பொது செய்தி

தமிழ்நாடு

ஆங்கிலேயர் அமைத்த மழை நீர் கால்வாய் : முறையாக பராமரித்தால் பாதிப்பு இருக்காது

Added : அக் 15, 2019
Share
Advertisement
குன்னுார்;குன்னுார் ஆற்றில் நடந்த துார்வாரும் பணியின் போது, 1890ம் ஆண்டில் ஆங்கிலேயரால், சிறந்த முறையில், மழை நீர் கால்வாய் அமைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில், தனியார் நிறுவனத்தின் நிதி உதவியுடன் 'கிளீன் குன்னுார்' அமைப்பு சார்பில், துார்வாரும் பணிகள், 2ம் கட்டமாக டி.டி.கே., சாலையோர 'ஹன்கூன்' தொரை ஆற்றில் நடந்து
 ஆங்கிலேயர் அமைத்த மழை நீர் கால்வாய் : முறையாக பராமரித்தால் பாதிப்பு இருக்காது

குன்னுார்;குன்னுார் ஆற்றில் நடந்த துார்வாரும் பணியின் போது, 1890ம் ஆண்டில் ஆங்கிலேயரால், சிறந்த முறையில், மழை நீர் கால்வாய் அமைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில், தனியார் நிறுவனத்தின் நிதி உதவியுடன் 'கிளீன் குன்னுார்' அமைப்பு சார்பில், துார்வாரும் பணிகள், 2ம் கட்டமாக டி.டி.கே., சாலையோர 'ஹன்கூன்' தொரை ஆற்றில் நடந்து வருகிறது.
இந்த பணியின் போது கடந்த, 1890ம் ஆண்டில், ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட மழைநீர் கால்வாய் இருப்பது தெரிய வந்தது.'கிளீன் குன்னுார்' அமைப்பினர் கூறுகையில்,'இந்த மழைநீர் கால்வாயில், நான்கு புறமும் கற்களால் சதுர வடிவிலும், கழிவுகளை சுத்திகரிக்கும் வகையில் தாழ்வான பாறை உள்ள இடத்தில் தண்ணீர் விழுமாறும் அமைக்கப்பட்டுள்ளது. பாலகிளவா டென்ட் ஹில், மோர்ஸ் கார்டன், ரயில்வே குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரும் மழைநீர் இந்த கால்வாய் வழியாக ஆற்றில் கலக்கிறது,' என்றனர்.
தொடர்ந்து, இந்த கால்வாயில் கட்டுமான கழிவுகள், குப்பைகள், மண் ஆகியவை இந்த கால்வாயில் கொட்டப்பட்டதாலும், கடந்த, 2009ம் ஆண்டு மழை பாதிப்பில், மண் மூடியதாலும் கேஷ் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியது. தற்போது, இதனை துார் வாரியதால், பாதிப்பு இருக்காது.மாவட்டத்தின் பிற பகுதிகளிலும், மழைநீர் செல்வதற்கான கால்வாய், இதே வடிவமைப்புகளில், முறையாக அமைத்து பராமரித்தால், பேரிடர் பாதிப்புகளை தவிர்க்க வாய்ப்புள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X