துருக்கி மீது பொருளாதார தடை: டிரம்ப் அதிரடி

Updated : அக் 15, 2019 | Added : அக் 15, 2019 | கருத்துகள் (22)
Advertisement
US, Sanction, Turkey, Trump, Economy, டிரம்ப், துருக்கி, டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா, பொருளாதார தடை, சிரியா, குர்தீஷ் படை

வாஷிங்டன்: சிரியாவின் குர்தீஷ் படைகள் மீது தாக்குதல் நடத்தியதற்காக, துருக்கி மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. அந்நாட்டின் பொருளாதாரத்தை அழிக்க தயாராக உள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார்.


தாக்குதல்


சிரியாவின் வடக்குப் பகுதியில் அமெரிக்கப் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டதையடுத்து அங்கு குர்தீஷ் படையினர் மீது துருக்கி போர் தொடுத்துள்ளது. குர்தீஷ் படையினர் கட்டுப்பாட்டில் இருந்தது ரக்கா நகருக்கு அருகே உள்ள அய்ன் இஸ்ஸா என்ற இடத்தில் ஏராளமான ஐஎஸ் பயங்கரவாதிகள் சிறைவைக்கப்பட்டிருந்தனர். அந்த பகுதியில் துருக்கியின் தாக்குதலைத் தொடர்ந்து இந்த முகாமில் இருந்த ஐஎஸ் இயக்கத்தைச் சேர்ந்த ஆண், பெண் மற்றும் குழந்தைகள் என 800க்கும் மேற்பட்ட ஐஎஸ் பயங்கரவாதிகள் தப்பிச் சென்று விட்டதாக குர்தீஷ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தடை


இந்நிலையில், துருக்கியின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்நாடு மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.


எச்சரிக்கை

இது குறித்து டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், துருக்கி தலைவர்கள் தொடர்ந்து அழிவு மற்றும் ஆபத்தான வழியை தேர்வு செய்தால், அந்நாட்டின் பொருளாதாரத்தை அழிக்க முழுமையாக தயாராக உள்ளேன். அமெரிக்கா - துருக்கி இடையே நடக்கும், 100 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட வர்த்தக பேச்சுவார்த்தையை நிறுத்தி வைத்துள்ளேன். தொடர் மனித உரிமை மீறலில் ஈடுபடுபவர்கள், அமைதி ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்துபவர்கள் மீது கூடுதல் தடை விதிக்கப்படுகிறது எனக்கூறியுள்ளார். துருக்கி மீது தடை விதிக்கப்படுவது குறித்து அமெரிக்க பிரதிநிதித்துவ சபை தலைவர் நான்சி பெலோசிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், துருக்கி விவகாரம், தேசிய அவசர நிலை என தெரிவித்துள்ளார்.


குற்றம்


அமெரிக்க கருவூலத்துறை கூறுகையில், துருக்கி பாதுகாப்பு, உள்துறை மற்றும் எரிசக்தி துறை அமைச்சர்களுக்கு எதிராக தடை விதிப்பதாகவும், அவர்களுக்கு, அமெரிக்காவில் உள்ள சொத்துகளை முடக்கி வைப்பதாகவும், அவர்களுடன் நிதி பரிமாற்றம் செய்வது குற்றம் எனக்கூறியுள்ளார்


வலியுறுத்தல்


துணை அதிபர் மைக் பென்ஸ் கூறுகையில், அதிபர் டிரம்ப், துருக்கி எதிபர் எர்டோகனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அத்துமீறி தாக்குதல் நடத்துவதை நிறுத்திவிட்டு, சிரியாவில் உள்ள குர்தீஷ் படைகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தினார்.. இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பர் கூறுகையில், அடுத்த வாரம், பெல்ஜியத்தில் உள்ள புருஸ்சல்ஸ் நகர் சென்று, துருக்கி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேடோ அமைப்பை வலியுறுத்த உள்ளதாக தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
16-அக்-201910:47:58 IST Report Abuse
இந்தியன் kumar ஒரு பகுதியில் அமைதி நிலவ சர்வாதிகாரம் கையில் எடுப்பதில் தவறு இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Raghunathan Nagarajan Ragu Naga - Atlanta,யூ.எஸ்.ஏ
15-அக்-201923:46:53 IST Report Abuse
Raghunathan Nagarajan Ragu Naga இதுபோன்ற சண்டைகள் உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கிறது என்று இன்று வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் கடந்த கால வரலாற்றை பார்த்தால், இது சரியான போக்கு இல்லை என்பது விளங்கும். ஆப்கானிஸ்த்தானத்தில் அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்து கொண்டு ரஷ்யாவுக்கு எதிராக அல்கோய்டா மற்றும் தாலிபான் தீவிரவாதிகளை பாகிஸ்தான் வளர்த்தது. ஒசாமா பின் லேடன் பின்னாளில் அமெரிக்காவுக்கு எதிராக இரட்டை கோபுரங்களை அழித்து 3000 அமெரிக்கர்களை கொன்று விட்டார். காஷ்மீர பிரச்சனையால் JEM என்கிற அமைப்பு மும்பாய் குண்டுவெடிப்புக்கு காரணமாக அமைந்தது. தற்போது சவுதி அரேபியா அமெரிக்காவுக்கு ஆதவராக இருப்பதால் ஈரான் அவர்கள் எண்ணெய் வளங்களை குண்டு வைத்து அழிக்கிறது. கொரியாவை இரண்டாக பிரித்ததனால் வட கொரியா அமேரிக்கா மீது வன்மம் கொண்டு அணு ஆயுத போருக்கு எப்போதும் தயார் நிலையில் உள்ளது. எனவே இதுபோன்ற சண்டைகள் இல்லாமல் எல்லா நாடுகளும் அமைதியும் வளமும், நாடு மக்கள் முனேற்றம் என்ற குறிக்கோளுடன் செயல் படவேண்டும் என்பதே என் போன்றவர்களின் ஆசை. நடைபெறுமா?
Rate this:
Share this comment
Cancel
Amreen - Utah,யூ.எஸ்.ஏ
15-அக்-201921:11:53 IST Report Abuse
Amreen அமைதி மார்க்கம். அவனும் அமைதியா இருக்க மாட்டான். மற்றவனையும் இருக்க விட மாட்டான் உலகமே அவனாலே அழிவு.
Rate this:
Share this comment
Ganapathy Subramanian - Muscat,ஓமன்
19-அக்-201911:18:11 IST Report Abuse
 Ganapathy Subramanianவெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு. இவர்களை நினைக்கும்போது இந்த குறள்தான் நினைவுக்கு வருகிறது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X