சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாரிசு சான்றிதழ், பட்டா மாறுதலுக்கு ரூ.9,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது

Added : அக் 15, 2019
Share
Advertisement
குளித்தலை: குளித்தலை அருகே, வாரிசு சான்றிதழ் தர, 9,000 ரூபாய் லஞ்ச வாங்கிய வி.ஏ.ஓ.,வை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த, வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் காளியப்பன், 57, கடவூர் அருகே, வாழ்வார்மங்கலத்தில், வி,ஏ.ஓ.,வாக பணியாற்றுகிறார். கன்னிமார்பாளையத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி, 52; விவசாய கூலித் தொழிலாளி. தந்தை இறந்த நிலையில், அவர் பெயரில் உள்ள

குளித்தலை: குளித்தலை அருகே, வாரிசு சான்றிதழ் தர, 9,000 ரூபாய் லஞ்ச வாங்கிய வி.ஏ.ஓ.,வை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த, வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் காளியப்பன், 57, கடவூர் அருகே, வாழ்வார்மங்கலத்தில், வி,ஏ.ஓ.,வாக பணியாற்றுகிறார். கன்னிமார்பாளையத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி, 52; விவசாய கூலித் தொழிலாளி. தந்தை இறந்த நிலையில், அவர் பெயரில் உள்ள விவசாய நிலத்தை தன் பெயருக்கு மாற்ற, வாரிசு சான்றிதழ் கேட்டு, வாழ்வார்மங்கலம் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். வாரிசு சன்றிதல் பெறுவதற்கும், பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கும், 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார் வி.ஏ.ஓ., காளியப்பன். இறுதியாக, 9,000 ரூபாய் தர வேண்டும் என, கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத பொன்னுசாமி, கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தார். அதன்படி, கரூர் லஞ்ச ஒழிப்பு, டி.எஸ்.பி., அண்ணாமலை தலைமையில், போலீசார் கொடுத்த ஆலோசனையின் படி, ரசாயனம் தடவிய, 9,000 ரூபாயை, நேற்று காலை, 11:00 மணிக்கு, அலுவலகத்தில் இருந்த, வி.ஏ.ஓ.,விடம் கொடுத்தார். அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், கையும் களவுமாக அவரை பிடித்தனர். கரூர் கோர்ட்டுக்கு அழைத்துச் சென்று, நீதிபதி முன் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X