பொருளாதாரம் ஊக்கம்: அமித்ஷா கணிப்பு

Updated : அக் 15, 2019 | Added : அக் 15, 2019 | கருத்துகள் (20)
Advertisement
Amit shah, Home minister, Kashmir, Kashmir issue, Special act, Article 370, omar, omar abullah, Mehbooba, Sheik abdullah, mehbooba Mufti, Indian economy, economy, Nirmala, Nirmal sitharaman, Finance Minister, Cbi, enforcement directorate, ed,  sharad pawar, p.chidambaram, chidambaram, BJP,அமித்ஷா, உள்துறை அமைச்சர், காஷ்மீர், காஷ்மீர் விவகாரம், சிறப்பு சட்டம், 370வது பிரிவு, ஒமர் அப்துல்லா, ஒமர், மெகபூபா முப்தி, மெகபூபா,  ஷேக் அப்துல்லா,  இந்திய பொருளாதாரம், பொருளாதாரம், நிர்மலா சீதாராமன், நிர்மலா,  சுப்ரீம் கோர்ட், அயோத்தி, பிஎம்சி, சரத்பவார்,  சிதம்பரம், அமலாக்கத்துறை, சி.பி.ஐ., சிபிஐ,  பா.ஜ., பாஜ,

புதுடில்லி : காஷ்மீர் விவகாரத்தில், இந்திய நிலைப்பாட்டிற்கு உலக நாடுகள் ஆதரவு தெரிவிப்பது, மோடி அரசின் சாதனை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

ஆங்கில டிவி சேனலுக்கு அவர் அளித்த பேட்டி:


காஷ்மீர் விவகாரம்


காஷ்மீரில் சிறப்பு சட்டம் நீக்கப்பட்டபிறகு, தற்போது, எங்கும் கட்டுப்பாடுகள் இல்லை. கண்ட உடன் துப்பாக்கியால் சுடவும் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. 6 போலீஸ் ஸ்டேசனுக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டுமே 144 தடை உத்தரவு உள்ளது. ஆப்பிள் வணிகம் சுமூகமாக நடக்கிறது. சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏதும் இல்லை. காய்கறி சந்தைகள் சுமூகமாக செயல்படுகின்றன. அங்கு நிலைமை சுமூகமாக உள்ளது. பொது மக்கள், வெள்ளிக்கிழமை பிரார்த்தனைக்கு சென்று வருகின்றனர். ஜம்மு மற்றும் காஷ்மீர் பிராந்தியங்களில் அமைதி நிலவுகிறது. மொபைல் சேவை மீண்டும் துவங்கியுள்ளது.

சிலர் சூழ்நிலையை கெடுக்க முயற்சித்தால், நிலைமை மோசமாகும். 4 ஆயிரம் பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது, ஆயிரம் பேர் மட்டுமே சிறையில்உள்ளனர். அதில் 800 பேர் கல் எறியும் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள். காஷ்மீர் சிறப்பு சட்டம் அமலில் இருந்த போது ஷேக் அப்துல்லா 11 ஆண்டுகள் சிறையில் இருந்தது ஏன்? இதற்கு காங்கிரஸ் பதில் சொல்லாது. ஏனென்றால், அப்போது, அக்கட்சிதான் அதிகாரத்தில் இருந்தது.
மக்களை தூண்டியதாக சமாளிக்கும். ஆனால், கைதாகி 2.5 மாதங்கள் ஆன நிலையில், இதனை விவகாரம் ஆக்குகின்றன. மெகபூபா மற்றும் ஒமர் அப்துல்லாவும் பொது மக்கள் பாதுகாப்பு சட்டத்தில் தான் கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கு முன்னர், அவர்கள் வெளியில் செல்வதை யாரும் தடுக்கவில்லை. கடந்த காலங்களில் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்ட போது, என்ன மாதிரியான செய்தியை அனுப்பியது. அந்த கொலைகள், காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு சட்டம் காரணமாகத் தான் நடந்தது. பிரச்னை தீர சிறிது கால அவகாசம் வழங்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தான், அம்மாநில தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.







மக்கள் உணர்ந்தனர்


சிறப்பு சட்டம் அமலில் இருந்த போது, காஷ்மீரில் வளர்ச்சி இல்லை. ஊழல் அதிகரித்தது. இனிமேல் வளர்ச்சி ஏற்படும். பஞ்சாயத்து தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அங்கு, யாரும் தேர்தலில் போட்டியிடுவதை நாங்கள் தடுக்கவில்லை. அவர்கள் தான் புறக்கணித்துள்ளனர். நாட்டில், சுதந்திறத்திற்கு பின்னர், தேர்தல் சின்னம் இல்லாமல், பல முறை தேர்தல்நடந்துள்ளது. அனைவரும் ஜனநாயக அரசியலில் போட்டியிட வேண்டும்.
கடந்த காலங்களில், துப்பாக்கி சுடும் உத்தரவு இருந்தும் மக்கள் தெருவில் இறங்கி போராடியதற்கான வரலாறு உள்ளது. அப்போது உயிரிழப்பும் ஏற்பட்டது. சிறப்பு சட்டம் காரணமாக, மாநிலத்தில் வளர்ச்சி ஏதும் இல்லை என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். 370 ரத்துக்கு பின்னர், ஒரு துப்பாக்கி குண்டு கூட சுடப்படவில்லை.
சட்டம் ஒழுங்கு மோசம் காரணமாக யாரும் உயிரிழக்கவில்லை. காஷ்மீர் விவகாரத்தில் துருக்கி, சீனா, மலேசியா போன்றவை, பாகிஸ்தானை ஆதரிப்பது அவர்களின் விருப்பம். ஆனால், பெரும்பாலான உலக நாடுகள் இந்தியாவை ஆதரிக்கின்றன. இது மோடி அரசின் சாதனை. நமது நிலைப்பாட்டை சீனா முழுமையாக எதிர்க்கவில்லை.


ஜனநாயக கட்சி


ஹரியானா மற்றம் மஹாராஷ்டிரா தேர்தலில் பா.ஜ., சிறந்த நிலையில் உள்ளது. அங்கு மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டியுடன் வெற்றி பெறுவோம். பட்னாவிஸ் மற்றும் கட்டார் அரசுகள் சிறப்பாக செயல்பட்டுள்ளன. மஹாராஷ்டிரா முதல்வராக பட்னாவிஸ் மீண்டும் பதவி ஏற்பார். பா.ஜ., பிரசாரம் குறித்து ராகுலுக்கு தெரியவில்லை. பேரணி, குழு சந்திப்பு மற்றும் வீட்டு வாசலில் பிரசாரம் போன்ற 3 நிலைகளில் பா.ஜ., பிரசாரம் செய்கிறது. பா.ஜ., ஜனநாயக கட்சி .


5 ஆண்டுகள் விசாரணை


சிபிஐயும், அமலாக்கத்துறையும் எனது கட்டுப்பாட்டில் வருவது இல்லை. அந்த அமைப்புகள் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுவது இல்லை. என் மீது போலி என்கவுன்டர் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. ஆனால், அது நிரூபிக்கப்படாததால், தள்ளுபடி செய்யப்பட்டது. சிதம்பரம் மீதான விசாரணை கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வருகிறது. பிரச்னை ஏற்படும் போது குற்றம் சாட்டுவது சரி அல்ல.




ஐகோர்ட் உத்தரவு


மஹாராஷ்டிரா கூட்டுறவு வங்கி மோசடி விவகாரத்தில், தேசியவாதவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் மீது வழக்குப்பதிவு செய்த விவகாரத்தை அவர் அரசியலாக்கலாம். ஆனால், ஐகோர்ட் உத்தரவுப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் தான் ஐகோர்ட்டை நாடினர். மஹாராஷ்டிரா பிஎம்சி விவகாரத்தில், முறைகேடு நடந்ததை விட அதிகளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணம் திருப்பி கொடுக்கப்படும். சட்ட ரீதியிலான நடவடிக்கை துவங்கியுள்ளது. 80 சதவீத மக்களுக்கு விரைவில், பணம் திரும்ப கிடைத்துவிடும். இதற்கு ஒரிரு மாதங்கள் ஆகும். அனைத்து தரப்பினருடன் ஆலோசனை நடந்து வருகிறது


நிர்மலா நடவடிக்கை


சர்வதேச பொருளாதாரம், இந்தியாவை பாதிக்காது. எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருந்த போது, அவர்களுக்கு பொருளாதாரம், அரசியல் குறித்து தெரியவில்லை. மோடியின் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் மீது நம்பிக்கை உள்ளது. பருவநிலை நன்றாக உள்ளது. நிர்மலா எடுத்துள்ள, நீண்ட கால பலன் அளிக்கும் நடவடிக்கைகள் நமக்கு பயனை கொடுக்கும். 5 வெவ்வேறு துறைகளில் அவர் எடுத்துள்ள நடவடிக்கைகள், பொருளாதாரத்திற்கு ஊக்கம் கொடுக்கும். அவர், விரைவாக நடவடிக்கை எடுத்து வருகிறார்.


கவலை



சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி தான் என்ஆர்சி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போதுள்ள முறைகளில், உள்ள ஓட்டைகள் அடைக்கப்படும். நாடு முழுவதும் என்ஆர்சி விரிவுபடுத்தப்படும். முஸ்லீம்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அனைவரையும் இந்தியாவிற்குள் அனுமதிக்கக்கூடாது. சட்டவிரோதமாக குடியேறுவதை காங்கிரஸ் நிறுத்தவில்லை.
இதனால், அத்தகைய மக்களை கண்டறிந்து வெளியேற்ற முயன்று வருகிறோம். இளைஞர்கள் மத்தியில், எந்த அமைப்பும் பிரிவினையை தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது கவலைக்குரியது. இதனை தீவிரமாக எடுத்து கொள்வோம். அவர்களைதடுக்க சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும்.


நாட்டிற்காக பணி


அயோத்தி விவகாரத்தில், சட்ட மற்றும் ஒழுங்கு சூழ்நிலையை கட்டுப்படுத்த தயாராக உள்ளோம். மக்கள் அனைவரும்.. சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு கட்டுப்பாடுவார்கள். இந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்கு. உள்துறை அமைச்சர் பதவியும், பா.ஜ., தலைவர் பதவியும் ஒன்று தான். நாட்டிற்காக நான் பணியாற்றி வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
tamizha tamizha - Bellevue,யூ.எஸ்.ஏ
16-அக்-201903:10:41 IST Report Abuse
tamizha tamizha அதோ தூரத்துல தெரியுது பாரு ஊக்கம்... தெரியுதா? ... என்ன தெரியலையா?... அப்போ நீ ஆன்டி இந்தியன்...
Rate this:
Share this comment
16-அக்-201908:29:48 IST Report Abuse
Murugan Mumbaienna solla varrar?...
Rate this:
Share this comment
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
16-அக்-201909:48:43 IST Report Abuse
Chowkidar NandaIndiaகான்க்ராஸ் ஆட்சியில் அதோ அந்தப்பக்கம் பாலாறும், இதோ இந்தப்பக்கம் தேனாறும் ஓடியது. என்ன தெரியவில்லையா. அப்போது நீ சங்கி, பக்தாள், டீக்காரன், பக்கோடா, அரை டவுசர்....
Rate this:
Share this comment
Cancel
Ramakrishnan Natesan - MICHIGAN, TROY,யூ.எஸ்.ஏ
15-அக்-201919:30:57 IST Report Abuse
Ramakrishnan Natesan யாருக்கு ஊக்கமோ தெரியாது அனால் உம்முயடைய மகன் என்ற காரணத்தினால் JAISHA கிரிக்கெட் போர்டின் செயலாளர் ஆக்க பட்டுள்ளார் இது தான் ஊக்கம்
Rate this:
Share this comment
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
16-அக்-201909:51:27 IST Report Abuse
Chowkidar NandaIndiaகட்சி தலைவரின் மருமகன் என்கிற ஒரே காரணத்தால் ராபர்ட் வாத்ராவிற்கு சரவணா ஸ்டோர்ஸ் தள்ளுபடி விலையில் நிலங்களும், விமான நிலையங்களில் சோதனை விலக்குகளும் தாராளமாய் கிடைத்தனவே. அதைவிட ஊக்கம் வேறுண்டா....
Rate this:
Share this comment
Cancel
திராவிடன் - bombay,இந்தியா
15-அக்-201918:57:26 IST Report Abuse
திராவிடன் அதெல்லாம் பொருளாதாரம் படித்தவரால் செய்ய முடியும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X