ராகுல் பேச்சு பா.ஜ.,வுக்கு உதவும்: பட்னாவிஸ்

Updated : அக் 15, 2019 | Added : அக் 15, 2019 | கருத்துகள் (11)
Share
Advertisement

மும்பை: ராகுல் பேச்சுக்கள், சட்டசபை தேர்தலில், பா.ஜ., சிவசேனா கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெற உதவும், என மஹாராஷ்டிரா முதல்வர் பட்னாவிஸ் கூறியுள்ளார்.



latest tamil news


மஹாராஷ்டிரா சட்டசபைக்கு வரும் 21ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்காக கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில், யவதமால் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், பட்னாவிஸ் பேசுகையில், கடந்த 2014 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 42 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

தற்போது , 24 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது என அக்கட்சிக்கு தெரியும். பிரசாரத்தில் ஈடுபட ராகுலுக்கு விருப்பமில்லை. வெளிநாடு செல்லவே விரும்புகிறார். போட்டியை அதிகமாக்க வேண்டிய நேரத்தில், கட்சி தலைவர்கள் விலகி செல்வதாக, காங்கிரஸ் கட்சியின் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.


latest tamil news


தற்போது, ராகுல், வந்து பழைய பேச்தையே பேசுகிறார். இதனையே, கடந்த லோக்சபா தேர்தலில், ராகுலும், அக்கட்சி தலைவர்களும் பேசினர். ஆனால், பா.ஜ., அமோக வெற்றி பெற்றதுடன், காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.ராகுல், தொடர்ந்து பிரசார கூட்டங்களில் பேசினால், பா.ஜ., சிவசேனாவுக்கு ஓட்டு அதிகரிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

பின் பாஜ., சார்பில் தேர்தல் வாக்குறுதி வெளியிடப்பட்டது. இந்த வாக்குறுதிகள் வேலைவாய்ப்பு, தண்ணீர் தேவைகளை நோக்கமாக கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.


வாக்குறுதிகள் சில:

* அடுத்த 5 வருடத்தில் 1 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
* அனைவருக்கும் வீடுக்கட்டி தரப்படும்.
* அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் கிடைக்க வழிவகை ஏற்படுத்தப்படும்.
* சாவர்க்கர்-க்கு பாரத் ரத்னா விருது பரிந்துரைக்கப்படும்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raghunathan Nagarajan Ragu Naga - Atlanta,யூ.எஸ்.ஏ
15-அக்-201922:55:07 IST Report Abuse
Raghunathan Nagarajan Ragu Naga தற்போதுள்ள சூழ்நிலையில் காங்கிரசிலிருந்து நிறைய தலைவர்கள் இந்த இரு மாநிலங்களில் இருந்தும் வெளியேறி வேறு கட்சிகளில் சேர்ந்து உள்ளனர். காங்கிரஸ் போட்டுள்ள முக்கிய கண்டிஷன் : (1 ) தற்போது தேர்தல் நடக்கும் இந்த இரு மாநிலங்களில் "செக்குலர்" பற்றி பேசும் (கொள்கை பற்றி கவலை இல்லை - பேசினால் போதும்) எந்த கட்சியும் எங்களுடன் கூட்டணி வைத்து கொள்ளலாம். (2 ) எவ்வளவு தொகுதி கேட்டாலும் தரப்படும். ஆனால் ஒரு இலக்கத்துக்கு மேல் ஜெயிக்கக்கூடாது. (3 ) அப்படி தவறிப்போய் ஜெயித்துவிட்டால், திரு. ராகுல் அவர்கள் தான் காரணம் என்று கூட்டணி அறிக்கை வெளியிடும். தோற்றுவிட்டால் (அதான் நடக்கப்போகிறது) EVM கோளாறு மற்றும் RSS சதி என்று கூட்டணி கட்சிகள் ஓன்றாக அறிக்கை வெளியிடவேண்டும். இந்த மேற்கூறிய கண்டிசன்களுக்கு ஒத்துக்கொண்டு "தோல்வி நாயகன்" திரு.ராஜ் தாக்கரே மற்றும் முன்னாள் ஆம் ஆத்மி கட்சி ஆலோசகர் திரு.யோகேந்திர யாதவ் உடனடியாக இந்த கூட்டணியில் சேர்ந்து திரு ராகுல் அவர்களின் 'கையை" பலப்படுத்தி இருக்கிறார்கள். வாழ்க "செகுலரிஸ்ம்".
Rate this:
Cancel
PANDA PANDI - Aththipatti,இந்தியா
15-அக்-201920:14:02 IST Report Abuse
PANDA PANDI மூளை சலவை செய்வதில் கெட்டிக்காரர்கள் நீங்கள். குள்ளநரி கூட்டம்.
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
15-அக்-201917:15:36 IST Report Abuse
konanki அவசரம் உடனடியாக மணி சங்கர் ஐயர், டிக் விஜய சிங்க்,கபில் சிபல், மனிஷ் திவாரி ,ராகுல் இந்த 5 நட்சத்திர பேச்சாளர்களை மகாராஷ்டிரா, ஹரியானா மாநில தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுப்பவும். இவர்கள் அங்கு பிரச்சாரம் செய்தலே பிஜேபி யின் பெரும் வெற்றிக்கு உதவும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X