ராகுல் பேச்சு பா.ஜ.,வுக்கு உதவும்: பட்னாவிஸ்| Maharashtra Elections 2019: "If Rahul Gandhi Continues To Speak....": Devendra Fadnavis Takes A Dig | Dinamalar

ராகுல் பேச்சு பா.ஜ.,வுக்கு உதவும்: பட்னாவிஸ்

Updated : அக் 15, 2019 | Added : அக் 15, 2019 | கருத்துகள் (11)
Share
மும்பை: ராகுல் பேச்சுக்கள், சட்டசபை தேர்தலில், பா.ஜ., சிவசேனா கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெற உதவும், என மஹாராஷ்டிரா முதல்வர் பட்னாவிஸ் கூறியுள்ளார்.மஹாராஷ்டிரா சட்டசபைக்கு வரும் 21ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்காக கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில், யவதமால் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், பட்னாவிஸ் பேசுகையில், கடந்த 2014 சட்டசபை

மும்பை: ராகுல் பேச்சுக்கள், சட்டசபை தேர்தலில், பா.ஜ., சிவசேனா கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெற உதவும், என மஹாராஷ்டிரா முதல்வர் பட்னாவிஸ் கூறியுள்ளார்.latest tamil news


மஹாராஷ்டிரா சட்டசபைக்கு வரும் 21ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்காக கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில், யவதமால் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், பட்னாவிஸ் பேசுகையில், கடந்த 2014 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 42 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

தற்போது , 24 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது என அக்கட்சிக்கு தெரியும். பிரசாரத்தில் ஈடுபட ராகுலுக்கு விருப்பமில்லை. வெளிநாடு செல்லவே விரும்புகிறார். போட்டியை அதிகமாக்க வேண்டிய நேரத்தில், கட்சி தலைவர்கள் விலகி செல்வதாக, காங்கிரஸ் கட்சியின் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.


latest tamil news


தற்போது, ராகுல், வந்து பழைய பேச்தையே பேசுகிறார். இதனையே, கடந்த லோக்சபா தேர்தலில், ராகுலும், அக்கட்சி தலைவர்களும் பேசினர். ஆனால், பா.ஜ., அமோக வெற்றி பெற்றதுடன், காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.ராகுல், தொடர்ந்து பிரசார கூட்டங்களில் பேசினால், பா.ஜ., சிவசேனாவுக்கு ஓட்டு அதிகரிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

பின் பாஜ., சார்பில் தேர்தல் வாக்குறுதி வெளியிடப்பட்டது. இந்த வாக்குறுதிகள் வேலைவாய்ப்பு, தண்ணீர் தேவைகளை நோக்கமாக கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.


வாக்குறுதிகள் சில:

* அடுத்த 5 வருடத்தில் 1 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
* அனைவருக்கும் வீடுக்கட்டி தரப்படும்.
* அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் கிடைக்க வழிவகை ஏற்படுத்தப்படும்.
* சாவர்க்கர்-க்கு பாரத் ரத்னா விருது பரிந்துரைக்கப்படும்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X