பிஎம்சி வங்கி மோசடி: பணம் டெபாசிட் செய்தவர் மரணம்

Updated : அக் 15, 2019 | Added : அக் 15, 2019 | கருத்துகள் (16)
Share
Advertisement
பிஎம்சி வங்கி மோசடி: பணம் டெபாசிட் செய்தவர் மரணம்

மும்பை: பஞ்சாப் மற்றும் மஹாராஷ்டிரா கூட்டுறவு வங்கி(பிஎம்சி)யில் மோசடி நடந்தது. இதனையடுத்து, அந்த வங்கி, ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. இதனால், வாடிக்கையாளர்கள் வைப்பு தொகை முடக்கப்பட்டுள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள், தங்கள் வைப்பு தொகையை கேட்டு போராடி வருகின்றனர்.
இந்நிலையில், ஜெட் ஏர்வேசில் பணிபுரிந்த சஞ்சய் குலாத்தி என்பவர், மும்பையின் ஒஷிவாராவில் வசித்து வருகிறார். இவர் பிஎம்சி வங்கியில் ரூ.90 லட்சம் டெபாசிட் செய்து இருந்தார். அவரது வைப்பு தொகையும் சிக்கலில் இருந்ததால், கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். பணத்தை கேட்டு, அவரும் கடந்த சில நாட்களாக போராடி வந்தார். தனது தந்தையுடனும் போராட்டத்தில் பங்கேற்றார். நேற்று (அக்.,14) இரவு அவர் வீட்டில் உணவு அருந்தி கொண்டிருந்த போது, மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

Advertisement


வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nathan - Hyderabad,இந்தியா
18-அக்-201912:20:29 IST Report Abuse
Nathan பணம் ஒரு அற்பமான விஷயம், பசி ஷேர் மார்க்கெட் பிராடில், முன்னம் நான் 80 லட்சம் ரூபாய் இழந்துள்ளேன், அப்புறம் வருந்தவுமில்லை, அந்த பக்கம் தலை வைத்து படுப்பதுமில்லை. இதெற்கெல்லாம் மன உளைச்சல் கூடாது. ராம பிரான், தனக்கு, கோசல நாட்டு ராஜ்ய பட்டம் வர இருந்து, ஏற்பாடுகள் கடைசி நேரத்தில் மாறி, காடு செல்ல தந்தையின் வாக்கியம் கேட்டு, மேல் போர்த்திய துண்டினை கழட்டி போடுவது போல, சர்வ சாதாரணமாக துறந்து, தந்தையின் வாக்கியமே முக்கியம் என செயல் பட்டார். பணம் அநித்தியம், அதனை பெரிதாக கருதி அலையாதீர். பசி, கட்டுமரம், சோனி சேர்ப்பதெல்லாம் வெறும் மாயத்தோற்றமே. ஓரளவுக்கு மேல், அவர்களுக்கு இவ்வுலகிலும் பயனில்லை, அவ்வுலகிலும் பயனில்லை. அவப்பெயரே அவர்களுக்கு உடன் வரும். செலவு செய்யுங்கள், தானம் செய்யங்கள், தர்ம காரியம் செய்யுங்கள், தலை முறைக்கு என எண்ணி சேர்க்கும் சொத்து, எங்கு எப்படி செல்லுமோ, யாரே அறிவர், உங்கள் வயோதிகத்துக்கு என கொஞ்சம் வைத்துக் கொள்ளலாம். மிஞ்சியது நஞ்சே.
Rate this:
Cancel
svs - yaadum oore,இந்தியா
15-அக்-201920:02:20 IST Report Abuse
svs இது போன்ற கூட்டுறவுத்துறை வங்கிகள் இயங்குவது அந்த வங்கியின் உறுப்பினரால் ....இந்த வங்கியின் உறுப்பினர்கள் தேர்நதெடுப்பதுதான் வங்கியின் இயக்குனர்கள் .....RBI க்கு கூட்டுறவுத்துறையில் அதிக அதிகாரம் கிடையாது ....RBI நினைத்தால் கூட வங்கி இயக்குனர்களை வெளியேற்ற முடியாது .... கூட்டுறவு தேர்தல்கள் தமிழ் நாட்டில் எப்படி நடக்கிறது .....மக்கள் சரியானபடி வாக்களித்தால் இது போன்று நடப்பதற்கு வாய்ப்பில்லை .....
Rate this:
Cancel
S.P. Barucha - Pune,இந்தியா
15-அக்-201917:21:57 IST Report Abuse
S.P. Barucha சொத்தை பறிமுதல் செய்ய வேண்டும். ஜெயலலிதாவிற்கு இறந்தும் நீதிமன்றம் தண்டனை அறிவிக்க வில்லையா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X