போராட்டத்தில் ஈடுபட்ட பரூக் மகள், சகோதரி கைது

Updated : அக் 15, 2019 | Added : அக் 15, 2019 | கருத்துகள் (38)
Advertisement

ஸ்ரீநகர்: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் மகள் மற்றும் சகோதரி கைது செய்யப்பட்டுள்ளனர்.






மத்திய அரசு, கடந்த ஆக., 05ம் தேதி, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. இதனையடுத்து காஷ்மீர் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, காஷ்மீர் முன்னாள் முதல்வர்களான மெகபூபா முப்தி, பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.
தற்போது இயல்பு நிலை திரும்பி வருவதால், ஏறக்குறைய 2 மாதங்களாக வீட்டுக்காவலில் இருந்தவர்களை படிப்படியாக விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். இருப்பினும் பல இடங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. நேற்று ( 14 ம் தேதி) போஸ்ட் பெய்டு மொபைல்களுக்கு இணைப்பு அனுமதிக்கப்பட்டது. இன்று சில இடங்களில் சிறு, சிறு அளவில் போராட்டம் நடந்தது. இதனையடுத்து எஸ்.எம்.எஸ்., சேவை முற்றிலும் தடை செய்யப்பட்டது.





இந்நிலையில், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை கண்டித்து பரூக்கின் மகள் சபியா மற்றும் சகோதரி சுரய்யா உள்ளிட்ட பல பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், காவலில் வைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுவிக்கும்படி அவர்கள் வலியுறுத்தினர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரணைக்கு கொண்டு சென்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sridhar - Chennai,இந்தியா
16-அக்-201908:01:41 IST Report Abuse
sridhar நாளை மே வங்கம் , கேரளாவும் இதே பாதையில் போகும். மத்திய அரசு விழித்துக்கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் இந்தியாவில் இரண்டாவது largest community . அந்த பொறுப்பு அவர்களிடம் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
15-அக்-201921:21:25 IST Report Abuse
தமிழ்வேள் இந்த குடும்பம் முழுவதையும் காஷ்மீரிலிருந்து வெளியேற்றி எங்காவது மனித தொடர்பற்ற இடங்களில் காவலில் வைத்துவிடவேண்டும் .சோறு தண்ணீர் தவிர வேறு எந்த விதமான தகவல் தொடர்பு இருக்கக்கூடாது முக்கியமாக தொலைக்காட்சி தொலைபேசி தினசரி பத்திரிக்கைகள் போன்ற எதுவும் இருக்கக்கூடாது முகம் கண்ணாடிக்கூட இருக்கக்கூடாது அப்படிப்பட்ட நிலையில் தாய் மொழி தொடர்பற்ற நிலையில் இரண்டு ஆண்டுகாலம் வைத்துவிட்டு பிறகு விடுதலையை பற்றி யோசிக்கலாம் அதற்குள் காஷ்மீரும் ஒரு கட்டுக்குள் வந்திருக்கும் [நாள்காட்டி கூட இருக்கக்கூடாது இன்று என்ன நாள் என்ன கிழமை என்று மட்டுமல்ல என்ன நேரம் என்று கூட தெரியாத நிலையில் வைத்திருத்தல் சிறந்தது ..நாட்டின் நலனுக்கு இன்றைக்கு மிக முக்கிய தேவை இதுதான் ]
Rate this:
Share this comment
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
15-அக்-201921:10:50 IST Report Abuse
sankaranarayanan பரூக்கின் மகள் சபியா மற்றும் சகோதரி சுரய்யா உள்ளிட்ட பல பெண்கள் போராட்டத்தில் ஈடுபடுவது எல்லாம் - அப்போ துள்ளலாம் (அப் (போது)- துல்லா) ஏனென்றால் அப்துல்லா உறவினர் - இப்போது துள்ள முடியாது - துள்ளினால் கிள்ளுவோம் கிள்ளினால் துள்ளுவோம் - உள்ளே பல காலம் போடுவோம்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X