காஷ்மீரில் நீண்ட காலத்திற்கு அமைதி: அமித்ஷா

Updated : அக் 15, 2019 | Added : அக் 15, 2019 | கருத்துகள் (10)
Share
Advertisement

குருகிராம்: 370வது பிரிவை ரத்து செய்ததன் மூலம் காஷ்மீரில் நீண்ட காலத்திற்கு அமைதி நிலவும் என அமித்ஷா தெரிவித்துள்ளார்.



latest tamil news



அரியானா மாநிலம் குருகிராமில், தேசிய பாதுகாப்பு படையின் 35வது ஆண்டுவிழா கொண்டாட்டம் நடந்தது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: ஜம்மு-காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு நீக்கி, மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் காஷ்மீர் பள்ளதாக்கில் பாக்., ஆதரவுடன் நடக்கும் பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்க உதவும்.


latest tamil news



பயங்கரவாதம் எந்தவகையில் வந்தாலும் அதை பாரபட்சமின்றி எதிர்க்க மத்திய அரசு உறுதியாக உள்ளது. இந்த இலக்கை அடைவதற்கு தேசிய பாதுகாப்பு படை முக்கிய துருப்பாகவும், கருவியாகவும் இருக்கும். பயங்கரவாதத்திற்கு எதிரான போரை தொடங்கியுள்ளோம். இந்த நடவடிக்கை ஜம்மு காஷ்மீரில் நீண்டகாலத்துக்கு அமைதியைக் கொண்டுவரும்.

பல ஆண்டுகளாக அண்டை நாடான பாக்., செய்து வந்த மறைமுக போர் மற்றும் பயங்கரவாத செயல்களுக்கு எதிராக, மோடி அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கை (370வது பிரிவு ரத்து), காஷ்மீரில் எப்போதும் நிலையான அமைதியை உறுதி செய்யும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
16-அக்-201910:15:12 IST Report Abuse
J.Isaac இப்பொழுது இவருக்குள் அமைதி இருக்கிறதா ?
Rate this:
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
15-அக்-201922:56:12 IST Report Abuse
Rafi இது ஒரு தொடர் கதை, 2024 இதே உச்சரிப்பை கேட்க கூடும். மக்களை வீட்டிலேயே அடைபட வைத்துவிட்டால் மயான அமைதிதான். வேலைக்கு சென்றால் வருமானம் கிடைக்கலாம், அதற்கு 144 மூலம் தடையாகிவிட்டது. உடல் நலம் பாதிக்கப்பட்டால் மறுத்த்துவ சிலவு செய்ய பொருளாதாரம் வழிவகுக்காமல் வீட்டிலேயே சமாதி ஆகிவிடக்கூடும். அதற்கு பெயர் தான் மயான அமைதி, அதற்கு தான் அரசு ராணுவ துணையுடன் வழிவகுத்து கொண்டிருக்கு. அங்குள்ள மக்கள் வேண்டாம் பூமி இருந்தால் போதும் என்று நினைக்கின்றார்கள் போலும், இந்த புதிய ஜனநாயக காவலர்கள்.
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
15-அக்-201918:36:30 IST Report Abuse
GMM குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் சலுகை நிறைந்த 370 சட்ட பிரிவு இந்தியாவில் இனி கூடாது. சலுகையின் தேவை பிறர் (வரி) உழைப்பு மூலம் அரசு பெரும். பாட்டனார், தந்தை, மகன், (பேரன்) வரை சலுகை இன்றி அரசுக்கு வரி செலுத்தும் குடும்பம் உண்டு. அவர்களுக்கு குல தொழில் உண்டு. கல்வி, மருத்துவம் வாழ்நாளில் தனியாரிடம் பெறுவது உண்டு. அவர்களால் குழப்பம் இல்லை. காங்கிரஸ் ஓட்டுக்கு சலுகை அறிமுகம். பிஜேபி நாட்டுக்கு சலுகை நீக்கம். உலக நாடுகள் இந்தியாவுடன் இணைந்து கலாசாரம் இணைந்த POK, நேபாளம், திபெத், பங்களாதேஷ் முதல் சுற்றில் இந்திய அமைதிக்கு, நிர்வாகம் சீர் செய்ய உதவ வேண்டும். சீனா ஒத்துழைக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X