அரசியல் செய்தி

தமிழ்நாடு

நான் முதல்வர் ஆனால் நேர்மையாக இருப்பேன்: கமல்

Updated : அக் 15, 2019 | Added : அக் 15, 2019 | கருத்துகள் (162)
Share
Advertisement
சென்னை: 'யார் முதல்வர் பதவியில் அமர்ந்தாலும் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்; நான் முதல்வர் ஆனால் நேர்மையாக நடந்து கொள்வேன்' என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.புத்தரும், கலாமும் ஒன்று:சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கமல் பேசியதாவது: நடிகர்கள் என்பவர்கள் சனி, ஞாயிற்று கிழமைகளில் வந்து செல்பவர்கள் தான். அப்துல் கலாமுக்கு
Kamal,kamal haasan,makkal needhi maiam,கமல்,கமல்ஹாசன்,மக்கள் நீதி மய்யம்,

சென்னை: 'யார் முதல்வர் பதவியில் அமர்ந்தாலும் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்; நான் முதல்வர் ஆனால் நேர்மையாக நடந்து கொள்வேன்' என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.


புத்தரும், கலாமும் ஒன்று:


சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கமல் பேசியதாவது: நடிகர்கள் என்பவர்கள் சனி, ஞாயிற்று கிழமைகளில் வந்து செல்பவர்கள் தான். அப்துல் கலாமுக்கு சமாதி கட்ட நாங்கள் வரவில்லை. அவரை அனைவரின் நெஞ்சிலும் கொண்டு செல்ல வேண்டும் என முயற்சி செய்து வருகிறோம். புத்தரும், அப்துல் கலாமும் ஒன்று தான். நாம் தான் வெவ்வேறாக நினைத்து பேசிக் கொண்டிருக்கிறோம். கலாம் அவர்களிடம், நான் 3 மணி நேரம் பேசியது என் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.


latest tamil news
சுத்தம் செய்ய வாருங்கள்:


கல்வியின் பின் மாணவர்கள் ஒரு மந்தையாக செல்லக்கூடாது. கற்பது என்பதை விட புரிந்து கொள்வது என்பது தான் கல்வி. மாணவர்கள் ஏன் அரசியலில் ஈடுபடாமல் இருக்கிறீர்கள். கலாம் கண்ட கனவை நனவாக்க, மாற்றத்தை நிகழ்த்த மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். நான் உங்களை வரவேற்கிறேன். குப்பை, சாக்கடை இருக்கும் இடத்தில் தான் சுத்தம் செய்ய வேண்டும். அது போல் தான் அரசியலும். மாணவர்கள் அரசியலில் வந்து சுத்தம் செய்ய வேண்டும். விவசாயம் சரியில்லை என்று கூறுவதைவிட முறையான பயிற்சி பெற்று விவசாயத்தை காக்க மாணவர்கள் முன்வர வேண்டும்.


நேர்மை:


நான் முதல்வர் ஆனவுடன் போடும் முதல் கையெழுத்தை விட, முதல்வர் பணியில் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதே நீண்ட கால தீர்வாக இருக்கும். யார் முதல்வர் பதவியில் இருந்தாலும் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (162)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chandra Sekaran VT - bengaluru,இந்தியா
21-அக்-201912:19:54 IST Report Abuse
Chandra Sekaran VT கமலஹாசன் அரசியல் வாழ்வு ஒரு முடிந்த கதை. இனியும் இந்தமனிதனுக்கு டெபாசிட் கூட கிடைக்காது.ஒரு காலத்திலே இந்த மனிதன் கருணாநிதியக்கூட பாராட்டியிருக்கிறான். கருணாநிதி ஒரு மகா பெரிய ஊழல் வாதியும் ஒழுக்கம் கெட்டவனும் அல்லவே.
Rate this:
Cancel
Saravanan Kumar - nellai ,இந்தியா
20-அக்-201914:20:35 IST Report Abuse
Saravanan Kumar sontha vaalkaiyil nermai illaatha neenkal arasiyalil nermaiyaaka iruben entru kooruvathu nalla nakaisuvaithaan. paavam appaavi tamil makkal
Rate this:
Cancel
Balaji - Khaithan,குவைத்
16-அக்-201914:30:47 IST Report Abuse
Balaji கமல் அவர்களின் சில கடந்த கால தவறுகள் தான் நம் முன் வந்து அவரை ஆதரிப்பதற்கு தடையாக இருக்கிறது.... இவரால் அரசியலில் எந்த அளவுக்கு வெற்றிபெற இயலும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறிதான்...... கமலுக்கு அரசியல் ஆசை வராமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்........... மற்றபடி கூத்தாடிக்கு அரசியல் எதற்கு என்று மற்ற அரசியல் தலைவர்கள் சொல்வதெல்லாம் அவர்களது பயத்தின் வெளிப்பாடு மட்டுமே.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X