பொது செய்தி

தமிழ்நாடு

தம்பதியிடம் கெடுபிடி; 2 போலீசார் இடமாற்றம்

Added : அக் 15, 2019 | கருத்துகள் (30)
Share
Advertisement
சிதம்பரம்: வாகன சோதனையின் போது, ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக, சிறப்பு, எஸ்.ஐ., மற்றும் போலீஸ்காரர் ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றப்பட்டனர்.கடலுார் மாவட்டம், சிதம்பரம் நகர போலீசார், கஞ்சித்தொட்டி பஸ் நிறுத்தம் அருகே, நேற்று (அக்.,14) மாலை, வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, புவனகிரியில் இருந்து, ஒரு தம்பதி, இரண்டு குழந்தைகளுடன் பைக்கில் வந்தனர். அவர்களை நிறுத்திய போலீசார்,
தம்பதியிடம் கெடுபிடி; 2 போலீசார் இடமாற்றம்

சிதம்பரம்: வாகன சோதனையின் போது, ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக, சிறப்பு, எஸ்.ஐ., மற்றும் போலீஸ்காரர் ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றப்பட்டனர்.

கடலுார் மாவட்டம், சிதம்பரம் நகர போலீசார், கஞ்சித்தொட்டி பஸ் நிறுத்தம் அருகே, நேற்று (அக்.,14) மாலை, வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, புவனகிரியில் இருந்து, ஒரு தம்பதி, இரண்டு குழந்தைகளுடன் பைக்கில் வந்தனர். அவர்களை நிறுத்திய போலீசார், ஆவணங்களை சரி பார்த்தனர். 'ஹெல்மெட்' உட்பட அனைத்தும் சரியாக இருந்தது. ஆயினும், நான்கு பேர் பயணம் செய்ததற்காக வழக்கு போடுவதாக போலீசார் கூறினர். இச்சம்பவம், சமூக வலைதளங்களில் பரவியது. போலீசாரின் செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில், சிறப்பு, எஸ்.ஐ., வேல்முருகன், போலீஸ்காரர் மரிய சார்லஸ் ஆகிய இருவரையும், பொதுமக்களிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக, ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம் செய்து, எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் இன்று உத்தரவிட்டார். இருவரும், சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் இருந்து உடனடியாக விடுவிக்கப்பட்டு, கடலுார் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Padmanaban Jayakrishnan - singapore,சிங்கப்பூர்
17-அக்-201908:09:01 IST Report Abuse
Padmanaban Jayakrishnan டாக்குமெண்ட் எல்லாம் போலி ,,,,மார்பிங் செய்யப்பட்டுள்ளது என்று ஒரு சாதாரண மனிதனை அந்த அளவு குழப்பி அவன் மனைவி மக்களை நடு தெருவில் நிற்க வைத்ததே பெரிய தவறு ....அந்த பெண்மணி அவ்ளோ மென்மையாக கெஞ்சியும் இவர் "வால்டர்" ரேஞ்சுக்கு பேசிட்டு இருக்காரு ...இதே கம்பீரம் எல்லாரிடமும் இவர் காட்டி இருக்க முடியுமா என்பதே கேள்வி ....
Rate this:
Cancel
Padmanaban Jayakrishnan - singapore,சிங்கப்பூர்
17-அக்-201908:05:24 IST Report Abuse
Padmanaban Jayakrishnan குடும்பத்தில் நான்கு பேர் இருந்தால் எல்லாரும் கார் வைத்திருக்க வேண்டும் ...அவரசரத்துக்கு கூட பிள்ளைகள் வண்டியில் பயணிக்க கூடாது . இரு சக்கர வாகனத்தில் இரண்டு பேர் தான் பயணிக்க வேண்டும் என தடாலடியாக இங்கே பலரும் கருத்து கந்தசாமியாக மாறி உள்ளனர் ....கூட ஒரு குழந்தை பயணித்தால் கூட ஆபத்து என்று கவலைப்படுகிறார்கள் ...மகிழ்ச்சி ...இது எல்லோருக்கும் பொருந்துமா ? அல்லது சாதாரண மக்களுக்கு மட்டுமே இந்த சட்டமா ? 36 பேர் பயணிக்கும் பேருந்தில் 60 பேர் வரை ஏற்றி செல்லும் மாநகர போக்குவரத்திற்கு இதில் சட்ட சலுகைகள் உண்டா ? அவர்கள் மீது நடவடிக்கை என்ன ? நீதிமன்றம் முதல் காவல்துறை வரை எல்லாருமே சாதாரண மனிதர்களிடம் மட்டுமே சட்டத்தை நீட்டுவது ஏன்? அந்த வீடியோவில் அந்த பாதிக்கப்பட்டவர் கேள்வி கேட்க கேட்க அந்த அதிகாரி புதுசாக புதுசாக டாக்குமெண்ட் கேட்கிறார் . இதே ஒரு நூறு ருபாய் நீட்டி இருந்தால் எந்த சட்டமும் பேசி இருக்க மாட்டார் பாவம் . அந்த அதிகாரி பேசும் திமிர்பேச்சு தான் இங்கே வைரலானது ...எல்லாமே ஒரிஜினல் வைத்திருக்க வேண்டும் என்பதெல்லாம் என்ன மாதிரியான சட்டம் ?
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
21-அக்-201919:27:04 IST Report Abuse
Malick Rajaசட்டம் ஒரு இருட்டறை . ஜாம்பவான்களுக்கு சட்டம் பொருந்தாது .. சாமான்யங்களுக்கு சட்டம் பொருந்தும் .. இவர்கள் இருவரையும் குறைந்தபட்சமாக 6.மாதமாவது தற்காலிக பணிநீக்கம் செய்திருக்கவேண்டும் அதுதான் நீதியாக இருக்கும்...
Rate this:
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
17-அக்-201905:32:20 IST Report Abuse
 nicolethomson பலரும் செய்தது சரி தவறு என்று கூறியுள்ளனர் , ஆனா கொஞ்சம் யோசிச்சு பாருங்க மரியா சார்லஸ் நடந்து கொண்ட விதமும் வேல்முருகன் நடந்த விதமும் என்று கூட பிரித்து பாருங்க , ஸ்கூல் வேன் என்று இருக்கையில் அதனை பயன்படுத்தியிருக்கலாம் இருசக்கர வாகன ஒட்டி அதனை செய்யவில்லை இப்படி நால்வர் இருசக்கர வாகனத்தில் செல்லுகையில் ஒரு குழியிலோ கல்லிலோ ஏறி இறங்கியிருந்த கடைசியில் உட்கார்ந்து இருக்கும் பெண்ணின் கதி? தவறு நேர்ந்தா பெரியாவாகனத்தின் மீது பழி போட்டு செல்லலாம் அல்லவா? அப்போதும் இந்த போலீசின் தலையை உருட்டலாம்? கடைசிவரை அந்த இருசக்கர வாகன ஒட்டி நாளைமுதல் பெரியவர் இருவர் மட்டுமே பயன்படுத்துவோம் என்று மன்னிப்பு கேட்டிருக்கலாம் அப்படி செய்ததை நான் பார்க்கவில்லை
Rate this:
தமிழன்டா - sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
17-அக்-201908:56:31 IST Report Abuse
தமிழன்டா , கைக்குழந்தையை வேன்ல அனுப்பிவிடனும்மாமில்ல , அத சொல்ல எந்த சட்டத்துக்கும் இடம் இல்ல. 55 ஏற்றக்கூடிய பேருந்துள எண்ணற்ற ஆட்களை, ரயில்ல சொல்லவே வேண்டாம் கால் வைக்க கூட இடம் இல்லாத அளவுக்கு அரசாங்கம் ஏற்றலாம் ஆனா தன் சொந்த தேவைக்கு தன் குழந்தைகளோட பைக்ல போக கூடாது . என்ன சட்டம் இது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X