தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு

Updated : அக் 15, 2019 | Added : அக் 15, 2019 | கருத்துகள் (5)
Advertisement
சென்னை : அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது.அக்., 27ல் தீபாவளி பண்டிகை நாடெங்கும் கொண்டாப்பட உள்ளது. தீபாவளி பண்டிகைக்காக தமிழக அரசு பொதுத்துறையின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத் தொகையை நிர்ணயம் செய்து அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் செய்திக்குறிப்பில்

சென்னை : அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது.latest tamil newsஅக்., 27ல் தீபாவளி பண்டிகை நாடெங்கும் கொண்டாப்பட உள்ளது. தீபாவளி பண்டிகைக்காக தமிழக அரசு பொதுத்துறையின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத் தொகையை நிர்ணயம் செய்து அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.


latest tamil newsதமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

* பொதுத்துறை அரசு ஊழியர்களுக்கு போனசாக 8.33 சதவீதமும் கருணைத் தொகையாக 11.37 சதவீதமும் வழங்கப்படும்.

* லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை ஊழியர்களுக்கு உபரி தொகையை கணக்கில் கொண்டு போனஸ் மற்றும் கருணை தொகையுடன், அடிப்படை ஊதியத்தில் 20 சதவீதம் வழங்கப்படும்.

* மின்வாரியம், போக்குவரத்து கழகம், நுகர்பொருள் வாணிபக் கழகம் ஊழியர்களுக்கும் , கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கும் 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும்.

* அரசு ரப்பர் கழகம், வனத்தோட்ட கழகம் மற்றும் சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கும் போனஸ் வழங்கப்படும்.

* லாபம் ஈட்டிய கூட்டுறவு சங்கங்களின் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 20 சதவீதமும், லாபம் ஈட்டாத கூட்டுறவு சங்கங்களின் (நஷ்டமடைந்த) ஊழியர்களுக்கு 10 சதவீதமும் போனஸ் வழங்கப்படும்.

* லாபம் ஈட்டிய குடிநீர் வடிகால் வாரியத்தில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவீதம் மற்றும் பாடநூல் கழகம், வீட்டுவசதி வாரியம், கல்வியியல் கழகம், கழிவுநீரேற்று கழக வாரியத்தின் ஊழியர்களுக்கு 10சதவீதமும் வழங்கப்படும்.


latest tamil news
* பிற கூட்டுற வுசங்க ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும். நிறுவனங்கள் ஒதுக்கும் உபரித்தொகைக்கு ஏற்ப 20 சதவீதம் மற்றும் 10 சதவீதம் என பிரித்து வழங்கப்படும்.

* நிரந்தர தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.8,400 மற்றும் அதிகபட்ச ஊதியம் ரூ.16,800 வரையும் வழங்கப்படும்.

* போனஸ் சட்டத்தின் கீழ் வராத தலைமை கூட்டுறவு ஊழியர்க்கும் மற்றும் மாவட்ட கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கும் தற்காலிக ஊதியமாக ரூ.3000 போனஸ் வழங்கப்படும்.

* தொடக்க கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு ரூ.2,400 போனஸ் வழங்கப்படும்.

* போனஸ் வழங்குவதன் மூலம் பொதுத்துறை ஊழியர்கள் 3,48,583 பேர் பயன்பெறுவர்.
இவ்வாறு தமிழக அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-அக்-201913:38:54 IST Report Abuse
ஆப்பு டாஸ்மாக் ஊழியர்களுக்கு எவ்ளோ போனஸ்? 100 பெர்சண்ட் குடுக்கலாம்.
Rate this:
Cancel
Divahar - tirunelveli,இந்தியா
16-அக்-201910:23:16 IST Report Abuse
Divahar தீபாவளி போனஸ் ஐ பொங்கல் போனஸ் ஆக மாற்ற வேண்டும் .
Rate this:
Cancel
Ivan -  ( Posted via: Dinamalar Android App )
16-அக்-201905:53:48 IST Report Abuse
Ivan Ivanunga luku sambalamaey athigam, ithula bonus vera ya.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X