பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : அக் 15, 2019
Share
Advertisement
அக்டோபர் 16, 1927குந்தர் கிராஸ்: ஜெர்மனியில், லாங்பியூர் நகரில், 1927, அக்டோபர், 16ல் பிறந்தார். இரண்டாம் உலகப் போர் துவங்கியதால், சிறு வயதிலேயே ராணுவத்தில் சேர்க்கப்பட்டார். 1944ல், அமெரிக்கப் படையால் போர்க் கைதியாக சிறை பிடிக்கப்பட்டவர், 1946ல், விடுதலையானார். நாடு திரும்பியவர், பண்ணை தொழிலாளியாக பணி புரிந்தார்; சிற்பி வேலை செய்தார்; அதில் சலிப்புற்றவர், எழுத்தின் மீது காதல்
 இதே நாளில் அன்று

அக்டோபர் 16, 1927
குந்தர் கிராஸ்: ஜெர்மனியில், லாங்பியூர் நகரில், 1927, அக்டோபர், 16ல் பிறந்தார். இரண்டாம் உலகப் போர் துவங்கியதால், சிறு வயதிலேயே ராணுவத்தில் சேர்க்கப்பட்டார். 1944ல், அமெரிக்கப் படையால் போர்க் கைதியாக சிறை பிடிக்கப்பட்டவர், 1946ல், விடுதலையானார். நாடு திரும்பியவர், பண்ணை தொழிலாளியாக பணி புரிந்தார்; சிற்பி வேலை செய்தார்; அதில் சலிப்புற்றவர், எழுத்தின் மீது காதல் கொண்டார்.

இவரது முதல் கவிதை தொகுதி, 1956ல், வெளியானது. அவர், 1959ல், 'தி டின் டிரம்' என்ற நாவலை வெளியிட்டார்; அதன்பின், அவர் புகழின் உச்சியில் அமர்ந்தார். தொடர்ந்து அவர் வெளியிட்ட, 'தி ரேட், தி பிளேண்டர்' ஆகிய இரு நுால்களும், அவருக்கு ஏராளமான விருதுகளையும், பட்டங்களையும் பெற்றுத் தந்தன. 1962ல், 'புக்கர்' பரிசை வென்ற இவர், 1999ல், இலக்கியத்திற்கான நோபல் பரிசையும் பெற்றார். 2015 ஏப்ரல், 13ல் காலமானார்.
குந்தர் கிராஸ் பிறந்த தினம் இன்று!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X